Published:Updated:

ராமஜெயம் கொலை வழக்கு... விசாரணையைத் தடுத்த பெரிய சக்தி!

ராமஜெயம் கொலை வழக்கு... விசாரணையைத் தடுத்த பெரிய சக்தி!
பிரீமியம் ஸ்டோரி

ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பது அவரது சகோதரரான தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை நிம்மதி அடைய வைத்துள்ளது. ராமஜெயம் கொல்லப்பட்ட பிறகு, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்து வந்தார் நேரு. அன்றைய தினம் ஊரில் இருக்கவே மாட்டார். ஆனால், கடந்த 9-ம் தேதியன்று  நேருவின் ஆதரவாளர்கள் அவரது பிறந்த  நாளைக் கொண்டாடி திருச்சியை அதகளப்படுத்தினர். காலையில் குரு ஹோட்டல் டிபன், மதியம் ஹக்கீம் பிரியாணி எனத் தன்னை வாழ்த்தியவர்களுக்கு விருந்து வைத்தார் நேரு. 

‘‘ராமஜெயம் கொலை வழக்கை இதுவரை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். மேலும் இந்த வழக்கில், விசாரணை அடுத்த கட்டத்துக்குப் போகக்கூடாது என ஏதோ ஒரு பெரிய சக்தி தடுத்து வந்தது. இனி அப்படியான முட்டுக்கட்டைகள் இருக்காது” என்கிறார்கள் நேருவின் ஆதரவாளர்கள்.

‘ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என லதா ராமஜெயம், கடந்த 2014 டிசம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 13 முறை அவகாசம் வாங்கியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். கடந்த 7-ம் தேதி, நீதிபதி பஷீர் அகமது இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார்.

ராமஜெயம் கொலை வழக்கு... விசாரணையைத் தடுத்த பெரிய சக்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமஜெயம் கொலை நடந்ததும் அப்போதைய உதவி கமிஷனர்களான ஜெயச்சந்திரன், மாதவன், சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோடிலிங்கம், மரகதம் ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படைகள் குறித்தே சர்ச்சை எழுந்தன. திவாகரனின் சம்பந்தி ஜெயச்சந்திரன், கன்ட்ரோல் ரூம் ஏ.சி-யாக இருந்தவர். ஏ.சி மாதவன், நேரு மற்றும் ராமஜெயம் ஆகியோர்மீது அடுத்தடுத்து நில அபகரிப்பு வழக்குகள் போட்டுக் கைதுசெய்யக் காரணமாக இருந்தவர். இதுபோன்ற அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணையில் பல விஷயங்களைத் தவறவிட்டனர். ராமஜெயம் உறவினர்களை மிரட்டிப் பணம் பறித்ததாகவும் சில தனிப்படை அதிகாரிகள்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ராமஜெயம் கொலை வழக்கு... விசாரணையைத் தடுத்த பெரிய சக்தி!

சாட்சிகளுக்கு நெருக்கடி தந்து மாற்றிச் சொல்ல வைத்தது, பிரேதப் பரிசோதனை அறிக்கை சர்ச்சை என எல்லாவற்றையும் சி.பி.ஐ உடைக்குமா... க்ளைமாக்ஸை நெருங்குமா? சி.பி.ஐ-யிடம்தான் இருக்கிறது பதில்.

- சி.ய.ஆனந்தகுமார்