தமிழில் எழுதவோ, படிக்கவோ, பேசவோ தெரியாத பிற மாநிலத்தவர்களுக்கும் தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளைப் பெருந்தன்மையாக வழங்கியிருக்கிறது எடப்பாடி அரசு.

அரசின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதற்கான எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செப்டம்பர் 16-ம் தேதி நடத்தியது. இதில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “மாநிலப் பணிக்கு வேறு மாநிலத்தவரை எடுத்து, தமிழக இளைஞர்களுக்கு அரசு துரோகம் செய்துள்ளது. எந்திரவியல் பொறியியல் துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை. அதில் பொதுப் பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளிமாநிலத்தவர். 118 மின்னணு தொடர்பியல் துறை விரிவுரையாளர்களில் பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளிமாநிலத்தவர். இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறைக்குத் தேவைப்பட்ட மூன்று பேரில், ஒருவர் வெளிமாநிலத்தவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்குரிய பிரிவுகளின்கீழும் பல வெளிமாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். எனவே, இந்தத் தேர்வையும் ரத்துசெய்துவிட்டு, புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும்’’ என்றார்.

“தேர்வு வாரியத்தின் விதிப்படியே வெளிமாநிலத்தவர் வந்துள்ளனர் என வாதிடுகிறார்கள். ஆனால், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வெளிமாநிலத்தில் இருக்கும்போது, பொதுப்பிரிவில் விண்ணப்பித்துத் தேர்வு எழுதலாம் என்றுதான் அந்த விதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பிடச் சான்றிதழ் அடிப்படையில்தான் இந்தத் தேர்வில் வெற்றிபெற்றோர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்’’ என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பழனிமுத்து.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் பேசினோம். “பொதுப்பிரிவில்தான் வெளிமாநிலத்தவர் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களால், நம் மாணவர்களுக்கான 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எந்தப் பிரச்னையுமில்லை. ஏற்கெனவே உள்ள விதிகளின் அடிப்படையில்தான், தேர்வு நடந்துள்ளது. அவர்கள், இரண்டு ஆண்டுக்குள் தமிழ்த் தேர்வை எழுதித் தேர்ச்சிபெற்றால்தான், பணி நிரந்தரம் செய்யப்படுவர். இனி வரும் காலங்களில், இப்படிப் பிரச்னை எழாமல் தடுக்க, தேர்வு விதிகளில் மாற்றம் கொண்டுவருவதுபற்றி முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்