Published:Updated:

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

Published:Updated:
சிக்கியவர்களும் தப்பியவர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

மெகா ரெய்டில் சசிகலா குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. சொல்லப்போனால், அவர்கள் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், இந்த ரெய்டின்போது, சம்பந்தமே இல்லாத சில இடங்களைப் புரட்டிப்போட்டுத் தேடியது வருமானவரித் துறை. யார் அவர்கள்... எதற்காக அவர்கள் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்?

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!
சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ் ஆன ராவணன்!

சசிகலாவின் ஆசியோடு 2001 முதல் 12 ஆண்டுகள் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குடன் வலம் வந்தவர் ராவணன். சசிகலாவின் சித்தப்பா மருமகனான இவர் சொல்வதுதான் கொங்கு மண்டல அ.தி.மு.க-வில் சட்டமாக இருந்தது. கொடநாடு எஸ்டேட், கர்ஸன் எஸ்டேட் உள்பட கொங்கு மண்டலத்தில் உள்ள சொத்துகள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆனால், ரெய்டில் இவர் சிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவால்தான், வருமானவரிச் சோதனையிலிருந்து ராவணன் தப்பினாராம். இது தொடர்பாக விசாரித்தபோது, ‘‘2011-ல், இவர் பார்வைபட்டு அமைச்சரானவர்களில் முக்கியமானவர்கள் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர். இப்போதும் தொடரும் இவர்களின் நெருக்கம்தான் ராவணனைக் காப்பாற்றியது’’ என்றார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

அ.தி.மு.க சீனியர்களோ, ‘‘ராவணன் இப்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பு. அவரிடம் சோதனை நடத்துவது அவசியமற்றது’’ என்றனர்.

எம்.எல்.ஏ தப்பினார்... உதவியாளர் சிக்கினார்!

தமிழகம் முழுக்க ரெய்டு தொடங்கியதற்கு மறுநாள், தேனி கம்பம் நகரிலுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனின் அலுவலக உதவியாளர் கனகராஜ் வீட்டில் சோதனை போடப்பட்டது. கம்பம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகேயுள்ள ஒரு வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்குக் குடியிருக்கிறார் கனகராஜ். வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், கனகராஜை ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டிலிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே 10 நிமிட விசாரிப்புக்குப் பிறகு, மீண்டும் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார் கனகராஜ். மாலை 3.15 மணிக்குத் தொடங்கிய சோதனை, இரவு 9.30 மணி வரை நீடித்தது.

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

மிடாஸிலிருந்து நகைக்கடைக்கு...

சசிகலா குடும்ப ரெய்டுகளின் ஓர் அங்கமாக, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடையிலும், அதன் கிளைகள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களிலும் நான்கு நாள்கள் சோதனைகள் நடந்தன. இந்த நகைக்கடை நிறுவனம், புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான மஞ்சக்குப்பத்தில் ‘ஓஷன் ஸ்ப்ரே’ என்ற பெயரில் சுமார் 200 கோடி ரூபாயில் சொகுசு ரிசார்ட்ஸைக் கட்டியது. இதில் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால், கடும் நஷ்டத்தைச் சந்தித்தது நிறுவனம். இந்த ரிசார்ட்ஸ்,  மிடாஸ் நிறுவன பிரமுகர் ஒருவரின் பெயரில் கைமாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதை மோப்பம் பிடித்துதான் குறி வைத்துள்ளனர்.

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

ஜோதிடர் போர்வையில் தரகர்!

கடலூர் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் மூன்று நாள்களாக சோதனை நடந்தது. அவ்வளவாக வெளியே தெரியாத மனிதர், இந்த ரெய்டால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். பல முக்கியப் புள்ளிகளுக்கு இவர்தான் ஆஸ்தான ஜோதிடர். இவர், பங்குச்சந்தை தரகு மற்றும் ரியல் எஸ்டேட் தரகு ஆகியவற்றிலும் ஈடுபட்டுவருபவர். இவரை தினகரனுக்கு அறிமுகப்படுத்தியவர், அமைச்சர் எம்.சி.சம்பத். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரு கோயிலைக் கட்டினார் தினகரன். ‘இது வேண்டாம். சிறைவாசத்துக்கு வழிவகுக்கும்’ என்றார் ஜோதிடர் சந்திரசேகர். அவர் பேச்சை மீறியதால், சிறைக்குப் போனார் தினகரன். அதன்பிறகு தினகரன், இவரைக் கேட்டே பல முடிவுகள் எடுக்கிறாராம்.

