Published:Updated:

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?
பிரீமியம் ஸ்டோரி
ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

Published:Updated:
ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?
பிரீமியம் ஸ்டோரி
ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

சில ஆண்டுகளுக்கு முன்பு... திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் கிராமத்துக்கு  காரில் வந்து இறங்கிய நீதிபதி ஒருவர், ‘‘இந்த ஊரில் சாய்மாதா எங்கே இருக்கிறார்?’’ என்று கேட்க, அதைக்கேட்டு  திருத்திருவென முழித்த ஊர்மக்கள், ‘‘எங்கள் ஊரில் அப்படி யாருமில்லை’’ என்றனர்.

30 வயதைக் கடந்தபிறகும் திருமணமாகாத தன் மகளுக்குத் திருமணத்தடை அகல்வதற்காக, சாமியார் ஒருவரிடம் வழி கேட்டிருக்கிறார் அந்த நீதிபதி. அந்த சாமியாரோ, “பட்டுப்புடவை ஒன்றை வாங்கிக்கொண்டு, சாய்மாதாவிடம் அதைக் கொடுத்து ஆசிபெறுங்கள்” என்று சொல்ல சாய்மாதாவைத் தேடிவந்தார், நீதிபதி. வந்த இடத்தில் சாய்மாதாவைக் காணவில்லை என்றால் அவருக்கு எப்படி இருக்கும்?

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

மனம் தளராமல் மறுநாளும் தேடும் முயற்சியை நீதிபதி தொடர்ந்தார். கடைசியில், அழுக்கேறிய ஜடாமுடியுடன், அரைநிர்வாணக் கோலத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவரைப்போல இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதும், பக்திப் பரவசத்தோடு காரைவிட்டு நீதிபதி இறங்கினார். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். புடவையைப் பெற்ற அந்தப் பெண்மணி, அதை அருகில் சென்ற ஒரு பெண்ணிடம் வீசி எறிந்துவிட்டு, ‘‘சீக்கிரமே உன் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும்’’ என்றார். ஒரே மாதத்தில் மகள் திருமணம் முடிந்ததாம்.

‘தனக்கு 65 வயதாகியும் சொந்த வீடு கட்ட முடியவில்லையே’ என ஏக்கத்தில் இருந்தவர், காரைக்கால் பிரதேசத்தின் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் சிவம். ‘‘சாய்மாதா அருளால் மூன்றே மாதங்களில் வீடு அமைந்தது.’’ என்று மெய்சிலிர்க்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

இந்தப் பெண் சாமியார் உத்தரவுப்படி பூந்தோட்டத்தில் சாய்பாபா கோயில் கட்டி, வழிபட்டுவரும் சாய் சுதாகரிடம் பேசினோம். ‘‘வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்த சாய்மாதா, என்னை ஒருநாள் அழைத்தார். ‘இங்கே சாய்பாபாவுக்குக் கோயில் கட்டு’ என்று உத்தரவிட்டார். எனக்கு நம்பிக்கையும் இல்லை; பணமும் இல்லை. ஆனால், ‘என் கனவில் சாய்மாதா வந்து கூப்பிட்டாங்க’ என்று சொல்லியபடி அம்மாவை நாடி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். அவர்களின் வேண்டுதல்கள் பலித்தன. பலரும் தாங்களாகவே கோயில் கட்ட உதவினார்கள்.   சாய்மாதாவிடம் அருளாசி பெற அரசியல் தலைவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை பலரும் வருகிறார்கள். இவரின் காலடி தங்கள் வீட்டில் பட்டால் போதும் என்று சாய்அம்மாவை காரில் அழைத்துச்செல்ல தவமிருக்கிறார்கள். ஆள் பார்த்து, வசதி பார்த்து அம்மா செல்வதில்லை. அவர் விரும்பும் வீடுகளுக்கு மட்டுமே செல்வார்’’ என்கிறார்.

‘சாய்மாதா’ என்று அழைக்கப்படும் சின்னக்குஞ்சு அம்மாவைப் பற்றி பூந்தோட்டத்தில் விசாரித்தோம். ‘‘மேலருத்ரகங்கை கிராமத்தில் பிறந்தவர் தேவகி. திருவையாறு அருகேயுள்ள பொன்னாவரை கிராமத்தில் அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாததால், கணவன் வீட்டிலிருந்து தேவகி வெளியேறினார். உறவுகளைத் தேடிச் செல்லாமல், ஒரு பைத்தியம்போல் இங்குள்ள வேப்ப மரத்தடியில் வந்து தங்கினார். யாரிடமும் பேசாமல் தனிமையில் வாழ்ந்துவந்தார்.

ஊருக்கெல்லாம் பெண் சாமியார்! - சொந்த ஊரில் இவர்?

வீட்டைவிட்டு வெளியேறியபோது அணிந்த புடவைதான்... அதன் பிறகு ஆடை அணிவதில்லை. அரைநிர்வாணமாகத் திரிந்தார். பசி வந்தால் யார் வீட்டுக்காவது சென்று உணவு கேட்பார். அவரின் கதை தெரிந்து பரிதாபம் எழுந்ததால், உணவு கொடுக்க யாரும் மறுப்பதில்லை. காலப்போக்கில் ஒரு சாமியாராக மாறிவிட்டார். அவரிடம் ஆசிபெற எங்கெங்கோ இருந்து ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். நாங்களோ, அவரை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பார்க்கிறோம்’’ என்று சொல்கிறார் உள்ளூர்க்காரர்.

சாமியார்கள் எப்போது எப்படியெல்லாம் உருவாகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத விசித்திரம்தானே!

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்