Published:Updated:

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்
பிரீமியம் ஸ்டோரி
“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

Published:Updated:
“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்
பிரீமியம் ஸ்டோரி
“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகிய அரசின் திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் பேராசிரியர் ஜெயராமன்மீது ஆட்சியாளர்கள் குறிவைத்துள்ளனர். ‘நதிகள் இணைப்புத் திட்டம் - ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்கிற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டதற்காக, தேசத்துரோக வழக்கு அவர் மீது பாய்ந்திருக்கிறது.

‘கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நதிநீர் இணைப்புத் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கிவருகிறது. இந்த இணைப்புத் திட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி, நதிகளை இணைத்துவிட்டு, ஆறுகளைப் பன்னாட்டு நிறுவனங்களிடமே ஒப்படைத்துவிடுவார்கள்; பிறகு, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை, பன்னாட்டு நிறுவனங்களிடம் பணம் கொடுத்து விவசாயிகள் வாங்கும் அவலம் உருவாகும்’ என்ற பொருள்பட அந்த நூலில் ஜெயராமன் எழுதியிருக்கிறார். இது, ஆட்சியாளர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. அதற்காக வழக்கும் பாய்ந்திருக்கிறது.

அரசை ஆத்திரமூட்டிய ஜெயராமன் யார்?

 நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கிடாரம்கொண்டான் சிற்றூரில் பிறந்தவர், ஜெயராமன். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் இளங்கலை வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டம்பெற்று, 1978-ல் ஏ.வி.சி கல்லூரியில் விரிவுரையாளராகப் சேர்ந்து, 33 ஆண்டுகள் பணியாற்றினார். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் சேர்ந்து பல மேடைகளில் பேசினார் ஜெயராமன்.  ‘மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு’, 2014 ஜனவரியில் ஜெயராமனால் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டுக்கான ‘விகடன் டாப் 10 மனிதர்கள்’ பட்டியலில் ஜெயராமன் பெயரும் இடம்பெற்றது. டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, மற்றும் கடலூர் மாவட்டங்களின் சில பகுதிகளில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு பரப்புரைப் பயணம், மீத்தேன் எதிர்ப்பு மாநாடுகள், விழிப்பு உணர்வு பிரசாரங்கள் என ஜெயராமன் தலைமையிலான குழு முன்னெடுத்தது.

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்டமைப்பினர், மீத்தேன் குழாய்கள் அமைக்கும் களங்களுக்கே சென்று போராட்டம் நடத்தி, இன்றுவரை அந்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, அருகில் இருந்த பள்ளியில் நான்கு பெண் குழந்தைகள் மயக்கம் அடைந்தனர். உடனே, கூட்டமைப்பினர் விரைந்து சென்று போராடி, குழாய் கட்டமைப்பதைத் தடுத்து நிறுத்தினர். அடியாமங்கலம்  கிராமத்தில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குழாய்களைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஒருநாள் முழுவதும் அங்கு தொடர் போராட்டம் நடத்தி குழாய்கள் அமைப்பதை ஜெயராமன் தலைமையிலான கூட்டமைப்பினர் தடுத்துநிறுத்தினர்.

பின்னர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மக்கள் இயக்கமாக மாறியது. கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்களே நேரடியாகப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கதிராமங்கலத்தில் 2017 ஜூன் 2-ம் தேதி, இரவோடு இரவாக மக்களை அப்புறப்படுத்தும் வேலையில் காவல்துறை ஈடுபட்டது. அப்போது, களத்தில் இருந்த ஜெயராமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை கைதுசெய்து சிறையிலடைத்தனர். அவர் சிறைவைக்கப்பட்டிருந்த ஐந்து நாள்களில், கதிராமங்கலத்தில் குழாய்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

“ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா!” - ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டிய நூல்

அடுத்த சில தினங்களில், அதே கதிராமங்கலத்தில் குழாயில் பழுது ஏற்பட்டு அதிலிருந்து கசிவு ஏற்பட்ட நிலையில், மக்கள் பெருந்திரளாகக் கூடிப் போராட்டம் நடத்தினார்கள். எந்தவித அசம்பாவிதமும் நேராத வகையில் அந்தப் போராட்டம் ஜெயராமனால் வடிவமைக்கப்பட்டது. கிராம மக்கள்மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஜெயராமனைக் கைதுசெய்தது போலீஸ். பல பிரிவுகளில் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 42 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 63 வயதாகும் ஜெயராமன், மார்க்ஸியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்.

 தமிழ்நாடு வரலாற்றுக் கூட்டமைப்பிலும் தென்னாட்டு வரலாற்றுக் கூட்டமைப்பிலும் ஈழம் மற்றும் தமிழ்த் தேசிய இன அடையாளம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் உள்பட நாடு முழுவதும் நடக்கிற பல முக்கியப் போராட்டங்கள் குறித்து ஜெயராமன் புத்தகங்கள் எழுதியுள்ளார். 2006-ல் அவர் எழுதிய ‘தமிழ்த் தேசியம் விரிவாக்கத் தளங்களும் செயலூக்கிகளும்’, 2012-ல் எழுதிய ‘ஈழம் இந்தியம் இனப்படுகொலை’ ஆகிய புத்தகங்கள் வெளியான காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டன. சூழலியல் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கிய பிறகு, ‘மீத்தேன் பேரழிவும் தமிழ்த் தேசிய இனத்தின் கனிம இறையாண்மையும்’, ‘மீத்தேன் அகதிகள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். சூழலியல் தொடர்பாக அவர் மூன்றாவதாக எழுதியதுதான், ‘நதிகள் இணைப்புத் திட்டம்: ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற நூல்.

அரசின் அச்சுறுத்தல்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், தன் போராட்டப் பாதையில் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயராமன்.

- ஐஷ்வர்யா, படம்: கே.குணசீலன்