சமீபத்தில், பல சொத்துகள் கைமாறியதில், சந்திரசேகரின் பங்கு இருப்பதாக வருமானவரித் துறை சந்தேகிக்கிறது.  ஒரு நகைக்கடைக் குழுமத்துக்குச் சொந்தமான சொகுசு ரிசார்ட்ஸ், சசிகலா குடும்பத்தினருக்குக் கைமாறியதில் இவர் பங்கு என்ன என்பதைத்தான் விசாரித்தார்களாம்.  

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

ராஜநடை போட்ட ராஜேஸ்வரன்!

தஞ்சையில் சசிகலா உறவுகளுக்கு அப்பால், ரெய்டில் சிக்கிய ஒரே நபர் ராஜேஸ்வரன். இவர் வீட்டில் இரண்டு நாள்கள் சோதனை நடைபெற்றது. டாக்டர் வெங்கடேஷின் பள்ளிக்கால நண்பர் இவர். சசிகலா குடும்ப நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக நின்று எல்லா வேலைகளையும் செய்வார். ‘‘அமைச்சர்கள் பலரிடம், ‘தான் சசிகலா குடும்பத்துக்கு உறவினர்’ எனச் சொல்லியே பல காரியங்களை சாதித்துள்ளார்’’ என்கிறார்கள். கவுன்சிலராக இருந்தவர்தான் என்றாலும், அமைச்சர் தோரணையில் நிர்வாகிகளிடம் அதட்டலாகவே பேசுவாராம்.

தினகரன் தஞ்சாவூர் வந்தால், அவருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது இவர்தான். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோதும், பிறகு தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியிலும் கர்நாடகாவின் குடகிலும் தங்க வைக்கப்பட்டிருந்தபோதும் அவர்களைக் ‘கவனித்து’க் கொண்டவர்களில் இவர் முக்கியமானவர். இவருடைய வீட்டில் சிக்கிய சில ஆவணங்கள், சசிகலா குடும்பத்துக்குப் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

உதவிய உதயகுமார்!

உதயகுமார், மன்னார்குடியில் பிரபல வழக்கறிஞர். அமைச்சர் காமராஜின் ஒன்றுவிட்ட அக்கா மகன். காமராஜ், திவாகரனுக்கு எதிரணியில் இருக்கிறார். ஆனாலும், மன்னார்குடி திவாகரன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்தபோது, உதயகுமார் வீட்டிலும் நுழைந்தனர். அதாவது எடப்பாடி அணியைச் சேர்ந்தவர் வீட்டிலேயே ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. மன்னார்குடியில் முக்கியப் புள்ளிகள் சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும் இருந்தால், உதயகுமாரிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். ஆவணங்களைச் சரிபார்ப்பதில் இவர் கில்லாடி. அதுதொடர்பாகவே, உதயகுமாரிடம் விசாரணை நடந்ததாம்.

இவர் போலவே ரெய்டில் சிக்கிய இன்னொருவர், பொன் வாசுகி ராம். அமைச்சர் காமராஜின் தீவிர ஆதரவாளர். அமைச்சர் தொடர்பான அரசு கான்ட்ராக்ட் வேலைகளை இவர்தான் செய்துவருகிறார். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருக்கும் இவர் வீட்டில், கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நேரத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திவாகரனும் அமைச்சர் காமராஜும் எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும், ‘இருவருக்கும் ரகசிய நெருக்கம் இருக்கிறதோ’ என்ற சந்தேகத்தை இந்த ரெய்டு ஏற்படுத்திவிட்டது. அடுத்து காமராஜும் குறி வைக்கப்படலாம்.

- ஜூ.வி. டீம், படங்கள்: கே.கார்த்திகேயன், கே.குணசீலன், அ.முத்துகுமார்