Published:Updated:

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

ஆ.பழனியப்பன்

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

ஆ.பழனியப்பன்

Published:Updated:
நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!
நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!
நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!
நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. நித்யானந்தா: நடிகை வீடியோவால் உலகப் புகழ்பெற்றாலும், தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லையே என ஆதங்கத்தில் தவிக்கிறார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்தை வளைத்து உள்ளே நுழைய முயன்றார். ஆரம்பத்தில் மயங்கிய ஆதீனம், இப்போது உஷாராகி உள்ளேவிட மறுக்கிறார். இதுதொடர்பான வழக்கில், ‘நான்தான் 293-வது ஆதீனம்’ என நித்யானந்தா உரிமை கொண்டாடினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‘‘கோர்ட்டுக்கே பொய்யான தகவல் கொடுத்த நித்யானந்தாமீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?’’ என்று கேட்டு மிரள வைத்திருக்கிறார். சொந்த ஊரான திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க பவளக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றார். அங்கும் எதிர்ப்பு கிளம்பவே, தமிழ்நாட்டில் தங்கி ஆன்மிக பரிசோதனை செய்யும் வாய்ப்பு இவருக்கு வாய்க்கவில்லை.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

2. ஷிவ் முரத் த்விவேதி: மற்ற சாமியார்கள் பாலியல் வழக்கில் சிக்குவார்கள். இவருக்குத் தொழிலே அதுதான். டெல்லியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துகொண்டிருந்த த்விவேதி, போலீஸில் சிக்கினார். ஜாமீனில் வெளிவந்ததும் தலைமறைவாகி, உத்தரப்பிரதேசத்தின் சித்திரகூட் நகருக்குச் சென்று ஆசிரமம் ஆரம்பித்தார். பகலில் சாமியார். இரவில் பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என அவதாரம் எடுத்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ் இவரைக் கைது செய்தது. சமீபத்தில் வெளியில் வந்த இவர், பணமோசடி வழக்கில் மீண்டும் உள்ளே போயிருக்கிறார்.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

3 . ராதே மா:  தேகம் முழுவதும் தங்க, வைர ஆபரணங்களால் இழைக்கப்பட்டு பக்திப்பழமாகக் காட்சிதருவது இவரது ஸ்டைல். இவரது மஃப்டி டிரெஸ், மினி ஸ்கர்ட். மகாராஷ்ட்ராவில் புகழ்பெற்ற ராதே மாவின் இயற்பெயர் சுக்விந்தர் கவுர். ஆரம்பத்தில் டெய்லராக இருந்தவர், திடீரென தெய்வ அவதாரமெடுத்தார். இந்தி சினிமா குத்துப்பாடல்களுக்குக் கெட்டஆட்டம் போடுவது இவருக்குப் பிரியமான ஒன்று. அந்த ஆட்டங்கள், சமூக வலைதளங்களில் செம வைரல். தன் சீடர் ஒருவரை செக்ஸ் உறவுக்கு அழைத்தார், கூட்டுதியானம்போல, ‘செக்ஸ் பார்ட்டி’கள் நடத்துவார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் இவர்மீது உண்டு.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

4. சாரதி பாபா:  ‘கண்ணனின் அவதாரம்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சாரதி பாபா, பக்கா மேக்கப்புடன் கண்ணனைப் போலவே காட்சியளிப்பார். விபூதியை வரவழைப்பது, தன் காலிலிருந்து தேனை வரவழைப்பது எனச் சித்து வேலைகளால் ஒடிசா முழுக்கப் பிரபலமானார். தன்னைக் கண்ணனாக நினைத்துக்கொண்டு, இளம்பெண்களைக் கோபியர்களாக சேவை செய்யச் சொன்னார். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஜீன்ஸ், டி ஷர்ட்டில் மது, மாது என உல்லாசமாக இருந்தபோது, கேமராவில் சிக்கினார்.  மோசடி, குற்றச்சதி உள்பட பல பிரிவுகளில் கைதான இந்தக் கிருஷ்ணர், இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

5. சுவாமி சடாச்சாரி: ‘‘என் கண்பார்வை பட்டாலே பச்சை மரம்கூட பற்றியெரியும்’’ என சவால் விட்ட இந்தச் சாமியார், நான்கு பிரதமர்கள், இரண்டு ஜனாதிபதிகளுக்கு அறிமுகமானவர். தன் ஆசிரமத்தை பாலியல் தொழில் செய்யும் இடமாக மாற்றி, பல பிசினஸ் புள்ளிகளை அந்தரங்கமான தருணத்தில் படமெடுத்து, மிரட்டி பணம் சம்பாதித்தவர். சொத்துக்காக மனைவியையே கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

