Published:Updated:

அரசியல் சாமியார்கள்!

அரசியல் சாமியார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அரசியல் சாமியார்கள்!

அரசியல் சாமியார்கள்!

அரசியல் சாமியார்கள்!

அரசியல் சாமியார்கள்!

Published:Updated:
அரசியல் சாமியார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அரசியல் சாமியார்கள்!
அரசியல் சாமியார்கள்!

ரசியல்வாதிகளின் பின்னணியில் சாமியார்கள் இருந்தது ஒரு காலம். இப்போது, சாமியார்களே நேரடி அரசியல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். இயல்பாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் பி.ஜே.பி-யில் உள்ளனர். இந்தியாவின் டாப் அரசியல் சாமியார்கள் இவர்கள்தான்...

யோகி ஆதித்யநாத்

 உ.பி முதல்வராக இருக்கும் இந்த யோகி, அங்கிருக்கும் கோரக்நாத் பீட மடாதிபதி.         இவரைப் பிரதமர் மோடியின் அரசியல் வாரிசாக, கருதுபவர்கள் பி.ஜே.பி-யில் உண்டு. சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர். ‘ரசிகர்கள் புறக்கணித்தால் ஷாரூக்கான் ஒரு சராசரி முஸ்லிமாக ரோட்டில் திரிய வேண்டும்’, ‘தாஜ்மகாலுக்கு எந்தப் பாரம்பர்யமும் இல்லை’, ‘அன்னை தெரசா மதமாற்றம் செய்யவே இந்தியா வந்தார்’ போன்றவை இவரின் புகழ்பெற்ற வாசகங்கள்.

அரசியல் சாமியார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உமாபாரதி

‘பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, உமாபாரதி போன்றவர்கள் ரகசிய சதியில் ஈடுபட்டார்களா...?’ என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றபோது, உமாபாரதி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அவரோ, ‘‘எதுவுமே ரகசியம் இல்லை. எல்லாமே வெளிப்படையாகவே நடந்தன’’ என்று நீதிமன்றத்துக்கே சவால் விட்டார். ஒருகாலத்தில் ம.பி முதல்வராக இருந்தவர், இடையில் பி.ஜே.பி தலைமையுடன் மோதி விலகியிருந்தார். மோடி, மீண்டும் இவரை அழைத்து மத்திய அமைச்சராக்கினார்.

சாக்‌ஷி மகராஜ்


உ.பி-யிலிருந்து வென்ற பி.ஜே.பி எம்.பி இவர். ‘எல்லா இந்துப்பெண்களும் நான்கு குழந்தைகள் பெற வேண்டும்’, பசுவதை செய்பவர்களை, மதமாற்றம் செய்பவர்களைத் தூக்கில் போட வேண்டும்’, ‘கோட்சேவைத் தியாகி, தேசபக்தர்’ எனத் தினம் தினம் முத்துகளை உதிர்ப்பார். குர்மீத் ராம் ரஹீமுக்குப் பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, ‘‘லட்சக்கணக்கான பக்தர்கள் அவரை குற்றமற்றவர் என்கிறார்கள். ஒரே ஒரு நீதிபதி மட்டும் அவரைக் குற்றவாளி என்றால் என்ன அர்த்தம்?’’ என்று சீறியவர்.

அரசியல் சாமியார்கள்!

சாத்வி நிரஞ்சன் ஜோதி

மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை இணை அமைச்சர். ‘இந்தியா, ராமரின் மகன்களால் ஆளப்பட வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களால் ஆளப்பட வேண்டுமா?’ என காங்கிரஸை இழிவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர். பிறகு, மோடி கடிந்துகொண்டதால் மன்னிப்புக் கேட்டார். உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்க, இவரின் புயல் பேச்சும் ஒரு காரணம்.