Published:Updated:

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

Published:Updated:
நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா
நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா
நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

ஸ்வாதி யார்?

பெரிய மனிதர்களுக்குப் பதவி கிடைத்தால், அவர்களின் வாரிசுகள் உயரத்துக்குப் போவார்கள். ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் மகள் ஸ்வாதிக்கு அப்படி நேரவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக இருந்தார் ஸ்வாதி. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் பணியாற்றிவந்த சீனியர். அப்பா ஜனாதிபதியானதால், இவரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்டனர், சிறப்பு பாதுகாப்புப் படையினர். ஜனாதிபதியின் மகள், விமானப் பணிப்பெண்ணாக வெளிநாடுகளுக்குப் போவது அவரின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதால், டெல்லி ஏர் இந்தியா அலுவலகத்திலேயே இருந்தபடி வேறு பணிகளைச் செய்கிறார் அவர். ‘‘ஸ்வாதி ரொம்ப எளிமையானவர். அவர் செக்யூரிட்டி அதிகாரிகளோடு வந்த அன்றுதான் எங்களுக்கு இந்த விஷயமே தெரியும். அப்பாவின் செல்வாக்கைச் சொல்லி எதையும் பெற நினைத்ததில்லை’’ என்கிறார்கள் சக ஊழியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

செல்போன் அக்கவுன்ட்டில் காஸ் மானியம்!

சு
மார் 23 லட்சம் வாடிக்கையாளர்கள், ‘கடந்த ஜூன் மாதத்திலிருந்து எங்கள் அக்கவுன்ட்டுக்கு காஸ் மானியம் வரவில்லை’ எனப் புகார் செய்தார்கள். விசாரித்தபோதுதான் தெரியவந்தது, ‘இவர்களுக்குச் செல்ல வேண்டிய காஸ் மானியம் சுமார் 47 கோடி ரூபாய் ஏர்டெல் அக்கவுன்ட்டுக்குப் போய்விட்டது’ என்பது. ‘காஸ் மானியம் எப்படி செல்போன் கம்பெனிக்குப் போகும்’ எனக் குழம்புகிறவர்களுக்காக இந்த விளக்கம்... ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ‘பேமென்ட் பேங்க்’ என்ற முறையில் செயல்படும் வங்கி ஒன்றை ஆரம்பித்துள்ளது. ‘செல்போன் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக வரும் வாடிக்கையாளர்கள், புதிய சிம் கார்டு வாங்க வருபவர்கள் என்று பலருக்கும் அவர்களின் அனுமதி இல்லாமலே தங்கள் பேமென்ட் பேங்கில் அக்கவுன்ட் ஆரம்பித்துவிட்டது ஏர்டெல். விதிப்படி, ஒரு வாடிக்கையாளரின் ஆதாரோடு இணைக்கப்பட்ட லேட்டஸ் வங்கிக் கணக்குக்கே அவரின் மானியம் போகும். அதன்படி இங்கே போய்விட்டது’ எனக் குற்றம் சாட்டுகின்றன, மானியத்தை வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள். ஆனால், ‘நாங்கள் யாருக்கும் அனுமதி இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்கவில்லை’ என மறுக்கிறது ஏர்டெல். இப்போது, ‘இந்த மானியப் பணத்தை பழைய வங்கிக் கணக்குகளுக்கே மாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

பாபர் மசூதி இடம் எனக்குச் சொந்தம்!

ர்ச்சைகளுக்கும் சர்ச்சை மனிதர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட், யாகூப் ஹபீபுதின் டூசி. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த 42 வயது மனிதர், பாபர் மசூதி இடத்துக்குச் சொந்தம் கொண்டாடுகிறார். ‘‘நான், மொகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதுர் ஷாவின் கொள்ளுப்பேத்தி லைலா உம்மானியின் மகன். மொகலாய வம்சத்தின் இளவரசன் என்பதை மரபணு ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபித்துள்ளேன். எனவே, இதை யார் எதிர்த்தாலும் கோர்ட் அவமதிப்பு வழக்குக்கு ஆளாக நேரிடும்’’ என ஆரம்பத்திலேயே எச்சரிக்கிறார்.  மொகலாய இளவரசர் போல உடையணிந்து சமீபத்தில் லக்னோ வந்தவர், ‘‘பாபர் மசூதி இடத்தைப் பராமரிக்கும் முத்தவல்லி பொறுப்பை முறைப்படி என்னிடம் உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் கொடுக்கவேண்டும். அதன்பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என நான் பார்த்துக்கொள்கிறேன். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இணக்கமான வகையில் ராமஜென்ம பூமி பிரச்னையும் தீர்க்கப்படும்” என்கிறார். இதுதொடர்பாக முறைப்படி கடிதம் எழுதியிருக்கும் இவர், ‘‘என்னிடம் எங்கள் குடும்ப இடத்தைத் தராவிட்டால் நீதிமன்றம் செல்வேன்’’ என்கிறார்.  ஏற்கெனவே 12 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ‘‘தாஜ்மகால் எங்கள் குடும்பச் சொத்து’’ எனக் கேட்டு வந்தவர்தான் இவர்.

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

லாலுவை வீழ்த்த மயில்!

ழிவாங்க வேண்டும் என நினைத்தால், 10 வருஷ பழைய மேட்டரைக்கூட தூசு தட்டி எடுக்கலாம். ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அப்படி ஒரு விவகாரத்தில்தான் சிக்கித் தவிக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் லாலு வீட்டுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடி மயில்கள் கொண்டுவரப்பட்டன. அவை குடியும் குடித்தனமுமாக இருந்ததில், இப்போது 10 மயில்களாகப் பெருகியுள்ளன. வனத்துறையின் அனுமதி இல்லாமல் மயில்களை வளர்ப்பது சட்டப்படிக் குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் வரை உள்ளே தள்ள முடியும். லாலு ஏதாவது அனுமதி வாங்கியுள்ளாரா எனப் பழைய ஃபைல்களைப் புரட்டித் தேடுகிறார்கள் அதிகாரிகள். ‘‘இவற்றை நாங்கள் வளர்க்கவில்லை. தோட்டத்தில் இஷ்டத்துக்குச் சுற்றித் திரிகின்றன. விரட்டினாலும், திரும்ப வந்துவிடுகின்றன. நாங்கள் என்ன செய்வது?’’ எனச் சொல்கிறார் லாலு. இது எப்படி இருக்கு?