Published:Updated:

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!
பிரீமியம் ஸ்டோரி
பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

Published:Updated:
பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!
பிரீமியம் ஸ்டோரி
பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

செய்தித்தாள்கள் தொடங்கி சேனல்கள் வரை எங்கும் சாமியார்களின் பிரதாபங்கள்தான் நிறைந்து வழிகின்றன. சினிமா ஹீரோ, பிசினஸ்மேன், யோகா டீச்சர், பசுமைப் போராளி என இவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள். ரூபாய் நோட்டு ஒழிப்பாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோ லான்ச்சாக இருந்தாலும் சரி... ‘மைக்’ மோகனாக மாறி கருத்து மழை பொழிந்து பப்ளிசிட்டி தேடுகிறார்கள். வேறு என்னவெல்லாம் செய்து இவர்கள் தங்களது புகழைப் பரப்பலாம் என ஐம்புலன்களையும் அடக்கி நாம் யோசித்ததிலிருந்து:

(டிஸ்க்ளைமர்: இந்தச் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பாகக் குறிப்பிடுவன அல்ல. ஆதலால், படித்தவுடன் கிழித்துவிடவும்.)

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்டுக்கு நடுவே கட்டடங்கள் கட்டி நடத்தப்பட்ட ‘காடுகளை அழிக்காதீர் திட்டம்’, ஆற்றின் கரையில் குப்பைகளைக் குவித்து நடத்தப்பட்ட ‘ஸ்ரீஸ்ரீ ஆற்றைச் சுத்தமாக்குவோம் திட்டம்’ போன்றவற்றைத் தொடர்ந்து சுற்றுப்புறம் சார்ந்த நிறைய திட்டங்களை அறிமுகப் படுத்தலாம். ‘தென்முனையில் உருகும் பனிப்பாறைகளைத் தடுக்க பிரமாண்ட ஃப்ரீஸர்களைக் கடற்கரையில் நிறுவுவது’, ‘ஓஸோனில் ஓட்டை போட்டு வரும் புறஊதாக் கதிர்களைத் தடுக்க கறுப்புத் துணியை வானத்தில் தொங்கவிடுவது’ போன்றவற்றின் மூலம் சர்வதேசக் கவனத்தைப் பெறலாம்.

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்தாயிற்று, செய்தித்தாள்களில் தினமும் அரைப் பக்கம் வந்து அட்வைஸ் செய்யவும் தொடங்கியாயிற்று. அடுத்தகட்டப் பாய்ச்சலாக யூ-டியூப்பில் வெப் சீரிஸ் நடிக்கத் தொடங்கலாம். அப்படியே ஹாட் ஸ்டார், நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என ஒரு ரவுண்டு வந்தால் மொத்த இளைய தலைமுறையையும் குத்தகைக்கு எடுத்துவிடலாம். சினிமா விமர்சனம்கூட முயற்சி செய்யலாம் ப்ரோ!

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

மிஸ்டு கால் கொடுத்து நதிகளை வெற்றிகரமாக இணைத்தது போலவே ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என்ற மெசேஜை 256 பேர் கொண்ட க்ரூப்புக்கு அனுப்பினால், ‘ஐந்து பெருங்கடல்களையும் ஒன்றோடு ஒன்று இணைக்க முடியும்’ எனப் பிரசாரம் செய்யத் தொடங்கலாம். ‘ஏற்கெனவே அஞ்சும் இணைஞ்சுதானே இருக்கு’ என லாஜிக்கல் டவுட் கேட்பவர்கள் சாமியின் சாபத்துக்கு ஆளாவார்கள்.

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

டிவயிற்றிலிருந்து குண்டலினியை எழுப்புவது அன்றாட வாழ்க்கைக்கு அவசியப்படாத ஒரே காரணத்தால்தான் அந்த உன்னதத் திட்டம் தோல்வியடைந்தது. எனவே மக்களுக்குப் பயன்படும் வகையில், நெஞ்சுச்சளியை எழுப்பி வெளியே வரவைத்துக் காய்ச்சலைக் குணமாக்குவது, பசி ஏப்பத்தை எழுப்பி நிறைய சாப்பிடத் தூண்டுவது போன்ற பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க ஆவன செய்யலாம். மக்களும் குருவோடு நெருக்கமாவார்கள்.

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, சீட்டுக்கட்டை வைத்துச் சித்து விளையாட்டுகள் செய்வதெல்லாம் ‘நாட்டாமை’ காலத்து டெக்னிக்காகிவிட்டன. எனவே, விடை தெரியாத மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்க இவர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ‘அந்த கன்டெய்னரில் வந்த 570 கோடி ரூபாய் யாருடைய பணம்?’, ‘அப்போலோவில் நடந்தது என்ன?’ போன்ற மர்மங்களுக்குத் தங்களின் பவரை உபயோகித்து விடை தரலாம். என்ன, இலவச இணைப்பாக இரண்டு நில ஆக்கிரமிப்பு கேஸ்கள், நான்கு இன்கம்டாக்ஸ் ரெய்டுகள் பார்சலாக வரும். ஸோ வாட்? அதையும் ஞானதிருஷ்டி மூலம் முன்கூட்டியே கணித்துத் தப்பிக்க முடியாதா என்ன?

பாரதம் முழுக்க ‘பன்ச் அலி ஜிம்!

யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ் பக்கம் எல்லாம் கால் வைத்தாயிற்று. மிச்சமிருக்கும் ஃபிட்னஸ் வகைகள் ஏரோபிக்ஸும், ஜும்பா டான்ஸும்தான். அவற்றையும் மேடை போட்டுச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கலாம். முடிந்தால் ‘உங்களில் யார் சிறந்த ஜும்பா டான்ஸர்?’ என லைவ் ரியாலிட்டி ஷோவும் நடத்தலாம். அதன் அடுத்தகட்டமாக இந்தியா முழுக்க ‘பன்ச் அலி’ என ஜிம் தொடங்கவும் வாய்ப்பிருக்கிறது. (முகமது அலியைப் பெருமைப்படுத்தவே ‘பன்ச் அலி’ என்ற பெயரைப் பரிந்துரைக்கிறோம். வேறு ஏதாவது சாயல் தெரிந்தால் நாங்கள் பொறுப்பல்ல!)

 - எஸ்.நித்திஷ்,
ஓவியம்: பிரேம் டாவின்ஸி