6. குர்மீத் ராம் ரஹீம் சிங்: உஜ்ஜைனியில் சமீபத்தில் நடந்த கழுதைச் சந்தையில், குர்மீத் ராம் ரஹீம், ஹனிப்ரீத் என்ற பெயர்கள் சூட்டப்பட்ட இரு கழுதைகள், 11,000 ரூபாய்க்கு ஏலம் போயின. ‘தேரா சச்சா சௌதா’-வின் தலைவரான குர்மீத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கழுதைகளுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார், அவற்றின் ஓனர். இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளே போயிருக்கிறார் குர்மீத். ரோல்ஸ்ராய்ஸ் கார், ராக் இசை, சினிமா, கொலை, பாலியல் பலாத்காரம், ஆகியவை இவரது பொழுதுபோக்கு. இரு கொலை வழக்குகளை சி.பி.ஐ விசாரித்துவருகிறது.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

7.  ஆசாரம் பாபு: ‘வளர்ச்சியின் மாடல்’ ஆக விளங்கும் குஜராத்தில், ஆடம்பரமான ஆசிரமத்தில் செம ஜாலியாக வாழ்ந்துவந்த இந்தக் கிழட்டுச் சாமியார், தன் பேத்தி வயதுள்ள ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இவரின் குருகுலப் பள்ளியில் படித்த சிறுவர்களை நரபலி கொடுத்ததாக வழக்கு உள்ளது. பி.ஜே.பி அரசும், காங்கிரஸ் அரசும், இவருக்கு நிலங்களை வாரிவழங்கி, ஆன்மிகச் சேவையாற்றின. உடன்பிறந்த சகோதரியைப் பாலியல் பலாத்காரம் செய்த இழிபிறவி இவர்.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

8. ராம்பால்: ‘புனித கபீர்தாசரின் மறுபிறவி’ என அறிவித்துக்கொண்ட ராம்பாலுக்கு, அரியானாவில் உள்ள அவரது பிரமாண்ட ஆசிரமம், பல மர்மங்கள் நிறைந்த கோட்டை. அங்குதான், பாலியல் பலாத்காரம் முதல் அனைத்து அட்டகாசங்களையும் அரங்கேற்றினார். 12 பக்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்து சிக்கினார். அந்த வழக்குகளை, சாட்சிகளை மிரட்டி ஒன்றுமில்லாமல் ஆக்கினார். ஆயுதங்கள் தாங்கிய ராம்பாலின் சீடர்களோடு துணை ராணுவப்படையினரும், 1,000 கமாண்டோக்களும், போர் நடத்தி, அவரைக் கைதுசெய்தனர். தேசத்துரோக வழக்கில், இப்போது சிறையில் இருக்கிறார்.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

9.   நாராயண் சாய்: அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை இது. ஆசாரம் பாபுவின் அருமை மகன். சூரத் பெண் ஒருவர் இவர்மீது பாலியல் பலாத்காரப் புகார் கொடுக்க, கைதானார் நாராயண் சாய். அதன் பின், ‘ஆசிரமப் பக்தைகள் எட்டு பேருடன் எனக்கு உறவு இருந்தது’ என வாக்குமூலம் கொடுத்தார். இந்த வழக்குகளைக் காலிசெய்ய பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இன்னொரு வழக்கிலும் சிக்கினார். ‘நம்மிடமே டீல் பேசுகிறாரே’ என இவரது சொத்து மதிப்பை விசாரித்த குஜராத் போலீஸ் அதிர்ந்துபோனது. 5,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருக்கிறார் சாய்.

நான் கடவுள் - டாப் 10 மோசடி சாமியார்கள்!

10.  சந்தோஷ் மாதவன்: கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அமிர்த சைதன்யாவுக்கு, சிறுமிகளுடன் பாலியல் வல்லுறவு கொள்வது, அதை வீடியோ எடுப்பது என்றால் இஷ்டம். ஜோதிடராக இருந்த மாதவன், பிறகு புகழ்பெற்ற சாமியாராக மாறினார். சாந்தி தீர்த்தம் என்ற ஆடம்பர ஆசிரமத்தை நிறுவினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளெல்லாம் அவரைத் தேடிவந்தனர். புலித்தோல் வர்த்தகம், ரியல் எஸ்டேட் மோசடி, ஆறு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது என அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.