Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை-1.

ஜெயக்குமாரை சூப்பர் முதல்வர் என்கிறாரே ஸ்டாலின்?

உண்மைதான்! இந்த அமைச்சரவையில் சசிகலா குடும்பத்தையும் எதிர்த்துப் பேச தைரியம் உள்ளவர் அவர்தானே! இப்போது அல்ல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே சூப்பராக செயல் படத் தொடங்கியதால், நீக்கப்பட்டவரும் ஜெயக்குமார்தான். அப்போதே அப்படிச் செயல்பட்டவர், இப்போது சும்மா இருப்பாரா?

கழுகார் பதில்கள்!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

 எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் குறைகூறும் திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்றோர் தங்கள் சொத்துக் கணக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா?

இவர்கள் இருவரைப் பற்றி மட்டும் நீங்கள் கேட்பதற்கு என்ன காரணம்? இவர்களைப் பற்றி ஏதாவது தகவல் உங்களுக்குத் தெரியவந்துள்ளதா எனத் தெரியவில்லை. பொதுவாகவே, அரசியல் தலைவர்கள் ஆண்டுதோறும் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிடுவதுதான் சரியாக இருக்கும். எம்.பி., எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடுபவர்களும், அமைச்சர்களும்தான் சொத்துக் கணக்கைக் காட்டியாக வேண்டும் என்று இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் சொத்துக் கணக்கைக் காட்டுவது தேர்தல் ஆணையத்துக்கு. மற்ற அரசியல்வாதிகள் கணக்குக் காட்ட வேண்டியது மக்கள் மன்றத்துக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், சென்னை - 110.

‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஒற்றுமையாக இருந்தால்தான், ஆட்சி மூன்றரை ஆண்டுகள் நீடிக்கும்’ என்று மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளாரே?

நித்யானந்தாவின் ஆட்கள் செய்துவரும் காரியங்களைப் பார்த்தால், மதுரை ஆதீன மடமே இவரிடம்

கழுகார் பதில்கள்!

நீடிக்குமா எனத் தெரியவில்லையே.

ப.பாலா என்ற பாலசுப்பிரமணி, பாகாந்தம்.

தற்போது, பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழ்நாட்டில் எப்படி உள்ளது?

எதையாவது செய்து கட்சியை வளர்க்க நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு எதிரான செயல்களாகவே அவை அமைந்து விடுகின்றன. வருங்காலத்தில் அவர்கள் எப்படிச் செயல்படப்போகிறார்கள் என்பதை வைத்துதான், பி.ஜே.பி வளருமா, தேயுமா? என்பதைத் தீர்மானிக்க முடியும்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

எந்த அரசியல்வாதிக்குப் பயப்பட வேண்டும்?

புத்தியை நம்பாமல் கத்தியை நம்பும் அரசியல்வாதிக்குப் பயப்பட வேண்டும்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘மோடி அலை ஓய்ந்துவிட்டது, நாட்டை வழிநடத்தும் திறன் ராகுலுக்கு இருக்கிறது’ என்று பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கருத்துக் கூறியிருப்பது பற்றி?

மோடி அலை ஓய்ந்துவிட்டதா, நாட்டை வழிநடத்தும் திறன் ராகுலுக்கு இருக்கிறதா என்பதை மக்கள் தீர்ப்புக்குப் பிறகுதான் சொல்ல முடியும். அதற்கு முன்பாகவே சிவசேனா சொல்கிறது என்றால், பி.ஜே.பி-க்கும் இவர்களுக்கும் கூட்டணி முழுமையாக இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மோடி, தலைமைக்கு வந்ததிலிருந்தே பி.ஜே.பி-க்கும் சிவசேனாவுக்கும் ஒத்துப் போகவில்லை.

உமரி. பொ.கணேசன், மும்பை.

ஜெயலலிதாவை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் அசிங்கப்படுத்தி விட்டார்கள். இதற்குப் பிறகும் நினைவு மண்டபம் தேவையா?

அதுதானே. தேவையா?

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

எல்லா அமைச்சர்களும் தங்கள் சட்டை பாக்கெட்டுகளில் இரண்டு பேனாக்கள் வைத்திருப்பதன் ரகசியம் என்னவோ?  குறித்த காலத்தில் நிறைய ஃபைல்களில் கையெழுத்துப் போடுவதற்காக இருக்குமா?

