Published:Updated:

வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

Published:Updated:
வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

நீதிமன்றம் கட்அவுட்களுக்குத் தடை விதித்ததால், நெல்லை தப்பித்தது. ஆனாலும், நவம்பர் 12-ம் தேதி வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி முடித்தார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜலெட்சுமியிடம்தான் விழாவை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முக்கிய நிர்வாகிகள் சிலரே அமைச்சரின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையாடினார்கள். கட்டாய வசூலில் சொற்பத் தொகை மட்டுமே செலவழித்தார்கள்.

எடப்பாடியும் பன்னீர்செல்வமும் இணைந்து மாதங்கள் கடந்தாலும், தொண்டர்கள் மட்டும் இணைந்தபாடில்லை. இரு அணியினரும் தனித்தனியாகவே பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். ஓர் அணியினர் வைத்திருந்த வரவேற்பு பேனர்களில் இன்னொரு அணியினரின் பெயரோ, படமோ இடம்பெறவில்லை. எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ இன்பதுரை வைத்திருந்த ஃப்ளெக்ஸ்களில், அவரது பெயர் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. கிழிக்கப்பட்ட இடத்தில் அவரது பெயரை ஒட்டிச் சமாளித்தார்கள். நெல்லை எம்.பி பிரபாகரன் வைத்த ஃப்ளெக்ஸ்களும் கிழிந்து தொங்கின.

வசூல்... கோஷ்டி... போராட்டங்கள்... எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வில்லங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லை போலீஸார் அடுத்தடுத்து செய்த தவறுகள், எம்.ஜி.ஆர் விழா ஏற்பாடுகளை நெருக்கடியில் தள்ளிவிட்டன. மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ மையம் தொடர்பான செய்தி வெளியிட்டதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள்மீது போடப்பட்ட வழக்கைக் கைவிடுவதாக அதிகாரிகள் ஏற்கெனவே உறுதியளித்திருந்தனர். ஆனால், பணகுடி காவல்துறை, செய்தியாளர் ஜெகனைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. போலீஸ் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்ததால் நெல்லை பத்திரிகையாளர்கள் கொந்தளித்தனர். ‘முதல்வர் பங்கேற்கும் விழாவில் கறுப்புக் கொடியணிந்து செய்தி சேகரிக்கச் செல்வோம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றினர். விபரீதத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.

மற்றொரு பக்கம், வழக்கறிஞர்களுடனும் பிரச்னை செய்திருந்தது போலீஸ். வள்ளியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணியை போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் காலை உடைத்தனர். (12-11-2017 ஜூ.வி-யில் கவர் ஸ்டோரியாக இது வெளிவந்தது.) இந்தச் சம்பவத்துக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களில் இறங்கினர். விழா மைதானத்துக்கு எதிரேதான் நீதிமன்றம் இருக்கிறது. ‘விழாவுக்கு வரும் முதல்வரைக் கறுப்புக் கொடியுடன் முற்றுகையிடுவோம்’ என வழக்கறிஞர்கள் அதிரடியாக அறிவித்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஜூ.வி-யில் வெளியான கட்டுரையும், வழக்கறிஞர்களின் போராட்டமும் முதல்வரின் கவனத்துக்குப் போக.. செம்மணி தாக்குதலுக்குக் காரணமான டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். ஆனாலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சப்-கலெக்டர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கறிஞர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும், போலீஸ் படையைக் குவித்தே விழாவை நடத்தி முடித்தார்கள். விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘‘ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுகிறார், நடக்கிறார், ஓடுகிறார், சாலையோர டீக்கடையில் டீ குடித்துப் பார்க்கிறார். நாங்க டீக்கடையே நடத்தியவங்க. எங்ககிட்டேயேவா?’’ என ஸ்டாலினைக் கலாய்த்தார்.

எடப்பாடி பழனிசாமி, ‘‘அம்மாவின் அரசைக் குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதன் மூலம் அவர்கள் தங்களுடைய இருப்பை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். மக்கள்மீது அக்கறை இருந்தால் குறை சொல்வதை நிறுத்திவிட்டு மக்கள் பணியாற்றுங்கள்’’ என்றார்.

அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, அ.தி.மு.க விழாவாகவே நடந்து முடிந்தது!

- ஆண்டனிராஜ்

போஸ்டர்களைக் கிழிக்க ஸ்பெஷல் டீம்!

வி
ழாவுக்கு இரு நாள்களுக்கு முன்பாக நெல்லை மாநகர மாவட்ட தி.மு.க முன்னாள் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மாலைராஜா, ‘கும்பி எரியுது! குடல் வெந்து சாகுது! எடப்பாடி அரசே, விழா ஒரு கேடா!’ எனக் கேட்கும் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டினார்.

பதற்றமான மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும், ‘மாலைராஜா மீது வழக்குப் போட்டுக் கைது செய்யலாமா?’ என ஆலோசித்தனர். இருக்கும் பிரச்னைகளில் இன்னொன்று வேண்டாம் என, திட்டத்தைக் கைவிட்டார்கள். ஆயுதப்படை போலீஸாரைக் கொண்ட தனி டீம் அமைத்து, இந்த போஸ்டர்களை ஒன்றுவிடாமல் கிழித்தார்கள்.