Published:Updated:

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

Published:Updated:
பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்புகளைப் பிடித்து அவற்றின் விஷத்தைச் சேகரிக்கும் பழங்குடி இருளர்கள், ஒவ்வொரு நாளும் மரணத்தின் வாசலுக்குச் சென்றுவருகிறார்கள். இவர்கள் சேகரிக்கும் விஷம்தான், பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க உதவுகிறது; பாம்புக் கடிக்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, பாம்பு விஷத்துக்கும் ஜி.எஸ்.டி வரியைப் பிடுங்குவது, நாகப்பாம்பின் விஷத்தைவிடக் கொடூரமானது.

வறுமையில் தவிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வழி ஒன்றைக் கண்டுபிடித்தார், இயற்கை ஆர்வலரும் பாம்பு ஆராய்ச்சியாளருமான ரோமுலஸ் விட்டேகர். அதுதான், பாம்புகளிடமிருந்து விஷம் எடுப்பது. பாம்புகளின் விஷம் மதிப்புமிக்க ஒரு பொருள். அதை, மிகக்குறைந்த அளவில் குதிரைகளின் உடலில் செலுத்தி, அதில் உருவாகும் எதிர்ப்புப் பொருள்களைச் சேகரிக்கிறார்கள். அதிலிருந்தே விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

பாம்புகளைக் கையாள்வதில் இருளர்கள் கில்லாடிகள். இவர்களை வைத்து காஞ்சிபுரம் மாவட்டம், வடநெமிலி கிராமத்தில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவுச் சங்கம் 1978-ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. இந்தச் சங்கத்தின் ஆண்டு வருமானம், சுமார் மூன்றரைக் கோடி ரூபாய். தமிழக அரசின் வனத்துறை அனுமதியுடன், இந்தச் சங்கம் இயங்கிவருகிறது.

 பெண்கள் உள்பட 367 பேர் இதன் உறுப்பினர்கள். விஷம் எடுப்பதற்காகப் பாம்புகளைப் பிடித்து வருவதுதான் இவர்களின் பணி. கண்ணாடி விரியன், கட்டு விரியன், நாகப்பாம்பு, சுருட்டை விரியன் என நான்கு இனங்களைச் சேர்ந்த பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 8,300 பாம்புகள் வரை பிடித்து விஷம் எடுப்பார்கள். பிறகு, அந்தப் பாம்புகள் வனத்தில் பாதுகாப்பாக விடப்படும். இதில் கிடைக்கும் வருமானம் முழுக்கவே இருளர் சமூகத்தின் நலனுக்குச் செலவிடப்படுகிறது.

பாம்புகளைப் பிடித்து வருபவர்களுக்கு, கண்ணாடி விரியன் மற்றும் நாகப்பாம்பு என்றால் 2,300 ரூபாய், கட்டுவிரியனுக்கு 850 ரூபாய், சுருட்டை விரியனுக்கு 300 ரூபாய் எனக் கட்டணம் வழங்கப்படும். முன்பு இதில் எந்தப் பிடித்தமும் செய்யப்படவில்லை. ஜூலை மாதம் முதல் இதற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

‘‘பல நாடுகளில், கூண்டுகளில் பாம்புகளை வளர்த்து விஷம் எடுக்கிறார்கள். ஆனால், இயற்கையான இடங்களில் வாழும் பாம்புகளின் விஷம்தான் மருந்து தயாரிக்கச் சிறந்தது என ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் அப்படிப் பாம்பு விஷம் எடுக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களுக்கும் இதை அனுப்புகிறோம். மற்ற தொழில்களைப்போல இது சுலபமில்லை. உயிரைப் பணயம் வைத்து விஷப் பாம்புகளைப் பிடிக்கிறோம். எங்களால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என்ற திருப்தியிலும், எங்கள் சமூகம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் இந்தச் சவால்களை எதிர்கொள்கிறோம். ஆனால், இதற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது அநியாயம். நினைத்தவுடன் பாம்புகளைப் பிடித்து வந்துவிட முடியாது. வயல்களிலும், காடுகளிலும் தேடிச்சென்று, சிலர் இரண்டு நாள்களில்கூட பிடிக்கலாம். சிலருக்கு 20 நாள்கள்கூட ஆகலாம். கணவனும் மனைவியும் இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டால்கூட, மாதம் 6,000 ரூபாய் கிடைத்தாலே அதிகம். மீதி நேரம் வேறு வேலைகளைச் செய்யவேண்டும். கிடைக்கும் குறைந்த வருமானத்துக்குக்கூட வரி விதித்திருப்பது வருத்தமாக இருக்கிறது’’ என வேதனையுடன் கூறுகிறார் சங்கத்தின் உறுப்பினர் செல்லப்பா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

‘‘இப்போது மாதம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி கட்ட வேண்டியிருக்கிறது. பாம்பு பிடித்து வருபவர்களுக்குக் கொடுக்கும் கட்டணத்தில்தான், இந்தத் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு கூறியது. அப்படிச் செய்தால் மக்கள் நஷ்டம் அடைவார்கள் என்பதால், இந்த வரியை எங்கள் சங்கத்தின் மொத்த வருமானத்திலிருந்துதான் கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிவருகிறோம். சங்கத்தின் வருமானம் முழுவதுமே இருளர்களின் நலனுக்காகவே செலவிடப்படுகிறது. அதில் வரி கட்டினால், இழப்பு எப்படியும் எங்கள் சமூகத்துக்குத்தானே?

 உயிரைக்கூட பொருட்படுத்தாமல் இந்தப் பணியைச் செய்கிறோம். பாம்புக்கடிக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், மருந்து நாங்கள்தானே தரவேண்டும்.  பிரச்னையை உணர்ந்து, எங்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து அரசு விலக்கு அளிக்கவேண்டும்’’ என்கிறார் சங்கத்தின் தலைவர் வரதன்.

பாம்பு விஷத்துக்கு ஜி.எஸ்.டி! - கொடுமையிலும் கொடுமை

சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பாம்பு விஷம் என்பது ஒரு மருந்துக்கான மூலப்பொருள். எனவே, 18 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கிறார்கள். இதற்கு முன்னர், வாட் வரி இருந்தது. மாநில அரசு அதிலிருந்து எங்களுக்கு விலக்கு கொடுத்தது. ஜி.எஸ்.டி என்பது மத்திய அரசுக்குக் கீழே வருவதால் நாங்கள் கட்டாயமாக வரி கட்ட வேண்டியிருக்கிறது. இது பெரிய சுமையாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்றனர்.

 பாம்புக் கடிக்கு மருந்தில்லாத அரசு மருத்துவமனைகள் இந்தியாவில் ஏராளம். அந்த மருந்தின் மூலப்பொருளுக்கு ஜி.எஸ்.டி விதிப்பது கொடுமையிலும் கொடுமை.

- ஞா.சுதாகர்

படங்கள்: அ.ஜார்ஜ்