காது குடைவதற்காகவும் இருக்கலாம் அல்லவா?

சோ.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, கொஞ்சம் மென்மையான போக்குடன் சசிகலாவும், தினகரனும் நடந்திருந்தால், இன்றைய அவல நிலை அவர்களின் குடும்பத்துக்கு வந்திருக்காதோ?

அரசியல் அதிகார மையத்தை சசிகலா குடும்பம் இன்னமும் இழந்துவிடவில்லை. பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரன் என்பதைத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இன்னமும் நிராகரிக்கவில்லை. ஜெயலலிதா தொடங்கிய ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ், இந்தக் குடும்பத்தினர் கையில்தான் இருக்கிறது. ஜெயலலிதா தொடங்கிய ஜெயா டி.வி-யும் இவர்களிடம்தான் இருக்கிறது. அமைச்சர்கள் சிலர் இன்னமும் இவர்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். சசிகலா பரோலில் வந்திருந்தபோது அமைச்சர்கள் சிலர், அவருடன் போனில் பேசினார்கள். ஒரு அமைச்சர் தன் மனைவியை அனுப்பி மரியாதை கொடுத்தார். இன்னமும் மிடாஸ் சரக்குகள், டாஸ்மாக் விற்பனைக்கு வாங்கப்படுகின்றன. பிறகு எப்படி அவல நிலையில் இருக்கிறது சசிகலா குடும்பம் என்று சொல்ல முடியும்?

தினகரனின் மிரட்டல் செயல்களால்தான் இவை அனைத்தும் தக்கவைக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை உடனே பதவி விலக வைத்து, சசிகலா முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் எடுக்கத் தயாரானதுதான் அந்தக் குடும்பம் செய்த முதல் தவறு. குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்கள் சேர்ந்து சசிகலாவைத் தூண்டி விட்டார்கள். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதற்குத் தயாரானதுதான் சசிகலாவின் தவறு. அதுதான் அந்தக் குடும்பத்தை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது.

வி.ஐ.பி கேள்வி!

கழுகார் பதில்கள்!

தமிழகத்தில் திராவிடப் பாரம்பர்யக் கொள்கைகள் எந்தளவுக்கு வேரூன்றியுள்ளன? வருங்காலத்தில், இதனுடைய தாக்கம் எவ்வளவு இருக்கும்?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் நெறிதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. மனிதர்களிடம் சாதி வேறுபாடு, ஏற்றத்தாழ்வுகள் இல்லை. மனித உயிர்களில் ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்ற பேதம் இல்லை என்பதைத்தான் அந்த இயக்கத்தினர் சொன்னார்கள். அதாவது இனபேதம், பால்பேதம் இல்லை. சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காகவே இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. 1920 முதல், வகுப்புவாரி உரிமை தமிழகத்தில் அமலில் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான சலுகைகள் தரப்பட்டன. தந்தையின் சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு என்ற சட்டமும் கொண்டுவரப் பட்டது. அதேபோல், மாநில உரிமைகளை இந்த இயக்கம் அதிகம் பேசியது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று முழங்கினார்கள். இவற்றை அடிப்படை இலக்குகளாகச் சொல்லலாம்.

 இந்த இலக்குகளை நோக்கிய பயணம் என்பது பெருமைக்குரியதாக இல்லை. நாட்டில், சாதி வன்மம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சாதிய ஒடுக்குமுறை, கிராமங்களில் இன்னமும் இருக்கிறது. இரட்டைக் குவளை முறை முதல் கெளரவக் கொலைகள் வரை தொடர்கின்றன. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைக் கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு முறை வளர்த்ததே தவிர, சமூக அந்தஸ்து முறையில் வளர்க்கவில்லை. இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல்தான், பெண்ணுக்கான சமூக இடமும் இன்னமும் பின்னோக்கித்தான் உள்ளது. அண்ணா காலத்தில் இருந்த மாநில உரிமைகள், காலப்போக்கில் குறைந்து இன்று தேய்ந்து விட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இருக்கும் உரிமைகள், மெள்ள மெள்ள மத்தியப் பட்டியலுக்குப் பறிபோகின்றன. இதுதான் இன்றைய யதார்த்தம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  

கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!