Published:Updated:

யார் வைத்த ரேகை! - ஜெ. மரணத்தில் சந்தேகம் கிளப்பும் டாக்டர்

யார் வைத்த ரேகை! - ஜெ. மரணத்தில் சந்தேகம் கிளப்பும் டாக்டர்
பிரீமியம் ஸ்டோரி

‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சின்னம் பெறுவதற்காக அ.தி.மு.க வேட்பாளர் கொடுத்த படிவத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகைமீது சந்தேகமுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் தி.மு.க மருத்துவ அணியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் சரவணன். வழக்கு விசாரணை பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், ‘ஜெயலலிதா கைரேகையே வைக்கவில்லை. யாரோ வைத்த கைரேகைக்கு டாக்டர் பாலாஜி சான்று கையெழுத்து போட்டுள்ளார்’ என்று மற்றொரு வழக்கைப் போடுவதற்குத் தயாராகி வருகிறார் சரவணன்.

யார் வைத்த ரேகை! - ஜெ. மரணத்தில் சந்தேகம் கிளப்பும் டாக்டர்

அவரிடம் பேசினோம். ‘‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளுக்கும் ஏராளமான முரண்பாடுகள். அதனால், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி, பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ், சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கைரேகைக்குச் சான்றளித்த டாக்டர் பாலாஜி, அமைச்சர் விஜயபாஸ்கர், மதுசூதனன், பொன்னையன், சிகிச்சை அளித்த டாக்டர்கள்... என அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். டாக்டர் என்ற முறையில் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுள்ளேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் வைத்த ரேகை! - ஜெ. மரணத்தில் சந்தேகம் கிளப்பும் டாக்டர்

டாக்டர் பாலாஜி, ‘ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கச் சென்றபோது அவருடன் சசிகலா மட்டும் இருந்தார்... வேறு யாருமில்லை’ என முதலில் சொன்னார். அடுத்த விசாரணையில், ‘சசிகலா உடன் இல்லை... டியூட்டி டாக்டர் மட்டும் இருந்தார். ஜெயலலிதாவுக்குச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது’ என்று மாற்றிக் கூறினார்.

ஜெயலலிதாவின் கைரேகையை ஓய்வுபெற்ற  கைரேகை நிபுணரிடம் கொடுத்து ஆய்வுசெய்தேன். அவர், ‘இந்தக் கைரேகையில் உயிரோட்டம் இல்லை, அது ஜெயலலிதாவின் கைரேகைதான் என்பதில் சந்தேகம் உள்ளது’ என்றார். தமிழகக் காவல் துறையினர் பின்பற்றும் ‘கைரேகை கைடு’, எப்படியெல்லாம் போலி மற்றும் ஃபோர்ஜரி கைரேகைகள் இருக்கும் என்பதை வரையறுத்துள்ளது. அந்த விதிகளின்படி இந்தக் கைரேகையை ஆய்வுசெய்து பார்த்துவிட்டோம். அதனால்தான் ‘இது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல’ என்கிறேன். ஏற்கெனவே ஜெயலலிதா ஏதாவது பத்திரங்களில் வைத்துள்ள கைரேகையையும் இந்தப் படிவத்திலுள்ள கைரேகையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பது என் கோரிக்கை. இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்பேன். ஒரு முதல்வர் தன் கடைசிக்காலத்தில் எந்த நிலையில் இருந்தார் என்பது உலகுக்குத் தெரிந்தாக வேண்டும். அதற்காக விரைவில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளேன்” என்றார் சரவணன்.

- செ.சல்மான்
படம்:ஈ.ஜெ.நந்தகுமார்