Published:Updated:

“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”
பிரீமியம் ஸ்டோரி
“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது பலே புகார்

“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது பலே புகார்

Published:Updated:
“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”
பிரீமியம் ஸ்டோரி
“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

‘‘துணைவேந்தர் நமக்கு வேண்டப்பட்டவர். ரொம்ப நல்ல மனுஷன். அவசரப்பட்டு அவரைப் பற்றி எழுதிட வேணாம். கொஞ்சம் நேர்ல வந்தா பேசித் தீர்த்துக்கலாம்’’ என நம்மிடம் பேசியவர் ஒரு பி.ஜே.பி பிரமுகர். சில நிமிடங்களில் இன்னொரு பி.ஜே.பி நிர்வாகியும் அதே தோரணையில் பேசினார். ‘பணம் வாங்கிக்கொண்டு விதிகளை மீறி போஸ்ட்டிங் போடுகிறார்’ என்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதிமீது புகார்கள். அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் இப்படி போன் அழைப்புகள்.

துணைவேந்தர்மீது இப்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கும் பாய்ந்திருக்கிறது. புகார் கொடுத்த ஆராய்ச்சி மாணவியான ஸ்ரீலக்ஷ்மி பிரபாவிடம் பேசினோம். ‘‘பயோடெக்ல பி.ஹெச்.டி முடிச்சிருக்கேன். போன வருஷம் பாரதியார் யுனிவர்சிட்டில, அசிஸ்டென்ட் புரொபசர், அசோசியேட் புரொபசர், புரொபசர்னு மொத்தம் 74 வேலைகளுக்கு அறிவிப்பு கொடுத்தாங்க. பயோடெக்னாலஜி துறையில அசிஸ்டென்ட் புரொபசர் வேலைக்கு விண்ணப்பிச்சேன். அது, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியிடம். யுனிவர்சிட்டி பக்கத்துல உள்ள நவாவூர்தான் எனக்குச் சொந்த ஊர். யுனிவர்சிட்டிக்கு எங்க கணவர் வீட்ல இருந்து நிலம் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம நான் கலப்புத் திருமணம் பண்ணியிருக்கேன். இப்படி பல தகுதிகள் இருந்தும் அந்த வேலை எனக்கு வழங்கப்படலை.

“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”
“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அந்த வேலையை ஒரு ஆணுக்குக் கொடுத்திருக்காங்க. விதிகள் மீறப்பட்டிருக்கு. அதனால கோர்ட்டுக்குப் போனேன். என் மேல இருக்கிற கோபத்துல, யுனிவர்சிட்டியில 1995-லிருந்து தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் டிரைவரா வேலை பார்க்கும் என் கணவரை வேலையைவிட்டுத் தூக்கினாங்க. இதற்கிடையில என் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகள்ல தீவிரமானேன். அதுக்காக பல்கலைக்கழக மானியக் குழுவோட ஃபெல்லோஷிப்க்கு அப்ளை பண்ணினேன். இந்தியா முழுக்க உள்ள பி.ஹெச்.டி படிச்சவங்க இதுக்கு அப்ளை பண்ணுவாங்க. அதில தேர்வானா, நம்ம ஆராய்ச்சிக்கு மாசம் 45,000 ரூபாய் ஃபெல்லோஷிப் கொடுப்பாங்க. நாம ஏதாவது ஒரு யுனிவர்சிட்டில ஆராய்ச்சியைத் தொடரலாம். அதுல செலக்ட் ஆன நூறு பேர்ல நானும் ஒரு ஆள். அதுக்குப் பாரதியார் பல்கலையில என்னுடைய சான்றிதழ்களைச் சரிபார்த்துக் கையெழுத்துப் போட்டுக்கொடுக்க வேண்டிய என் துறையில கடைசி தேதி வரைக்கும் கொடுக்கவே இல்லை. போய்க் கேட்டதுக்கு, ‘உங்க ஃபைல்  துணைவேந்தர்கிட்ட இருந்து இங்க வரலை’னு சொல்லிட்டாங்க. அங்கக் கேட்டா, ‘அனுப்பியாச்சு’ன்னு சொன்னாங்க. ‘இந்தப் பொண்ணோட ஆராய்ச்சிக்கு எல்லா வசதிகளும் இந்த யுனிவர்சிட்டில இருக்கு. ஆராய்ச்சிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வோம்’னு முதல்ல கடிதம் கொடுத்தவங்க, கடைசியில ‘இங்க உங்க ஆராய்ச்சிக்கான எந்த வசதியும் இல்லை. நீங்க வேற யுனிவர்சிட்டிய பாத்துக்கோங்க’னு கையை விரிக்கிறாங்க. இவங்கள எதிர்த்து கேஸ் போட்டதால, திட்டமிட்டு ஆராய்ச்சியைக் கெடுக்கிறாங்க. மிகுந்த மன உளச்சலிலும் பொருளாதார நெருக்கடியிலும் இருக்கேன். எனக்கு என்ன ஆனாலும் அதற்குத் துணைவேந்தர் கணபதிதான் காரணம்” எனக் கண் கலங்கினார்.

“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

இன்னொரு ஆராய்ச்சி மாணவியான டாக்டர் அருண்மீனா, ‘‘போஸ்டிங்கில் பல முறைகேடுகள் நடந்திருக்கு. கணபதி துணைவேந்தர் ஆகுறதுக்கு உதவி செஞ்ச பலருடைய உறவினர்களுக்குத்தான் போஸ்டிங் போட்டிருக்கார். பல விதிகளை மீறியிருக்கார். சுற்றுச்சூழல் அறிவியல் துறையில, பல் மருத்துவம் படிச்சவரை நியமிச்சிருக்காங்க. லட்சங்கள்ல வாங்கியிருக்காங்க. நான் பயோ இன்ஃபர்மேட்டிக் டிபார்ட்மென்டுக்கு விண்ணப்பிச்சிருந்தேன். எனக்குக் கிடைக்க வேண்டிய வேலையை, தகுதியே இல்லாத இன்னொருத்தருக்குக் கொடுத்திருக்காங்க. அவர் வெச்சதுதான் இங்க சட்டம். ‘எட்டுக் கோடி கொடுத்திருக்கேன். என்னை மீறி எதுவும் நடக்காது’னு ஸ்டூடன்ட்ஸ்கிட்ட சொல்றாராம். சி.பி.ஐ விசாரணை வெச்சா பல உண்மைகள் வெளியே வரும்’’ என்கிறார் ஆவேசமாக.

“எட்டுக் கோடி கொடுத்திருக்கேன்... என்னை மீறி எதுவும் நடக்காது!”

குற்றச்சாட்டுகள் தொடர்பாக துணைவேந்தர் கணபதியிடம் பேசினோம். ‘‘அனைத்து நியமனங்களும் முறைப்படிதான் நடந்துள்ளன. அவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அபத்தமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஸ்ரீலக்ஷ்மிபிரபா ஃபெல்லோஷிப்புக்குத் தகுதியானவரா என்பதில் சிக்கல் இருக்கிறது. யு.ஜி.சி-க்கு கடிதம் அனுப்பி, பதிலுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

இதைத் தொடர்ந்துதான் நமக்கு போன் அழைப்புகள் வரத்தொடங்கின.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்