Published:Updated:

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

Published:Updated:
வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

நீண்டு தொங்கும் ஜடாமுடி, அழுக்கேறி நிறமிழந்த ஒரு துண்டு இடுப்பில்... இதுதான் பஸ் ஸ்டாண்டு பாபா. சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டு நுழைவாயிலில் கடைகளின் மத்தியில், சுமார் 2x2 சைஸ் அளவிலான இடம்தான், பாபாவின் ஜாகை. சினிமாவில்  தேவலோகத்தில் கிளம்பும் புகைக்காட்சிபோல, அந்த இடம் புகைமண்டலமாக் காட்சியளித்தது. அது, ஊதுபத்திப் புகை அல்ல, பாபா ஊதிய சிகரெட் புகை!

உயரமான ஒரு பலகையின் மீது பாபா அமர்ந்திருக்க, டேபிள் ஃபேன் மற்றும் ஏர்கூலர் ஓட்டத்தில் சிகரெட் புகை, அலை அலையாய்ப் பறந்துகொண்டிருந்தது.

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

‘‘கிட்டப் போய் நில்லுங்க. எப்போதாவது இந்தி அல்லது தெலுங்கில் பேசுவார்’’ என நமக்கு வழிகாட்டினார்கள். போட்டோகிராபருக்குத் தெலுங்கும் உதவிக்கு வந்திருந்த நண்பருக்கு இந்தியும் தெரியும். இருவரும் பாபாவைப் பேச வைக்க முயற்சிசெய்தும், பாபாவின் வாயிலிருந்து சிகரெட் புகையைத் தவிர, வேறு எதுவும் வரவில்லை.

ஆனால், பஸ் பிடிக்க ஓடிய ஓர் இளைஞரிடம், பாபா ஜாடையில் ஏதோ சொன்னார். என்னவோ புரிந்தது போல் அந்த இளைஞர், சிகரெட்டோடு திரும்பிவந்தார். ‘கொஞ்சம் பொறு’ என அவரைக் காக்க வைத்த பாபா, சிகரெட்டின் கடைசி இழுப்பை முடித்ததும், இன்னொரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்தார். ஆனால், அவரின் காலடியில் பாக்கெட் பாக்கெட்டாகக் குவிந்துகிடந்த சிகரெட் பாக்கெட்டுகளைத் தொடக்கூட இல்லை. ‘விரும்பினால்தான் அதைத் தொடுவார்’ என்றார்கள் அங்கிருந்தவர்கள்.

நாள் முழுக்கக் காத்திருந்தோம். மாலை ஆறு மணிக்கு நம் போட்டோகிராபரை அழைத்த பாபா, பல கோணங்களில் போஸ் கொடுத்தார். நம்மை அருகில் அழைத்துத் தெலுங்கிலும், இந்தியிலும் துண்டுதுண்டு வார்த்தைகளாகப் பேசினார். ‘நன்றாக இரு, நல்லது செய்’ என்பதைத் தவிர வேறு எதையும் சொல்லவில்லை. 

பாபாவைப் பற்றி சண்முகம் என்பவர் பேசினார். ‘‘15 வருஷத்துக்கு முன்னால நான் பல கேஸ்கள்ல சிக்கியிருந்தேன். அப்போ, பாபா யார்கிட்டேயும் பேச மாட்டார். அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கமா போறப்போ, அவரைக் கும்பிடுவேன். ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, கை கால்களைப் பிடித்துவிடச் சொன்னார். செஞ்சேன். அடுத்த நாள்ல இருந்து என் வாழ்க்கையே மாறிடுச்சு. நானே ஆச்சர்யப்படுற மாதிரி பழைய கேஸ்கள் ஒண்ணும் இல்லாமப் போயிடுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

பொறுப்பே இல்லாம சுத்தின எனக்கு, இப்போ டீக்கடை இருக்கு. பக்கத்திலேயே பாபா இருக்காரு. இங்கிருக்கிற டிரைவர்கள், கண்டக்டர்கள், வியாபாரிகள் பலரும் பாபாவைப் பார்த்துட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கிறாங்க. நகைச்சுவை நடிகர் அப்புக்குட்டி, அடிக்கடி வந்து ஆசி வாங்குவார். அதிகாரிங்க, அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள்னு பல வி.ஐ.பி-க்கள் ராத்திரி 10 மணிக்கு மேல ரகசியமா வந்து, அதிகாலை வரை பாபாவோட இருப்பாங்க.

வி.ஐ.பி-க்கள் ரகசியமாகத் தேடிவரும் பஸ் ஸ்டாண்ட் பாபா

ஒரு நாளைக்கு பாபா 20 சிகரெட் பாக்கெட்டுகளுக்கு மேல் ஊதித் தள்ளுவாரு. ஆனா, அவருக்கு எதுவுமே ஆகாது. அவர் தூங்கியோ, குளிச்சோ நாங்க பார்த்ததில்ல. அவர் பெயரோ, பூர்வீகமோ யாருக்கும் தெரியாது. இதுவரை பாபா எந்தச் சித்து வேலையும் செய்ததில்ல. ஆனா, ‘அவர் பார்வை பட்டாலே போதும். எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு நம்புறாங்க. நினைச்சது நடந்ததும் நன்றி சொல்லவும் வர்றாங்க. வெளிநாடுகள்லயும் அவருக்குப் பக்தர்கள் உண்டு’’ என்கிறார் சண்முகம். பாபா போட்டோவுக்கு போஸ் கொடுத்தது இதுதான் முதல்முறையாம்.

- ந.பா.சேதுராமன், படங்கள்: ஸ்ரீனிவாசுலு