Published:Updated:

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்
பிரீமியம் ஸ்டோரி
கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

Published:Updated:
கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்
பிரீமியம் ஸ்டோரி
கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

டாஸ்மாக் சரக்கும், ஆற்றுமணலும்தான் ஆட்சியாளர்களின் பணம் கொழிக்கும் அட்சய பாத்திரம்.  ‘‘மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, பேரம் படியவில்லை என்பதால், தூத்துக்குடி துறைமுகத்திலேயே முடக்கிவைத்துள்ளார்கள்’’ என அரசுக்கு எதிராகக் கொடி பிடிக்கின்றன எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், நீதிமன்றமும் குட்டு வைத்திருக்கிறது.

 இந்த விவகாரம் குறித்து, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மணலை க்ளியரன்ஸ் செய்யும் பணியை மேற்கொள்ளும் ஜானகி எண்டர்பிரைசர்ஸ் ஷிப்பிங் கம்பெனியின் உரிமையாளர் பரமசிவனிடம் பேசினோம்.

‘‘தமிழக ஆற்றுமணலைவிட மலேசிய மணல் தரமானது. நம்முடைய மணலை, சலித்த பிறகுதான் பூச்சுமானத்துக்குப் பயன்படுத்த முடியும். மலேசிய மணலை அப்படியே பயன்படுத்தலாம். சுங்கத்துறையில் பதிவுசெய்துதான் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும். முறையாகப் பதிவு செய்யப்பட்டுதான், கப்பல் மூலம் அக்டோபர் 21-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் 54,433.840 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.7,67,86,346. இதற்கு ஜி.எஸ்.டி, சுங்கவரி என மொத்தம் ரூ.38,39,347 வரியாக கட்டியிருக்கோம். மணல் இறக்குமதியான அன்றே, 54 லாரிகளில் 864 டன் மணலை ஏற்றி விற்பனைக்காக அனுப்பினோம். இதில், ஆறு லாரிகளை ஆரல்வாய்மொழி செக்போஸ்டில் மடக்கிய போலீஸ், ‘இந்த மணலை எடுத்துக்கொண்டு போகக்கூடாது’ என்றார்கள். ‘ஏன்’ எனக் கேள்வி எழுப்பியபோது, ‘கனிமவளத் துறையிடம் போக்குவரத்துக்கான அனுமதி சான்றிதழ் பெறவில்லை’ என்று சொன்னார்கள். துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருளை எடுத்துப்போக எந்த அனுமதியும் வாங்க வேண்டியதில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்ததற்கான அத்தாட்சிக் கடிதம் இருந்தாலே போதும். அதுவும் ஜி.எஸ்.டி வந்த பிறகு,  இந்தியா முழுக்க எங்கே வேண்டுமென்றாலும் லாரிகளில் எடுத்துச்செல்லலாம்.

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறக்குமதி செய்யப்பட்ட இந்த மணலின் ஒரு டன் விலை 2,300 ரூபாய்தான். ஆனால், ஒரு டன் ஆற்றுமணலின் விலை ரூ.5,500.  இதனுடன் கமிஷன் தொகையெல்லாம் சேர்ந்து 20 மடங்கு வரையில் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. இந்த கமிஷன் தொகைதான் அரசியல்வாதிகள், அமைச்சர்களுக்கு வருமானம். மணல் மாஃபியாக்களின் தலையீட்டால்தான், இறக்குமதி  மணலை வெளியே எடுத்துவர தடைவிதித்துள்ளார்கள். அம்மா முதல்வராக இருந்திருந்தால், மணல் இறக்குமதியை ஊக்குவித்திருப்பார். எங்களுக்கு, மடியில் கனமில்லை. அதனால் பயமுமில்லை. முறையாக வரி செலுத்தியதற்கான எல்லா ஆவணங்களும் உள்ளன. அதனால்தான், தடையை உடைக்க இந்த மணலை இறக்குமதி செய்த  புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம்  ராமையா எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. நிச்சயம் நீதி கிடைக்கும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

தி.மு.க  மாநில  இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் தனியார் மணல் குவாரிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் சொன்னார். அதோடு, ‘தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டால் நிலத்தடிநீர் மட்டம் உயரும். மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்’ எனவும் சொன்னார். இப்படி சொன்னதெல்லாம் கண்துடைப்புதான்.தமிழகத்திலிருந்து ஆற்றுமணல் 70 சதவிகிதத்துக்கும்  மேல் வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறது.கடுமையான மணல் தட்டுப்பாடு காரணமாக, இருபது மடங்குவரையில் அதிகமாக விலை வைத்து விற்கிறார்கள். மலேசிய மணலின் விலை குறைவாக இருக்கிறது என அதனை மக்கள் வாங்க ஆரம்பித்துவிட்டால், மணல் குவாரி பிசினஸ் படுத்துவிடும். இதனால்,  கோடிக்கணக்கில் வருமானம் பாதிக்கப்படும். அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரைக்கும் கமிஷன் போகாது என்பதால்தான், மலேசிய மணலை முடக்கி வைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல. மலேசிய மணலின் மொத்த மதிப்பில் பாதி அளவுக்கு கமிஷன் பேசியிருக்கிறார்கள். ‘முறையாக வரி கட்டி இறக்குமதிசெய்த மணலை விற்பனை செய்ய, ஏன் கமிஷன் தரவேண்டும்’ எனப் புதுக்கோட்டை நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ‘மாற்று மணலைப் பயன்படுத்த வேண்டும்’ எனச் சொல்லும் முதல்வர், முடக்கி வைக்கப்பட்ட விலை குறைந்த மலேசிய மணலுக்கான தடையை நீக்காமல் மெளனம் காப்பது ஏன்?’’ என்றார் ஆவேசமாக.

 ஆரல்வாய்மொழி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமியிடம் பேசினோம். ‘‘எங்கிட்ட ஏன் பேசுறீங்க... எஸ்.பி-யிடம் பேசுங்க’’ என போனை துண்டித்தார்.

கமிஷன் இல்லையென்றால் கல்லா கட்டுவது எப்படி? - முடக்கப்பட்ட மலேசிய மணல்

கன்னியாகுமரி எஸ்.பி துரையிடம் பேசினோம். ‘‘மாவட்ட கனிமவளத் துறையிடமிருந்து அனுமதி பெற்ற நடைச்சீட்டு ஏதுமில்லை.  ஒருவேளை ஆற்று மணலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பறிமுதல் செய்துள்ளோம். வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்’’ என்றார்.

‘‘2014-ல், இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படிதான் உரிமம் பெற்று, உரிய வரிகட்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், துறைமுகத்திலிருந்து மணலை எடுத்துச் செல்லத் தடை விதித்திருப்பது ஏன்? மணல் ஏற்றிச் சென்ற லாரிகளைப் பறிமுதல் செய்திருப்பது சட்டவிரோதம்’’ எனச் சொல்லி,தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மக்களுக்காகத்தான் அரசாங்கம். தங்களுடைய பாக்கெட்களை நிரப்புவதற்காக அல்ல.

- இ.கார்த்திகேயன்

படங்கள்: ஏ.சிதம்பரம்