Published:Updated:

“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!

“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!
பிரீமியம் ஸ்டோரி
“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!

பதற வைக்கும் பாம்பு ஸ்டைல் சாமியார்

“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!

பதற வைக்கும் பாம்பு ஸ்டைல் சாமியார்

Published:Updated:
“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!
பிரீமியம் ஸ்டோரி
“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!

‘‘தமிழகத்தில், விரைவில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. நடக்க இருக்கும் இந்தியா - சீனா போரை, அம்மன் என் வடிவத்தில் நின்று தடுத்து நிறுத்துவாள்’’ என ஐ.நா ரேஞ்சுக்கு அருள்வாக்கு சொல்கிறார், பெரம்பலூர் பாம்பு சாமியார். பெரம்பலூரில் பழைய பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள எல்லையம்மன் கோயிலில் குறிசொல்லும் இந்தச் சாமியாரின் பெயர் மாரிச்சாமி.

‘‘இங்கே வந்து அம்மனை வணங்கிட்டு, மாரிச்சாமிகிட்ட ஆசி வாங்கிட்டுப் போனா, திருமணத் தோஷம் நீங்கும். பணக் கஷ்டம் இருக்காது. சாமி இங்க 20 வருஷமா குறிசொல்றார். அந்த நேரத்துல இவர்மீது எல்லையம்மன் அருள் வந்துடும். என்ன நடக்கப்போகுதோ, அதைக் கண் முன்னே காண்பித்து சொல்வாரு. குறிசொல்றதுக்கு முன்னாடியும், சொன்ன பிறகும் நாகப்பாம்பு மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு கோயிலை வட்டம் அடிப்பார். இதைப் பாக்கறதுக்கே நிறையப் பேரு காத்திருப்பாங்க. அருள்வாக்குச் சொல்றதுக்காக, ஒரு ரூபாய்கூட காணிக்கை வாங்க மாட்டாரு’’ என்றனர் பக்தர்கள்.

“இந்தியா - சீனா போரை நான்தான் தடுக்கப் போறேன்!

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இவரைக் காண்பதற்காகக் காத்திருப்பார்களாம். இங்கு, அம்மன் காலடியில் 48 நாள்கள் சில்லறைக் காசுகளை வைத்து பூஜை செய்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் குறிகேட்க வரும் சிலரை மட்டும் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அதைப் பிடிக்காசாகக் கொடுப்பார் மாரிச்சாமி. பிடிக்காசுகள் என்றால், அவர் கைப்பிடிக்குள் எவ்வளவு காசு அடங்குகிறதோ, அவ்வளவு எடுத்துக்கொடுப்பார். ‘‘அதை வாங்குபவர்களுக்கு அதன் பின் பணக் கஷ்டமே இருக்காது’’ என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், நினைத்தவுடன் இவரிடம் அருள்வாக்கு கேட்க முடியாதாம். ‘‘அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்தான், அருள்வாக்கு கேட்கப் போக முடியும்’’ என்கிறார்கள்.

இவ்வளவு பில்டப்புகளுக்குப் பிறகுதான், நம்மால் மாரிச்சாமியிடம் பேச முடிந்தது. ‘‘உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது, இந்த நாட்டுக்கு நாளை என்ன நடக்கப்போகிறது என்பதையெல்லாம் கணித்துச் சொல்லிவிட என்னால் முடியும். இந்த ஆலயத்தில் வீற்றுள்ள அகிலாண்டேஸ்வரியும் அங்காள பரமேஸ்வரியும் 20 வருடங்களுக்கு முன்பு என் கனவில் வந்தனர். ‘உனக்கு நாங்கள் புதிய சக்தியை அளிக்கிறோம். எங்களைத் தேடிவரும் மக்களின் குறைகளைப் போக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, அம்மாவின் இடத்திலிருந்து நீக்கி வைக்கிறேன்.

தமிழகத்தில் சீக்கிரமே பெரியளவுக்கு உணவுப்பஞ்சம் வரப்போகிறது. இந்த வருடம்  மிக அதிகமாக மழைபெய்து தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவே தண்ணீரில் மிதக்கப்போகிறது. கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் நடந்து, தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்படும்.’’ என்று சொல்லிக்கொண்டே போனார் மாரிச்சாமி.

‘‘ஏன், இப்போது இருக்கும் ஆட்சி சரியில்லையா?’’ எனக் கேள்வியை  வீசியதும், சட்டென ஜெர்க் ஆனார் சாமி. ‘‘இதை நானாகச் சொல்லவில்லை. அம்மா எனக்குள் குடிகொண்டு சொல்லியிருக்கிறார். ஆட்சி சரியில்லை என்று சொல்ல மாட்டேன். ஆட்சியில் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. இன்னொரு விஷயம்... சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பெரிய போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க, அம்மா என்னைத்தான் பெண் உருவத்தில் அனுப்பப்போகிறார்’’ என  குண்டைப் போட்டார்.

‘‘இது சாத்தியமா சாமி’’ என நாம் அப்பாவியாகக் கேட்டதும், மாரிச்சாமியின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. ‘‘அம்மாவின் அருள் போய்விட்டது. வெள்ளிக்கிழமை வாருங்கள், பதில் சொல்கிறேன்’’ என்று கண்களை மூடிக்கொண்டார் மாரிச்சாமி. பெரம்பலூர்க்காரரான மாரிச்சாமி, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாமியாக மாறிவிடுகிறார். மற்ற நாள்களில் தன் கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலைக் கவனிக்கிறார்.

- எம்.திலீபன், படங்கள்: செ.ராபர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!