Published:Updated:

“எத்தனை சேனல்கள் வந்தாலும் பத்திரிகை படிப்பது குறையவில்லை!” - தந்தி விழாவில் மோடி செய்தி!

“எத்தனை சேனல்கள் வந்தாலும் பத்திரிகை படிப்பது குறையவில்லை!” - தந்தி விழாவில் மோடி செய்தி!
பிரீமியம் ஸ்டோரி

‘வெல்க தமிழ்’ என்ற முழக்கத்தை நித்தமும் சொல்லி வெளியாகிவரும் தினத்தந்தி நாளிதழுக்கு, இது பவள விழா ஆண்டு. 1942-ம் ஆண்டு, சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட தினத்தந்தி, 17 பதிப்புகளுடன் வெளியாகி வருகிறது. நவம்பர் 6-ம் தேதி சென்னையில் நடந்த பவள விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது ஹைலைட்.

தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்ட மோடி, மூத்த தமிழறிஞர் விருதைக் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும், சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசை ‘இலக்கியத்தின் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி வெ.இறையன்புக்கும் வழங்கினார். ‘தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து, பிறகு தொழிலதிபராக உயர்ந்த வி.ஜி.பி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்குச் சாதனையாளர் விருதையும்  வழங்கினார்.

“எத்தனை சேனல்கள் வந்தாலும் பத்திரிகை படிப்பது குறையவில்லை!” - தந்தி விழாவில் மோடி செய்தி!

“தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ‘தினத்தந்தி’ செய்துள்ள சேவைகளுக்கும், சாதனைகளுக்கும் இந்த மேடையில் வீற்றுள்ள மேன்மைமிக்கவர்களே சான்று. தினத்தந்தி, யாருக்கும் சாதகமாக இல்லாமல், அல்லது பாரபட்சம் பார்க்காமல் நல்ல, சிறந்த பத்திரிகையாகத் திகழ்வதால்தான், நல்லெண்ணம் கொண்டவர்களும், உயர்ந்த இடத்தில் இருப்பவர்களும் இங்கே உள்ளனர். இது, எங்களது மன உறுதிக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இருக்கிறது” எனத் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார் தினத்தந்தியின் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பாமர மக்களிடையே பத்திரிகை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது தினத்தந்தி. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க அரசாங்கமும், பத்திரிகைத் துறையும் வண்டியின் இரு சக்கரங்கள்போல இணைந்து செயல்பட வேண்டும். மரம் தனக்காகப் பழம் தருவதில்லை; ஆறு தனக்காக ஓடுவதில்லை; காற்று தனக்காக வீசுவதில்லை; சூரியன் தனக்காக ஒளி வீசுவதில்லை; மழை தனக்காகப் பொழிவதில்லை; ஞானிகளும் தனக்காக வாழ்வதில்லை. அதுபோல அனைத்துப் பத்திரிகைகளும் தன்னலம் கருதாமல் நடுநிலைமையுடன் செயல்படவேண்டும்” என பஞ்ச் டயலாக்குகளை அள்ளிவீசினார். மேடையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உட்கார்ந்து இருந்தாலும், அவர்கள் உரையாற்றவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எத்தனை சேனல்கள் வந்தாலும் பத்திரிகை படிப்பது குறையவில்லை!” - தந்தி விழாவில் மோடி செய்தி!

இறுதியாக மோடி பேசினார். “மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதரும். மூத்த பத்திரிகையாளர் ஆர்.மோகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிகைத் துறையில் தினத்தந்தி முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று 24 மணி நேர டி.வி செய்தி சேனல்கள் உள்ளன. ஆனாலும், ஒரு கையில் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்துப் படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள்தான் மக்களிடம் குறிப்பாக அடித்தட்டு மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது பத்திரிகைகள் செய்திகளை மட்டும் தாங்கி வருவதில்லை. விமர்சனங்களையும் முன்வைக்கின்றன. இதில், கருத்து சுதந்திரத்தை, செய்தித் துறையின் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த கூடாது. அது குற்றமாகும். பொது நோக்கத்துடன் மக்களை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செய்திகளை வெளியிட வேண்டும். ஊடகங்கள் தங்களது நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களின் கவனம் அரசைச் சுற்றியே உள்ளன. அதே கவனம் 125 கோடி மக்களையும் சுற்றியிருக்க வேண்டும்.

பத்திரிகைகளைத் தனியார் துறைகள்தான் நடத்தி வருகின்றன. அதேநேரத்தில் அவர்கள் பொது மக்களுக்குச் சேவையாற்றுகிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் ஒரு உந்து கருவியாக செயல்பட்டு, மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும். தவறான தகவல்கள் வெளிவந்துவிடக்கூடாது. தவறான தகவல் பரவி விடக்கூடாது என்பதைத் தங்கள் சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். 2022-ம் ஆண்டில் ஊழல், சாதிப் பாகுபாடு, பயங்கரவாதம் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதைச் சாத்தியப்படுத்துவோம்’’ என்றார் மோடி விழாவில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் கைகொடுத்துச் சென்றார் மோடி.

- எஸ்.முத்துகிருஷ்ணன்