Published:Updated:

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

ஜூ.வி லென்ஸ்

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

ஜூ.வி லென்ஸ்

Published:Updated:
சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?
பிரீமியம் ஸ்டோரி
சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?
சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

ந்தீப் நந்தூரி... சமீப காலமாக மீடியாவில் அடிபடும் பெயர். ஏழைகளுக்கு உதவ ‘அன்புச்சுவர்’ அமைத்து, இந்த நெல்லை கலெக்டர் வாங்கிய கொஞ்சமே கொஞ்சம் நல்ல பெயரைக் கிழித்துப்போட்டது கந்துவட்டி விவகாரம். இவரிடம் ஆறு முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால்தான், கலெக்டர் அலுவலகத்துக்கு மனைவி பிள்ளைகளுடன் வந்து தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்  இசக்கிமுத்து. நான்கு உயிர்கள் தீயில் வெந்த கந்துவட்டி கதறல்களாலும், பாலா கார்ட்டூனாலும் பார்புகழ் அடைந்த சந்தீப் நந்தூரியின் சொத்துகளில் புதைந்து கிடக்கும் வில்லங்கத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை! 

பணி விதிகளின்படி, ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ஒவ்வோர் ஆண்டும் தங்களின் அசையா சொத்துகள், வருமானம் மற்றும் கடன் விவரங்களை மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையிடம் தெரிவிக்க வேண்டும். ஓராண்டின் விவரங்களை அடுத்தாண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ‘ஆன்லைன்’ மூலமாகப் பதிவு செய்யலாம். இதைச் செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும். 

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படிச் செய்யப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தபோது, சந்தீப் நந்தூரி தாக்கல் செய்த விவரங்களில் நிறைய குழப்பங்கள் இருப்பதை, தகவல் அறியும் ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் கண்டுபிடித்து, நமது கவனத்துக்குக் கொண்டு வந்தார். அவற்றைத் திரட்டி ஆய்வு செய்தோம்.

சந்தீப் நந்தூரி 2009 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. 2010-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரையில் ஏழு ஆண்டுகளுக்குச் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். இதன் விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

• மைசூர், ஹுன்சூர் ரோட்டிலுள்ள பிரகதி நகர் லேஅவுட்டில் 2,400 சதுர அடி நிலம். இதை பெங்களூரு பிரகதி குரூப்பிடமிருந்து 2009-ம் ஆண்டு 2.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக 2010 சொத்துக் கணக்கு விவரத்தில் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் ரூபாய் விவரத்தைச் சொல்லி வந்தவர்,

‘3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன்’ என  2014-ம் ஆண்டு சொல்கிறார். வாங்கப்பட்டபோது 2.5 லட்சம் ரூபாயாக இருந்த நிலத்தின் மதிப்பு, அடுத்த ஆண்டே 7 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு வருடமும் நிலத்தின் மதிப்புக்   கூடிக்கொண்டேதான் போயிருக்க வேண்டும். ஆனால், 2013-ம் ஆண்டு வரையில் இதன் மதிப்பு வெறும் 7 லட்சம் ரூபாயிலேயே இருந்தது. 2014-ம் ஆண்டு 9 லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. ‘இந்தச் சொத்திலிருந்து எந்த வருமானமும் வரவில்லை’ எனச் சொல்லியிருக்கும் சந்தீப், 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இந்தச் சொத்து பற்றிய விவரத்தைக் குறிப்பிடவில்லை. ‘இது விற்கப்பட்டுவிட்டதா’ என்கிற விவரமும் இல்லை.

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

• விசாகப்பட்டினம் சின்ன வால்டையர் கிராமம், ‘லாசென் பே’யில் அகஸ்தியா அப்பார்ட்மென்ட்ஸில் அடுத்ததாக ஒரு சொத்தைக் காட்டுகிறார். 1800 சதுர அடி கொண்ட இது நிலமா, வீடா எனப் புரிந்துகொள்ள முடியாதபடிக்கு 2010-ம் ஆண்டு கணக்குத் தாக்கலில் குழப்பமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘சொத்து எந்த இடத்தில் இருக்கிறது’ என்கிற விவரத்தில் ‘Flat’ எனச் சொல்லிவிட்டு, ‘எந்த வகையான சொத்து’ என்ற இடத்தில் ‘Plot’ எனக் குறிப்பிடுகிறார். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் Flat என்றே இருக்கிறது. 

2009-ல் இது மதன்மோகன் என்பவரிடமிருந்து பரிசாகக் கிடைக்கிறது. அதனால், அதன் மதிப்பு எவ்வளவு எனத் தெரியவில்லை. இங்கு 30 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டியதாக 2016-ம் ஆண்டு சொத்துக் கணக்கு விவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு எப்படிப் பணம் வந்தது எனச்  சொல்லவில்லை. இதைப் பரிசாகக் கொடுத்த மதன்மோகன் யார் என்பதை 2012-ம் ஆண்டு வரை சொல்லவில்லை. 2013-ம் ஆண்டிலிருந்துதான் மதன்மோகன் தன் தந்தை எனக் குறிப்பிடுகிறார். ‘மதன்மோகன் 2009 ஜூலையில் நிலத்தைப் பரிசாகக் கொடுத்தார்’ என எல்லா ஆண்டுகளிலும் குறிப்பிட்டுவிட்டு, 2016-ம் ஆண்டில் மட்டும் ‘ஆகஸ்டில் (1.8.2009-ம் தேதி) பரிசாகக் கிடைத்தது’ என மாற்றிச் சொல்லியிருக்கிறார்.

