Published:Updated:

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”
பிரீமியம் ஸ்டோரி
“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

அறப்போர் இயக்கத்தினர் மீது அடக்குமுறை

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

அறப்போர் இயக்கத்தினர் மீது அடக்குமுறை

Published:Updated:
“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”
பிரீமியம் ஸ்டோரி
“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

சென்னை ராமாபுரம் பகுதியில் அறப்போர் இயக்கம் சார்பில் ‘காபி வித் எம்.எல்.ஏ’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதியின் பிரச்னைகள் பற்றிய பொது மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பெஞ்சமினும், அரசு அதிகாரிகளும் பதில் சொல்வார்கள் என சொல்லப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், அறப்போர் இயக்கத்தின் பொருளாளர் நக்கீரன் புகழேந்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது,  பா.ம.க-வைச் சேர்ந்த குமார் என்ற நபர் அங்கு வந்து வாக்குவாதம் செய்தார். அங்கிருந்து அந்த நபரை போலீஸார் அப்புறப்படுத்தினர். நிகழ்ச்சி முடிந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு, நவம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நக்கீரன் புகழேந்தியை போலீஸார் கைது செய்தனர். குமார் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

குமாருக்கும் நக்கீரன் புகழேந்திக்கும் என்ன பிரச்னை? இதுகுறித்து, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் கேட்டோம். ‘‘அக்டோபர் 28-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன், பா.ம.க-வைச் சேர்ந்த குமாரின் பெயரைச் சுட்டிக்காட்டி, நிலத்தை ஆக்கிரமித்துக் கோயில் கட்டிய விவகாரத்தைப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மேடைக்கு அருகே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் குமார். அவரை, போலீஸார் அப்புறப்படுத்தினர். பின்னர், போலீஸில் குமார் புகார் செய்துள்ளார். அதில், அவரைத் தாக்கியதாகவும், சாதிப் பெயரைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திட்டியதாகவும் கூறியுள்ளார். முழு நிகழ்ச்சியும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்போது என்ன நடந்து என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அமைச்சர் பெஞ்சமின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே போலீஸார் நக்கீரனைக் கைதுசெய்துள்ளனர். எங்களைத் தீவிரவாதிகளை நடத்துவதுபோல போலீஸ் நடத்துகிறது.’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

நக்கீரன் ஜாமீனில் வெளியில் வந்தார். அவரிடம் பேசினோம். அந்தப் பொதுக்கூட்டத்தில், ராமாபுரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளது. தற்போது, அருகே உள்ள சாலையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அந்தப் பகுதியில் 2,000 குடும்பங்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளன. அதற்குக் காரணம் கோயில் கமிட்டியில் உள்ள பா.ம.க-வைச் சேர்ந்த குமாரும், தி.மு.க-வைச் சேர்ந்த சிலரும்தான். அதை நான் பேசியபோது, மேடைக்கு அருகே வந்து வாக்குவாதத்தில் குமார் ஈடுபட்டார்.

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

தி.மு.க-வினர் போலீஸில் புகார் கொடுத்தனர். பொய் புகார் என்று தெரிந்ததால், அதன்மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஐந்து நாள்களுக்குப் பிறகு, குமார் கொடுத்த புகாரை வைத்து, போலீஸார் என்னைக் கைதுசெய்தனர். அமைச்சர் பெஞ்சமின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே குமார் புகார் கொடுத்துள்ளார். காரணம், அமைச்சர் பெஞ்சமினின் தவறுகளை, அறப்போர் இயக்கம் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, ‘காபி வித் எம்.எல்.ஏ’ நிகழ்ச்சிக்கு அமைச்சர் வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். நேரலையில் அழைத்தபோதும் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவருடைய அந்தச் செயல்பாடு குறித்த அந்தக் கூட்டத்தில் பேசினோம். எங்களுடைய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பேசியபோது, சென்னை மாநகராட்சியின் 350 கோடி மதிப்புள்ள சாலைத்திட்டம் என்ன ஆனது என்று பேசியிருந்தார். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, மேயராக சைதை துரைசாமியும், துணை மேயராக தற்போது அமைச்சராக உள்ள பெஞ்சமினும் இருந்தனர். அந்த 350 கோடி ரூபாய் சாலைத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்றால், அவரும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் அவருக்குத் தலைவலியைக் கொடுக்கும் என்ற கோபத்தில் எங்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். கைது நடவடிக்கையில் சட்டரீதியாக போலீஸார் நடந்து கொள்ளவில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு என்னுடைய வீட்டுக்கு வந்தவர்கள், காவல் சீருடையில் இல்லை. ‘விசாரணைக்கு வாருங்கள்’ என டாடா சுமோவில் ஏற்றினர். ‘அரசாங்க வாகனத்தில் ஏற்றினால் வருகிறேன். இல்லையென்றால் வரமாட்டேன் என்றேன். அதன் பின்னரே போலீஸ் ஜீப்பைக் கொண்டுவந்து ஏற்றினர். ராயலா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சென்ட்ரல் கிரைம் பிராஞ்சைச் சேர்ந்த ஆறு பேர் என்னை விசாரித்தனர். அமைச்சர் பெஞ்சமினையே கேள்வி எழுப்புகிறீர்களா? என மிரட்டினர்’’ என்றார்.

“அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறீர்களா?”

பெஞ்சமினின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டபோது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

பதில் சொல்ல வேண்டியவர்கள் போலீஸ் அதிகாரத்தைப் பயன்படுத்துவது சரியா?

- கே.புவனேஸ்வரி