Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

டிகர் கமல்ஹாசனின் மொபைல் அப்ளிகேஷனைத் தொடர்ந்து, நடிகர் விஷாலின் செயலியும் (App) அறிமுகம் ஆகிறது. ஏழைக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும், கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்ய, ‘V Shall’ என்ற செயலியை விஷால் உருவாக்கியிருக்கிறார். டிசம்பர் மாதம் முதல் இந்தச் செயலி நடைமுறைக்கு வருகிறது.

மிஸ்டர் மியாவ்

க்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, காயத்ரி ரகுராம் நடித்த படம், ‘சார்லி சாப்ளின்’. 2002-ல் வெளியான இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகவிருக்கிறது. பிரபுதேவா, நிக்கி கல்ராணி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க, சக்தி சிதம்பரம் படத்தை இயக்குகிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் பயோ-பிக் படமான ‘தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’யில் நடித்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நான்கு ஹீரோயின்கள். சாயிஷா, பிரியா பவானிசங்கர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்க, முக்கிய ஹீரோயினாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசியிருக்கிறார். கிராமத்துக் கதையாக உருவாகிறது படம்.

மிஸ்டர் மியாவ்

மியாவ் பதில்

‘‘திரைப்படத் தணிக்கைக் குழுவின் புதிய நிபந்தனைகளுக்கு, சினிமா பிரபலங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யத் தொடங்கியிருக்கிறார்களே?”

‘’ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரி போன்ற பல பாதிப்புகளில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு இந்தப் புதிய நிபந்தனைகள் என்பது, மற்றோர் அடி. ‘இனி, விண்ணப்பித்த 68 நாள்களுக்குப் பிறகே சென்சார் சான்றிதழ் வழங்கப்படும்’ என சென்சார் போர்டு அறிவித்திருக்கிறது. பரிசீலனைக்கு ஏழு நாள்கள், ஆய்வுக்குழு அமைக்க 15 நாள்கள், ஆய்வுக்குழுவின் அறிக்கையைத் தலைவருக்கு அனுப்ப 10 நாள்கள், விண்ணப்பதாரருக்கு உத்தரவுகளைத் தெரியப்படுத்த மூன்று நாள்கள், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்ய 14 நாள்கள், அதைத் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்க 14 நாள்கள், இறுதியாக சான்றிதழ் வழங்க 5 நாள்கள் என்கிறது, சென்சார் போர்டு. இதனால், தொழில் பாதிக்கும் என்கிறார்கள் திரைப் பிரபலங்கள். திரைப்பட நலனுக்காகவே இந்தப் புதிய நிபந்தனைகள் என்கிறது சென்சார் போர்டு. இது, என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது போகப்போகத்தான் தெரியும்.”