ஒரு பெருநகரத்தின் ஹோட்டல்களில், உலகின் எந்த நாட்டு உணவையும் ருசித்துவிட முடியும். ஆனால், ஒரு நோயாளிக்குப் பசிதீர்க்கும் சுடுகஞ்சி மட்டும் கிடைக்காது. உயிரை இழுத்துப் பிடிக்கும் நம்பிக்கையோடு, எங்கோ தொலைதூர கிராமத்திலிருந்து நகரத்து அரசு மருத்துவமனைகளை நாடிவரும் பலருக்கு மருந்துகூடக் கிடைத்துவிடும்; உணவுதான் சிக்கல். சமயங்களில், நோயாளிக்குக்கூட பால், பிரெட் என ஏதோ ஒன்று கிடைத்துவிடும். அவரைப் பார்த்துக்கொள்ள வந்திருக்கும் உறவுகளைப் பசி தூங்கவிடாமல் செய்யும். பஸ் செலவுக்கு மட்டுமே பணம் எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைகளின் படியேறும் மக்கள் நூற்றுக்கணக்கில் இங்கு உண்டு. திருச்சி பொன்மலையைச் சேர்ந்த ரவீந்திரகுமார், இவர்களுக்கு உணவு வழங்குவதை ஒரு தவம்போலச் செய்துவருகிறார்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு பகல் 12 மணிக்கு இவரின் வேன் வருகிறது. நோயாளிகள், அவர்களைப் பார்த்துக் கொள்ள வந்திருக்கும் உறவுகள், வயதானவர்கள் என சுமார் 350 பேர் காத்திருக்கிறார்கள். வேனிலிருந்து பாத்திரங்கள் இறக்கப்பட்டு, அத்தனை பேருக்கும் சாம்பார் சாதமும் புளியோதரையும் சுடச்சுட பரிமாறப்படுகின்றன. அதேபோல காலையில் நோயாளிகளுக்கு சுடுகஞ்சியும் வந்துவிடும். மழையோ, வெயிலோ, இந்தக் காட்சி ஒருநாளும் மாறாது. திருச்சி மட்டுமின்றி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர் என பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்கள் நெகிழ்ந்து சொல்லும் நன்றி, ரவீந்திரகுமாரை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கும்.

‘‘என் அப்பா கோவிந்தராஜ் ரயில்வேயில் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த மங்காதேவன்பட்டி சொந்த ஊர். திருச்சியில் தங்கி வேலைசெய்தார். அந்த நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி வருவார். அப்போது நோயாளிகளுக்கு சுடுநீருக்காவும், சுடுகஞ்சிக்காகவும் அவர்களின் உறவினர்கள் தவிப்பதைப் பார்த்துள்ளார். என்னதான் மருந்து கொடுத்தாலும், சாப்பிடாவிட்டால் நோய் எப்படி குணமாகும்? அதனால் நோயாளிகளுக்கு சூடாக அரிசிக் கஞ்சியும் சுடுநீரும் இலவசமாக வழங்குவதென்று முடிவுசெய்துள்ளார். எங்களுடைய வயலில் விளைந்த நெல், இப்படி அரிசிக் கஞ்சிக்காகவே பயன்பட்டது.

நான் என் அப்பாவுக்கு உதவியாக இருந்தேன். எனக்கும் ரயில்வேயில் வேலை கிடைத்தது. கைநிறையச் சம்பளம் கிடைத்தாலும், அப்பாவுக்கு உதவியாக இருந்து அன்னதானம் வழங்குவதில் கிடைத்த மனநிறைவு அதில் இல்லை. அப்பா காலமான பிறகு, இந்தப் பணியைத் தொடர வேண்டும் என்று முடிவுசெய்து, ரயில்வே வேலையைராஜினாமா செய்துவிட்டேன்.

இங்கு சிகிச்சைக்கு வரும் பலரும் ஏழைகள். ஒரு வாரம் முதல் 15 நாள்கள்வரை தங்கியிருக்க வேண்டிவரும். அப்போது, உணவுக்காகச் சிரமப்படுவார்கள். அவர்களின் பசியைப் போக்குகிறோம். அவர்களின் வயிறு நிறையும்போது, எனக்கு மனசு நிறைகிறது. இந்த உணர்வுதான் தொடர்ந்து என்னை இந்தப் பணியைச் செய்ய வைக்கிறது.

நானும் என் குடும்பத்தினரும் மட்டுமல்ல, இதற்காக 30-க்கும் மேற்பட்ட அன்பர்கள் தங்களின் உடலுழைப்பைக் கொடுக்கிறார்கள். ‘ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை’ என்ற அமைப்பை உருவாக்கி, இந்தச் சேவையைத் தொடர்கிறோம். பள்ளி நாட்களில் பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைத்துவிடுகிறது. விடுமுறை நாளில் அவர்கள் என்ன செய்வார்கள்? அதற்காக எங்கள் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குகிறோம். இதைப் பார்த்த பலரும் தங்களின் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது எங்களுக்கு உதவுகிறார்கள். எவ்வளவு பொருளாதாரச் சிக்கல்கள் வந்தாலும், உணவு வழங்குவதை நிறுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் உயிர் உள்ளவரை இந்தப் பணியைத் தொடர்வேன்.’’ - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகச் சொல்கிறார் ரவீந்திரகுமார்.

தினமும் அதிகாலையில் எழுந்துவிடுகிறார் இவர். மனைவி ரேவதி உதவியுடன் சுடுகஞ்சி தயாரித்து, அதை, காலை ஆறு மணிக்கெல்லாம் கொண்டுவந்து வழங்குகிறார். மீண்டும் வீட்டுக்குச் சென்று மதிய உணவைத் தயாரிக்கும் வேலையில் இறங்குகிறார். சாம்பார் சாதம், புளியோதரை, தக்காளி சாதம் என தினமும் விதவிதமான உணவுகளைத் தயாரித்து, வேனில் எடுத்துவந்து வழங்குகிறார். எளிமையான அந்த உணவில் அன்பும் அக்கறையும் கலந்திருப்பதால் சுவை பல மடங்கு கூடிவிடுகிறது.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்