Published:Updated:

சாமியார்கள் - துணுக்குகள்

சாமியார்கள் - துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
சாமியார்கள் - துணுக்குகள்

சாமியார்கள் - துணுக்குகள்

சாமியார்கள் - துணுக்குகள்

சாமியார்கள் - துணுக்குகள்

Published:Updated:
சாமியார்கள் - துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
சாமியார்கள் - துணுக்குகள்
சாமியார்கள் - துணுக்குகள்

லகமே புகழ்ந்தாலும் சொந்த ஊரில் மதிப்பிருக்காது. ஆனால், சித்தர் சிவராஜ மகேந்திர சுவாமியை உள்ளூரில் புகழ்கிறார்கள். தஞ்சை பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆம்பலாபட்டு கிராமம்தான் சொந்த ஊர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, இந்நாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள் பலரும் பயபக்தியோடு இவரிடம் அருளாசி பெறுகிறார்கள்.

அருளாசிக்கு கட்டணம் கேட்பதில்லை. வருகிறவர்களின் போன் நம்பர்களை வாங்கிக்கொள்கிறார். ஆம்பலாபட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, கல்வி என உதவி தேவைப்பட்டால், தன் வி.ஐ.பி பக்தர்களுக்கு போன்செய்து இலவசமாகவோ, சலுகைக் கட்டணத்திலோ ஏற்பாடு செய்கிறார். இதே கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்சியபோது இவர், வெறும் மகேந்திரன்தான். அண்ணாமலையார் கனவில் தோன்றி தன் வாழ்க்கையை மாற்றியதாகச் சொல்கிறார்.

-கு.ராமகிருஷ்ணன்,  படம்: கே.குணசீலன்

சாமியார்கள் - துணுக்குகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீர் சாமியார்!

‘க
டவுள் பாதி மிருகம் பாதி’யாக வந்த ‘ஆளவந்தான்’ கமல் மாதிரி... ‘வாத்தியார் பாதி சாமியார் மீதி’ என வாழ்ந்துவருகிறார், தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரத்தைச் சேர்ந்த அருள்வாக்கு யோகி ரமேஷ்ஜி. இதே ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ரமேஷ், பள்ளி நேரம் முடிந்ததும் சாமியாராக உருமாறிவிடுகிறார்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரெகுலராக குறிசொல்வார் ரமேஷ். மாலை 6 மணிக்குமேல் ஆரம்பிக்கும் இந்த வைபவம், இரவு 10 மணியைக் கடந்தும் நீளும். அந்த அளவுக்குக் கூட்டம் அலைமோதும். இவரிடம் குறிகேட்க வேண்டுமென்றால் வெற்றிலை பாக்கு, தேங்காய் என எதுவும் தேவையில்லை. ஒரு பீர் பாட்டில் போதும். அதனால், இவரை ‘பீர் சாமியார்’ என்றே அழைக்கிறார்கள். அமாவாசை என்றால் 50-க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் மற்றும் கோழிகளும், ஆடுகளும் படையலாகக் கிடைக்கும்.

- எம்.புண்ணியமூர்த்தி, படம்: க.தனசேகரன் 

சாமியார்கள் - துணுக்குகள்

காவி உடை, கழுத்து முழுக்க ருத்திராட்ச மாலைகள், நீண்ட தாடி, உச்சிக்குடுமி. திருப்பூர் மாவட்டம் அமராவதி மலை அடிவாரத்தில் குடில் போட்டு அமர்ந்திருக்கிறார் தங்கவேல் சுவாமிகள். ‘‘நான் அடிப்படையில் ஒரு விவசாயி. ஒரு மாசம் வீட்ல இருந்து விவசாய வேலைகளைப் பார்ப்பேன். மறு மாசம் இங்க வந்து தங்கி, மூலிகைகளைத் தேடி ராப்பகலா சுத்துவேன். ‘ஆள் மறைக்கி’ எனப்படும் கூடுவிட்டுக் கூடுபாயும் மாயம் நிகழ்த்தும் மூலிகையை வருஷக்கணக்கில் தேடிக்கிட்டு இருக்கேன். அந்த மூலிகை கோவை வெள்ளியங்கிரி மலை, நாமக்கல் கொல்லி மலை, சதுரகிரி மலை, ஊதியூர் மலை ஆகிய நாலு மலைகளில்தான் இருப்பதா சொல்றாங்க. அங்கே, பல வருஷமா தேடியும் அது கிடைக்கல. அதைக் கண்டுபிடிக்காம விடமாட்டேன்’’ என்கிறவர், இப்போது குப்பைமேனி வசிய ரசமணி விற்கிறார். இது, எதிரிகளைக்கூட நம்மை நேசிக்கவைக்குமாம். இதன் விலை அதிகமில்லை... ஜஸ்ட் 5,000 ரூபாய்தான்! 

