Published:Updated:

ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

Published:Updated:
ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

1740-ம் ஆண்டு நடந்த குளச்சல் போர் பற்றிய புத்தகம் இது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகளுக்கும், டச்சு கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதல்தான் குளச்சல் போர். 1740 நவம்பர் 26-ம் நாள் குளச்சல் கடலிலிருந்து டச்சு கப்பல்கள், குளச்சலை நோக்கிச் செல்லத் தொடங்குகின்றன. 1741 ஆகஸ்ட் மாதம் 12-ம் நாள், மன்னர் மார்த்தாண்ட வர்மா வசம், குளச்சல் டச்சுக் கோட்டையின் சாவி ஒப்படைக்கப்படுகிறது. சுமார் பத்து மாத காலம் நடந்தது அந்தப் போர். அது ஏதோ, ஒரு வட்டாரத்தில் நடந்த போர் மட்டுமல்ல. பரந்துபட்ட அளவில் நடந்த நீண்ட போரின் ஒரு அங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். திருவிதாங்கூரின் பக்கமாக பிரிட்டிஷ் படைகள் இருந்தது உண்மைதான். ஆனால், முழுமையாகத் தோள் கொடுத்துப் போராடியவர்கள் மண்ணின் மைந்தர்களான மக்களே. மீனவ மக்களான முக்குவர்களுக்கு டச்சுக்காரர்கள் ஊதியம் தர முன்வந்தபோதும் அவர்களோடு ஒத்துழைக்க முன்வரவில்லை. ‘‘சகல சாதியரும் டச்சுப்படைக்கு எதிராகக் களம் கண்டனர் என்பதற்குக் குறிப்புகள் உள்ளன” எனச் சொல்கிறார் எஸ். ஆன்றனி கிளாரட். அதேநேரத்தில், கத்தோலிக்கம் தழுவியர்கள் முக்குவர்கள் என்றும், டச்சுக்காரர்கள் புரோட்டஸ்டன்ட்டுகள் என்றும், அதனால்தான் இருவரும் ஒன்று சேரவில்லை என்றும் சொல்வது இட்டுக்கட்டிய கருத்தாக்கமாக இருக்கிறது. முக்குவர்கள் தங்கள் மண்ணுக்காகப் போராடினார்கள். அதற்கு மதம் தடையாக இல்லை என்றே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜூ.வி. நூலகம்: பாடம் சொல்லும் குளச்சல்!

குளச்சலை டச்சுக்காரர்கள் பிடிக்க நினைக்க இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று திருவிதாங்கூர் மன்னரின் வருமானத்தை அடைப்பது. இரண்டாவது தெற்கில் கன்னியாகுமரி வரைக்கும் தங்களது எல்லையை விரிவுபடுத்துவது. பொதுவாகவே காலனியப்படையினர் கடல் எல்லைகளில்தான் குறியாக இருப்பார்கள். அதற்கான முஸ்தீபுகளை 1739 முதல் டச்சுப்படைகள் தொடங்கியதை ‘திருவிதாங்கூர் போர்’ என்பார்கள். அதுபற்றியும் இந்தப் புத்தகத்தில் விரிவாக இருக்கிறது. ஆனபிடி என்ற விஷயம் ஆச்சர்யம் தருகிறது. காட்டு யானைகளைப் பிடிக்கும் உரிமை மன்னருக்கு மட்டுமே உண்டு. அதில் தேசிக நாடு இளவரசர்களுக்கும் மார்த்தாண்ட வர்மாவுக்கும் ஏற்பட்ட மோதலுக்குள் டச்சுக்காரர்கள் தலையிடுகிறார்கள். அதிலிருந்துதான் மோதல் தொடங்குகிறது.எல்லா நேரங்களிலும் நம்மவர்கள் இடம்கொடுப்பதால் மட்டுமே அந்நியர்கள் உள்ளே நுழைகிறார்கள் என்ற பாடம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. குளச்சல் போர் வெற்றிக்குப் பின்னர்தான் மார்த்தாண்ட வர்மா, வலிமையான மன்னராக மாறினார்.

போரின் நியாய, அநியாயங்களைத் தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது இந்தப் புத்தகம்.

- புத்தகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குளச்சல் போர்

நகர்வு வெளியீட்டகம்,
11 - 166, அந்தோணியார் தெரு,
மேல்மிடாலம்,
உதயமார்த்தாண்டம் (அஞ்சல்),
கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புக்கு: 9443125406

விலை: ரூ.100