“கல்லூரிக்கே செல்லாமல் சட்டம் படிப்பவர்களால்தான் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகியுள்ளது. இதைத் தடுக்காவிட்டால், வழக்கறிஞர் தொழிலை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சமீபத்தில் ஆதங்கப்பட்டார். இதையடுத்து, அகில இந்திய பார் கவுன்சிலின் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத 1,025 பேர்... 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ முடிக்காமல் நேரடியாக திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற 742 பேர் என மொத்தம் 1,767 வழக்கறிஞர்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடைவிதித்தது. இந்தத் தடையில், குளறுபடிகள் நடந்திருப்பதாக இளம் வழக்கறிஞர்கள் சிலர் நம்மிடம் தெரிவித்தனர்.

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ், “நான் கோவை சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பு முடித்து, வழக்கறிஞர் ஆவதற்கான அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து, 2015-ல் வழக்கறிஞராகப் பதிவுசெய்தேன். அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளேன். ஆனால், என்னை பார் கவுன்சில் சஸ்பெண்டு செய்துள்ளது. பார் கவுன்சில் வெளியிட்ட பட்டியலால் எங்கள் குடும்பத்தின் நிம்மதியே தொலைந்துவிட்டது. வெளிமாநிலங்களில் சட்டம் படித்தவர்களைத்தான், நீதியரசர் கிருபாகரன் அப்படிக் குறிப்பிட்டார். ஆனால், முறையாகப் படித்த என்னைப் போன்றவர்களை சஸ்பெண்டு செய்தது நியாயமே இல்லை” என்றார் வேதனையுடன்.

திருச்சி உறையூரைச் சேர்ந்த மணிகண்டன், “மிகவும் சிரமப்பட்டுப் படித்து வழக்கறிஞர் ஆனேன். 2015-ல், அகில இந்திய பார் கவுன்சிலின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பட்டியல் வெளியான பிறகு, என்னைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். பார் கவுன்சில் அவசரகதியில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்றார்.

இதுபற்றி பார் கவுன்சில் தலைவர் விஜய் நாராயணனிடம் கேட்டபோது, “நாங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் தவறு நடந்துள்ளதா?” என அதிர்ச்சியோடு அனைத்து விவரங்களையும் கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமாரிடம் பேசினோம். ‘‘பட்டியலில் சில தவறுகள் நடந்திருப்பது உண்மைதான். வழக்கறிஞர்கள் சிலர், அகில இந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அதுகுறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. அதனால்தான் இதுபோன்ற தவறுகள் நடந்துள்ளன. நீங்கள் குறிப்பிட்ட கணேஷ், மணிகண்டன் ஆகியோர்மீதான நடவடிக்கையைத் திரும்பப்பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். இதுபோல, சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலைத் தொடர்புகொண்டால், நடவடிக்கை நிச்சயம் திரும்பப்பெறப்படும்” என்றார்.

மறுநாளே பார் கவுன்சிலின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘தொழில்நுட்பக் கோளாறால் குளறுபடிகள் நடந்துள்ளன. இதில் துளியும் உள்நோக்கம் இல்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“திடீரென தடை விதித்ததால் அதிர்ச்சியான நாங்கள், என்ன செய்வதென்று தெரியாமல் ஜூ.வி-யைத் தொடர்புகொண்டோம். ஜூ.வி முயற்சியால் 39 வழக்கறிஞர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது” என மணிகண்டனும், கணேஷும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

- சி.ய.ஆனந்தகுமார்