- ஜி.பழனிச்சாமி

ஜாக்கெட் பிட் சாமியாரிணி!

கே
ரளாவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி அம்மா. இவர், பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமத்தையொட்டித் தனியாக ஒரு தோட்டத்தில் இருக்கும் கோயிலில் உட்கார்ந்து அருள்வாக்குச் சொல்கிறார். கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்தபடி, மலையாளம் கலந்த தமிழில் அருள்வாக்கு வழங்கும் இந்த சாமியாரிணிக்கு வெள்ளிக்கிழமைதான் ‘வீக் எண்ட்’ ஹாலிடே! மற்ற நாள்களில் தவறாமல் ஆஜராகி அருள்வாக்குச் சொல்கிறார்.

இவரிடம் அருள்வாக்குக் கேட்கப் போகும் பக்தர்கள், வெற்றிலை, பாக்கு மற்றும் காணிக்கையோடு, நீலக்கலர் ஜாக்கெட் பிட் ஒன்றையும் மறக்காமல் தட்டில் வைக்க வேண்டும். ‘‘நீலக்கலர் ஜாக்கெட் பிட் எதற்கு?’’ என்று கேட்டால், ‘‘வானும் கடலும் நீலம். அதுதான் அமைதியின் வண்ணம்’’ என்று சொல்கிறார். கேரளா போகும்போது மொத்தமாக எடுத்துச்சென்று எங்கேயோ இவற்றைக் கொடுத்து விடுகிறாராம். 

- ஜி.பழனிச்சாமி

சாமியார்கள் - துணுக்குகள்

டுமலைப்பேட்டை பக்கத்தில் இருக்கும் கிராமம் அது. ஊருக்கு வெளியே இருக்கும் தோப்புக்குள் சின்னக்கோயில். ‘லெமன்மாயி’ என இளைஞர்களால் அழைக்கப்படும் 35 வயது சாமியாரிணி அருள்வாக்கு சொல்லும் இடம் அது.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்... பக்தர்களை ஒவ்வொருவராக தனி இருட்டறைக்குள் கூப்பிட்டுத்தான் அருள்வாக்கு சொல்வார். பக்தர்கள் காணிக்கையாக இரண்டு எலுமிச்சை பழங்களைச் சாமியாரிணி காலடியில் வைக்கவேண்டும். பக்தர் உள்ளேபோனதும், வெளியில் நிற்கும் ஜூனியர் சாமியாரிணி, கதவை வெளிப்பக்கமாகப் பூட்டி விடுவார். அருள்வாக்கு முடிந்ததும், மாயி மணி அடிப்பார். அதன் பிறகே கதவு திறக்கப்படும்.

10 நிமிடங்களில் பக்தரை வெளியில் அனுப்பிவிடுவார் மாயி. சில இளைஞர்களுக்கு அருள்வாக்கு அரை மணி நேரம்கூட கிடைக்குமாம். வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி தொடங்கி, இரவு  10 மணி வரை நடக்கும் இந்த அருள்வாக்கு எபிசோடில் விசேஷம் என்னவென்றால், கோரிக்கை நிறைவேறிய பிறகே ஃபீஸ் கொடுக்கலாம்!

- ஜி.பழனிச்சாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism