‘ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ்’ என்ற பெயரில், சர்வதேச இயற்கை விவசாய மாநாடு மற்றும் கண்காட்சி, நவம்பர் 9 முதல் 11-ம் தேதி வரை டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது. 110 நாடுகளிலிருந்து இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான இந்த மாநாட்டையே தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

இந்த மாநாட்டுக்கு வந்திருந்த கோவை மாவட்ட இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன், ‘‘நம்மைவிடக் குறைவாக விவசாயம் செய்துவரும் கேரளா, அதிக நிதியை ஒதுக்கி மிகப்பெரிய அரங்கு அமைத்திருக்கிறது. நாமோ, தேடிவந்த வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறோம்’’ என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேனாம்படுகை பாஸ்கரன், “இயற்கை விவசாயம் வளர்ந்தால், அரசுக்குத்தான் லாபம். தமிழக வேளாண்துறைக்கும் இந்த அக்கறை வேண்டுமல்லவா?” என்றார்.

ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்த ‘பஞ்சகவ்யா’ டாக்டர் நடராஜன், “பஞ்சகவ்யா நம் கண்டுபிடிப்பு. தமிழக அரசு சார்பில் அரங்கு அமைத்து பஞ்சகவ்யா பற்றிப் பேசியிருந்தால் பல நாடுகளுக்கும் இது போய்ச்சேர்ந்திருக்கும்” என்றார்.

தமிழக அரசு சார்பில் கலந்துகொண்ட வேளாண் துணை இயக்குநர் அசோகனிடம் (மானாவாரி பயிர்த் திட்டம்) கேட்டபோது, “நிதி பெறுவதற்கான காலம் குறைவாக இருந்ததால் அரங்கு அமைக்க முடியவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் அறுவடை நடைபெறவில்லை. இருந்தும், மாவட்டத்துக்கொரு விவசாயியைத் தேர்ந்தெடுத்து, 20 பேரை மாநாட்டுக்கு அழைத்து வந்திருந்தோம். அடுத்த முறை அரங்கு அமைப்போம்” என்றார்.

நம் அரசுக்குத்தான் எம்.ஜி.ஆர் விழா நடத்தி பெருமை பேசவே நேரம் போதவில்லையே!

- த.ஜெயகுமார், படங்கள்: பி.இரா. நித்தின் டிராவிட்