Published:Updated:

அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!

அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!
பிரீமியம் ஸ்டோரி
அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!

அடடே தண்ணீர் சாமியார்

அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!

அடடே தண்ணீர் சாமியார்

Published:Updated:
அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!
பிரீமியம் ஸ்டோரி
அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!
அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!

‘‘வானிலிருந்து ஜீவ காந்த சக்தியை எனக்குள் ஈர்த்து, அதை நோயாளியின் உடலுக்குள் செலுத்தி, சகல நோய்களையும் நான் நிவர்த்தி செய்கிறேன்.’’ என்று கெத்துக் காட்டுகிறார் ஸ்ரீகாந்தன் சுவாமிகள். இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத எய்ட்ஸ் முதல் லேட்டஸ்ட் டெங்கு ஜுரம் வரை பெரிய பட்டியலையே போடுகிறார்.

அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது ‘அகம்-சுகம் குடில்’. சுற்றுவட்டாரத்தில், ‘தண்ணீர் சாமியார்’ என்ற பெயரில் இவர் மிகவும் பிரபலம். தறி குடோனில் கூலி வேலை பார்த்துக்கொண்டும், ஆயில் வியாபாரம் செய்துகொண்டும் இருந்த கந்தசாமி, திடீரென 10 வருடங்களுக்கு முன்பு, ‘வான் ஜீவ காந்த நீர்’ மருத்துவம் பார்க்கும் ஸ்ரீகாந்தன் சுவாமிகளாக தனக்குத்தானே புரமோஷன் கொடுத்துக்கொண்டார். ஆரம்ப நாள்களில், காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் ‘பார்ட் டைம்’ ஆக சுவாமிகள் அவதாரம் எடுத்துவந்தார். பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வந்தது. இப்போது, முழுநேரமும் அகம்-சுகம் குடிலிலேயே அருள்பாலிக்கிறார்.

அது என்ன வான் ஜீவ காந்த நீர்? பஸ் ஸ்டாண்டு இஞ்சி முரப்பா வியாபாரிகள், ‘எல்லா நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக’ அதை விற்பார்கள். அதுபோல, எந்த நோய்க்கும் இந்தச் சாமியார் தரும் வான் ஜீவ காந்த நீர்தான் அருமருந்து. நோயுடன் வரும் ஒரு பக்தரை, பெரிய சைஸ் கண்ணாடிக்கு முன்பு உட்கார வைக்கிறார். அவரிடம், கண்ணாடியைப் பார்த்து உங்களை நீங்களே  கும்பிட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பக்தர் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து, மனதார தரிசனம் செய்கிறார். அந்த சைக்கிள் கேப்பில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்துவந்து, ஆகாயத்தில் சுற்றித்திரியும் ஜீவகாந்த சக்தியை அதில் இறக்கிவிட்டதாகக்கூறி, பிரசாதமாகக் கொடுக்கிறார்.

பக்தர்கள் இந்த நீரை வீட்டுக்கு எடுத்துச்சென்று, ஒரு வாரம் வரை குடிக்க வேண்டும். ‘‘அதில் நோய் தீர்ந்துவிடும். அதன் பிறகும் குணமடையாத பட்சத்தில், மீண்டும் வந்து வான் ஜீவ காந்த நீரை என்னிடம் வாங்கிச் செல்லவேண்டும்.’’ என்கிறார் சாமியார்.

புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், தங்களுக்குப் பிடித்த பிராண்டில் சிகரெட் மற்றும் மதுபாட்டில்களை வாங்கிவந்து சாமியாரிடம் கொடுக்கிறார்கள். அந்த அயிட்டங்களுக்குள்ளும் வான் ஜீவ காந்த சக்தியை டவுன்லோடு செய்துகொடுக்கிறார் சாமியார். அந்த சிகரெட்டோ, மதுவோ உடலுக்குத் தீங்கு விளைவிக்காதாம். ‘‘ஜீவ காந்த சக்தி அதை மருந்தாக மாத்திடுது’’ என்கிறார் சுவாமி.

அந்தரத்திலிருந்து காந்த சக்தி டவுன்லோடு!

ரயில் டிக்கெட், சினிமா டிக்கெட் போலவே, இந்தச் சாமியாரைப் பார்ப்பதற்கும் முன்பதிவு அவசியம். விரைவில், ஆன்லைன் புக்கிங் வசதி வரலாம் என பேசிக்கொள்கிறார்கள். இரண்டு சீப்பு வாழைப்பழம், நெய், தேன், எலுமிச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை அவசியம் வாங்கிச்செல்ல வேண்டும். தரிசனக் கட்டணமாக ரூபாய் 1,100 கட்டி, கட்டாயமாக ரசீதும் பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியூர், வெளிமாநில பக்தர்களுக்கு மட்டுமல்ல... வெளிநாடுவாழ் பக்தர்களுக்கும் கூரியர் மூலம் வாட்டர் பாட்டிலை - மன்னிக்கவும், வான் ஜீவ காந்த நீரை அனுப்பிவைக்கிறார் இந்தத் தண்ணீர் சாமியார்.

‘‘உங்கள் உடம்பை இயற்கையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இயற்கை கொடுப்பதை மட்டும் பயன்படுத்தி வாழ்ந்தால், சுபிட்சமான வாழ்வு அமையும்.’’ என்று ஏ.சி ரூமில் அமர்ந்துகொண்டு  ஸ்ரீகாந்தன் சுவாமிகள் போதிக்கிறார். சுவாமிகளின் அருள்பெற்ற ஒரு லிட்டர் வான் ஜீவ காந்த வாட்டர் பாட்டிலின் விலை 120 ரூபாய். அடேய்களா... மாளிகைக் கடை ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலுக்கே அண்ணாச்சி இரண்டு ரூபாய்தானே எக்ஸ்ட்ரா வாங்குவார்!

- தி.ஜெயப்பிரகாஷ்