2010-ல் இந்தச் சொத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். அடுத்தடுத்த ஆண்டுகளில் இது உயரவே இல்லை. ஒரு சொத்தின் மதிப்பு 7 ஆண்டுகளாக உயராமல் அப்படியே இருக்குமா?

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

இந்தச் சொத்திலிருந்து 2015-ம் ஆண்டு வரையில் எந்த வருமானமும் வரவில்லை. 2016-ல்தான் 1.50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது.

• விசாகப்பட்டினம், சாகர் நகரில் ஹுதா ஹவுசிங் காலனியில் 1,800 சதுர அடியில் தனி வீடு ஒன்றை மூன்றாவது சொத்தாகக் காட்டியிருக்கிறார் சந்தீப் நந்தூரி. இந்த வீடு, அவர் மனைவி அட்யாஷா நந்தூரி பெயரில் இருக்கிறது. ‘ஏ.கே.பரிதா என்பவர் பரிசாகக் கொடுத்தார்’ எனச் சொல்லியிருக்கிறார். எல்லா வருடங்களிலும் இப்படிச் சொல்லிவிட்டு 2015-ம் ஆண்டு ஏ.கே.பரிதாவை ‘மனைவியின் அப்பா’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

‘2009 ஆகஸ்ட் மாதம் ஏ.கே.பரிதா இதைக் கொடுத்தார்’ என எல்லா வருடங்களிலும் குறிப்பிட்டுவிட்டு, 2016 கணக்கு விவரத்தில் ‘ஜூலையில் (31.7.2009-ம் தேதி) கிடைத்தது’ எனச் சொல்லியிருக்கிறார்.

2009-ல் 25 லட்சத்தில் கட்டுமானம் எழுப்பியதாக 2016 கணக்கு விவரத்தில் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை அதற்கு முந்தைய வருடங்களில் ஏன் குறிப்பிடவில்லை?

இந்தச் சொத்தின் மதிப்பு 2010-ல் 60 லட்சம் எனக் குறிப்பிட்டவர், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே தொகையைச் சொல்லிவிட்டு 2016-ல் 50 லட்சம் எனக் குறைத்துச் சொல்லியிருக்கிறார்.

• சென்னை நெற்குன்றத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் 1,676 சதுர அடி வீடு இருப்பதாக 2015 மற்றும் 2016 சொத்துக் கணக்குகளில்  சொல்லியிருக்கிறார். இந்த வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது 2010-ம் ஆண்டு. 2010-ம் ஆண்டு ஒதுக்கீடான விஷயத்தை அடுத்தடுத்த ஆண்டு சொத்துக் கணக்கு விவரத்தில் குறிப்பிடாமல், 2015 மற்றும் 2016 - ம் ஆண்டு கணக்கில் சொன்னது ஏன்?

கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘சொத்து விவரத்தில் தவறான தகவல்களைத் தந்தது தொடர்பாக மத்திய உள்துறையிடமும் தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநரகத்திடமும் புகார் அளித்திருக்கிறேன். இப்படிக் கிடைக்கும் விவரங்களை வைத்துச் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களோடு, அது தொடர்பான ஆவணங்களின் பக்கங்களையும் வெளியிட வேண்டும். தவறான தகவல்களைத் தருகிறவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என லோக்பால் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தும், அது நடைமுறைக்கு வரவில்லை’’ என்றார்.

சொத்துக் கணக்கில் குழப்பங்கள்! - தகவல்களை மறைத்தாரா கலெக்டர்?

சந்தீப் நந்தூரியின் சொத்து விவரத்தை கோபாலகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டதும், அவருக்கு சந்தீப் நந்தூரியின் மனைவி ‘ஹாய் சார்’ என ஃபேஸ்புக் மெசஞ்சரில் தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், இதற்கு கோபாலகிருஷ்ணன் எந்தப் பதிலும் சொல்லவில்லை. முன்பின் தெரியாத கோபாலகிருஷ்ணனுக்கு அட்யாஷா நந்தூரி ஏன் தகவல் அனுப்ப வேண்டும்?

சந்தீப் நந்தூரியிடம் பேசினோம். ‘‘சொத்து மதிப்புக் கூடியிருப்பதில் என்ன தவறு இருக்கு?’’ என்றவர், நாம் அடுத்தடுத்தக் கேள்விகளை எழுப்பியபோது ‘‘இதுபற்றி உங்களிடம் விளக்கம் சொல்லத் தேவையில்லை’’ எனத் தொடர்பைத் துண்டித்தார். தொடர்ந்து முயன்றபோது நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி