Published:Updated:

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!
பிரீமியம் ஸ்டோரி
மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

Published:Updated:
மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!
பிரீமியம் ஸ்டோரி
மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

‘‘நான் செய்யப்போகும் யாகம், தமிழகத்தின் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும்’’ என்று அதிரடியாகச் சொல்கிறார் ‘அகோரி’ மணிகண்டன்.

‘பில்லி, சூனியம் எல்லாம் பொய்’ எனச் சொல்கிறவர்களுக்கு எதிராக திருச்சி சுடுகாடு ஒன்றில் நிர்வாணப் பூஜை செய்து பிரபலமானவர். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை திருச்சியிலிருந்து காசிக்குப் பறந்துகொண்டிருக்கும் பிஸியான சாமியார் இவர். திருச்சி அரியமங்கலத்தில்  உள்ள ஸ்ரீஜெய் அகோரா காளி கோயிலில் இவரைச் சந்தித்தோம்.

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!
மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எனக்குச் சொந்த ஊர் திருச்சி சங்கிலியாண்டபுரம். கசப்பான அனுபவங்களால் இல்லற வாழ்க்கைமேல வெறுப்பு ஏற்பட்டு, ஆன்மிகத்துல மூழ்க ஆரம்பிச்சேன். தெரிந்தவர்கள் மூலம் மந்திரங்களையும் பூஜைகளையும் கற்றுக்கொண்டேன். பிறகு, காசிக்குப் போனேன். அங்கே ஒன்பது வருஷமா அகோரிகளுக்கான பயிற்சி எடுத்துக்கொண்டு கடுமையான தவமிருந்து தீட்சை பெற்றேன். ஆறு வருடங்களாக நானும் பல சீடர்களுக்குத் தீட்சை கொடுத்துட்டு வர்றேன். வருகிறேன். கருங்குட்டி தீட்சை, ருத்ர தீட்சை, விஷ்ணுமாயை தீட்சையெல்லாம் பெற்றால்தான் இந்த மார்க்கத்துக்கு வரமுடியும். ரொம்பக் கஷ்டமான விஷயம்.

அகோரி மார்க்கம் பற்றி அறியாதவர்கள், ‘தலைச்சன்பிள்ளை கறியைச் சாப்பிடுபவன்’ என்றெல்லாம் என்னைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். வடஇந்தியாவில் நான் ரொம்ப ஃபேமஸ். இந்தி பத்திரிகைகளில் என் போட்டோவைப் போட்டு, என்னைப் பற்றிப் பெருமையாக எழுதுகிறார்கள். அகோரிகள் கொடூரமானவர்கள் இல்லை. காசியில், கங்கைக் கரையில் கூடாரம் அமைத்து பூஜைகள் செய்வோம். அதன்பலனாக, எங்கள் கூடாரத்தையொட்டி ஒரு சவம் ஒதுங்கும். அந்தச் சவத்தின் ஆன்மாவிடம் பேசும் நாங்கள், மயான சாம்பலை உடலில் பூசிக்கொண்டு, 11 மண்டை ஓடுகளை மாலையாகக் கோத்து அணிந்துகொண்டு சவத்தின் மீது அமர்ந்து பூஜை செய்வோம். இறுதியாக, சவத்தை அகோரிகளான நாங்களே சாப்பிட்டு, இறந்த நபரின் ஆன்மாவைச் சொர்க்கத்துக்கு அனுப்பிவைப்போம். இது மனிதநேயத்துடன் செய்யப்படும் சடங்கு.

இப்படி பூஜை செய்து சவத்தை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல. நான் அழைத்துதான் சவம் ஒதுங்குகிறது எனக் காசியிலேயே  சொல்கிறார்கள். அதனால்தான் கும்பமேளா, அஸ்ஸாம் காமாக்யா அம்புபாச்சி மேளா, மகா ஹோலி உள்ளிட்ட விழாக்களில் என்னைச் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச்செல்வார்கள். ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டியும், நூற்றுக்கணக்கான பேனர்கள் வைத்தும் வரவேற்பார்கள். ஒரு தமிழன் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது பெரிய விஷயம்.’’ எனத் தன் ‘பெருமை’களைத் தானே சொன்னார் மணிகண்டன்.

மண்டை ஓட்டு மாலை... நிர்வாண பூஜை!

‘‘ஒரு குடும்பத்துக்கு யாராவது கெட்டது பண்ணியிருந்தால், அதை அழிக்கும் சக்தி அகோரிகளுக்கு உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும் நிர்வாண பூஜை, ஆடு, கோழி பரிகாரப் பூஜை இருக்கும். அமாவாசை, பௌர்ணமியின்போது சிறப்பு பூஜைகள் செய்வோம்’’ என முனியாண்டி விலாஸ் மெனுகார்டுபோல பட்டியல் போடும் மணிகண்டன், ‘‘அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளிலிருந்து வந்தவர்களுக்குப் பேய் விரட்டியிருக்கிறேன்.’’ என வீடியோ ஆதாரங்களைக் காட்டுகிறார்.

வட இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவைப் போன்று, இங்கேயும் செய்ய முயன்றுவருகிறார் மணிகண்டன். ‘‘வரும் ஜனவரி மாதம் அகோரிகள், நம்பூதிரிகள், அர்ச்சகர்களை வைத்துக் கால பைரவர் யாகம் செய்ய இருக்கிறேன். அது, தமிழகத்தின் எல்லா நெருக்கடிகளையும் சரிசெய்துவிடும்.’’ என்று அவர் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, வெளியே வந்தபோது நம் உடலெல்லாம் யாரோ சாம்பல் பூசி, மண்டைஓடு மாலை போட்டுவிட்டதுபோல ஒரு ஃபீலிங்! 

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்