Published:Updated:

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

Published:Updated:
ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

சிகலா குடும்பத்தை, வருமானவரித் துறை சுற்றிவளைக்கக் காரணமென்ன என்பது பற்றி  வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம். ‘‘ஆறு மாதங்களுக்கும் மேலாக, ஜெயா தொலைக்காட்சியின் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தோம். அதில், 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஜெயா தொலைக்காட்சி தொடர்ந்து பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுவந்தது தெரிந்தது. அந்த நிறுவனங்களின் இயக்குநர்களாகவும் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். இதையடுத்து, அந்த நிறுவனங்களையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்தோம். தொடர்ந்து ஆய்வுசெய்ததில், அந்த நிறுவனங்கள் பலவும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது தெரிந்தது. சில நிறுவனங்களை ஆரம்பித்து, மர்மமாக மூடிவிட்டதும் தெரிய வந்தது. அதையடுத்தே, இந்த அதிரடி ரெய்டு’’ என்றனர். ‘அந்த நிறுவனங்கள் எவை, அவற்றின் இயக்குநர்கள் யார்?’ என விசாரித்ததில் நமக்குக் கிடைத்தவை.

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

சசிகலா

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

இளவரசி (சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

கிருஷ்ணப்ரியா (இளவரசியின் மகள்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

விவேக் (இளவரசியின் மகன்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

டாக்டர் வெங்கடேஷ் (சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

ஹேமா (டாக்டர் வெங்கடேஷின் மனைவி)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள் பிரபாவைத் திருமணம் செய்தவர்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

கார்த்திகேயன் கலியபெருமாள் (கிருஷ்ணப்பிரியாவின் கணவர்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

தங்கமணி (சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

குலோத்துங்கன் (சசிகலாவின் கணவர் நடராசனின் தங்கை ராஜலெட்சுமியின் மகன்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

சித்ரா தங்கப்பன் (தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்)

ரெய்டுக்குக் காரணம் இந்த நிறுவனங்கள்தான்!

திருநாராயணன் அருண் குமார் (டாக்டர் வெங்கடேஷின் குடும்ப நண்பர்)

சோதனைக்குக் காரணமான நிறுவனங்கள்


1. ஃபேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. பதிவு: 2008, முதலீடு: 100.11 கோடி ரூபாய். இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

2. ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. பதிவு: 2009, முதலீடு: 5.16 கோடி ரூபாய். இயக்குநர்கள்: குலோத்துங்கன், கார்த்திகேயன் கலியபெருமாள்.

3. சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. பதிவு: 2002, முதலீடு: 6 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு 5 லட்சம்). இயக்குநர்கள்:  டாக்டர் சிவக்குமார், சித்ரா தங்கப்பன்

4.
இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்டு ஃபர்மாசூடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், மூவரசம்பேட்டை, சென்னை. பதிவு: 1990, முதலீடு: 2 கோடி ரூபாய் (வெளி முதலீடு 1 கோடி ரூபாய்). இயக்குநர்கள்: சசிகலா, இளவரசி, குலோத்துங்கன்

5. ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், கிழக்கு அபிராமபுரம், சென்னை. பதிவு: 1993. முதலீடு: 26.5 லட்சம் ரூபாய் (வெளிமுதலீடு 25 லட்சம் ரூபாய்). இயக்குநர்கள்: சசிகலா, கிருஷ்ணப்ரியா.

6. ஜெயராமன் பிசினஸ் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. பதிவு: 2013, முதலீடு: 6 லட்ச ரூபாய் (வெளி முதலீடு 5லட்சம்ரூபாய்) ,இயக்குநர்கள்: கிருஷ்ணப்ரியா, தங்கமணி.

7. கே.பி.என்ஜின் காம்போனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை.

பதிவு: 2016, முதலீடு: 11 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு 10 லட்சம் ரூபாய்).

இயக்குநர்கள்: கிருஷ்ணப்ரியா, தங்கமணி, கணபதி சுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி.

8. ஜே.கே. ஆன்லைன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட், நுங்கம்பாக்கம், சென்னை. பதிவு: 2015, முதலீடு: 4 லட்ச ரூபாய் (வெளி முதலீடு 3 லட்சம் ரூபாய்). இயக்குநர்கள்: கிருஷ்ணப்ரியா, தங்கமணி.

9. ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், கிண்டி, சென்னை. பதிவு: 2005, முதலீடு: 14.17 கோடி ரூபாய் (வெளி முதலீடு ரூ.10 கோடி). இயக்குநர்கள்: கார்த்திகேயன் கலியபெருமாள், டாக்டர் சிவக்குமார்.

10. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட், படப்பை, காஞ்சிபுரம். மொத்த முதலீடு: 20 கோடி ரூபாய் (வெளி முதலீடு 16 கோடி ரூபாய்). இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

11.
காட்டேஜ் ஃபீல்டு ரிசார்ட் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. முதலீடு: 11 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு ரூ. 10 லட்சம்). இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

12. அவிரி ப்ராப்பர்டி பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. முதலீடு: 11 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு ரூ.10 லட்சம்).
இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

13. ஸ்ரீஹரிச்சந்தனா எஸ்டேட் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத், தெலங்கானா. பதிவு: 1995, மொத்த முதலீடு: 11.1 கோடி ரூபாய் (வெளி முதலீடு ரூ.11 கோடி).
இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

14.
சிக்னெட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், நுங்கம்பாக்கம், சென்னை. பதிவு: 2003. முதலீடு: 8 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு ரூ.7 லட்சம்). இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

15. கியூரியோ ஆட்டோ மார்க் பிரைவேட் லிமிடெட், தி.நகர், சென்னை. பதிவு: 2002. மொத்த முதலீடு: 6 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு ரூ.5 லட்சம்), இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

16. கஸானா ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட், புதுடெல்லி. பதிவு: 1996. மொத்த முதலீடு: 2 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு ரூ. 1 லட்சம்). இயக்குநர்கள்: டாக்டர்சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள்.

17. ராயப்பேட்டை கார்டியாக் சென்டர் பிரைவேட் லிமிடெட், கோபாலபுரம், சென்னை. பதிவு: 2011. மொத்த முதலீடு: 76 லட்சம் ரூபாய் (வெளி முதலீடு ரூ.75 லட்சம்). இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், ஹேமா வெங்கடேஷ், திருநாராயண் அருண்குமார் (டாக்டர் வெங்கடேஷின் நண்பர்)

18. லைஃப்மெட் ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட், கோபாலபுரம், சென்னை. பதிவு: 2011. மொத்த முதலீடு: 1.1  கோடி ரூபாய் (வெளி முதலீடு ரூ.1 கோடி). இயக்குநர்கள்: டாக்டர் சிவக்குமார், ஹேமா வெங்கடேஷ், திருநாராயண் அருண்குமார்.

19. மாவிஸ் சாட்காம் லிமிடெட் நிறுவனத்தின்கீழ் ஜெயா டி.வி பதிவு செய்யப் பட்டுள்ளது. 75% பங்குகள் மாவிஸ் சாட்காம் நிறுவனத்தின் பெயரில் உள்ளன. இவற்றில் 5-7% பங்குகளை ஜாஸ் சினிமாஸ் தன்வசம் வைத்துள்ளது.

20. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் முகவரியில் மாவிஸ் சாட்காம் 1998-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 22 கோடி ரூபாய். இயக்குநர்கள்: டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார், பிரபா, மருதப்பா பழனிவேலு.

ஜெயா டி.வி-க்கு மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிலிருந்து பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- ஜோ.ஸ்டாலின்