மனசாட்சி உறுத்தி ஒரு காவல் அதிகாரி உண்மையை உரக்கச் சொல்லும்போது, காரணமே இல்லாமல் தண்டிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு அந்தத் தருணம் நெருங்கிவருகிறது. காரணம், சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்க மனு.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வது குறித்துத் தமிழக அரசு இயற்றிய தீர்மானம் தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை உச்ச நீதிமன்றம் இப்போது கோரியுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், 2013-ல் பேரறிவாளனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கொடுத்த எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தையும் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கிய வழக்கறிஞர் சிவக்குமார், “பேரறிவாளன் இன்றுவரை சிறையில் இருப்பதற்கான காரணம், அவர் கொடுத்த வாக்குமூலம்தான். அதனை எழுத்துப்பூர்வமாகப் பதிவுசெய்தவர் தியாகராஜன். பேரறிவாளன், ‘நான் 9 வோல்ட் பேட்டரி இரண்டு வாங்கிக் கொடுத்தேன்’ என்று சொன்னதை மட்டும் பதிவு செய்துவிட்டு, ‘எதற்காக பேட்டரி வாங்கிவரச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது’ என்று கூறியதைப் பதிவு செய்யாமலேயே விட்டுவிட்டார் தியாகராஜன். உண்மையில் அதுகுறித்து பேரறிவாளனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைப் பதிவு செய்தால் அது பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு வகை செய்யும் வாக்குமூலமாக மாறி விடும் என்பதால் தியாகராஜன் தவிர்த்துவிட்டார். தடா சட்டப்படி இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், விசாரணை அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலமானது, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்துக்கு இணையானதாகக் கருதப்படும். அதனால்தான் ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். அதனால்தான் அவருக்குத் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தியாகராஜன் எங்களைத் தொடர்புகொண்டு, ‘நான் தவறு செய்துவிட்டேன்... பேரறிவாளன் சொன்னதை முழுதாக எழுதியிருந்தால் இப்படியான விபரீதங்களே ஏற்பட்டிருக்காது’ என்று சொன்னார். நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தரவும் முன்வந்தார். ராஜீவ் கொலை நிச்சயம் தவறுதான் என்றும், அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்றும் பேரறிவாளன் முதல்நாள் தொடங்கியே கூறி வருகிறார்.

அதனால்தான் அவரே முன்வந்து தனது தவற்றை ஒப்புக்கொண்டார். இதுதவிர, இந்தக் கொலையில் உள்ள சர்வதேசத் தொடர்புகளை விசாரிப்பதற்காக பல்நோக்குக் கண்காணிப்புக் குழு ஒன்றை 1999-ல் அரசு அமைத்தது. 20 வருடங்களுக்கு மேலாகியும் ‘ராஜீவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எப்படிக் கிடைத்தது’ என்பது தொடர்பான விசாரணையை அவர்கள் தொடங்கவில்லை. ஒருவேளை அது விசாரிக்கப்பட்டிருந்தால், அந்த வெடிகுண்டில் பேட்டரி போடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரியவரும் நிலையில், பேரறிவாளன் இவ்வளவு ஆண்டுகள் சிறையில் இருந்ததே நீதியற்றதாகிவிடும். உச்ச நீதிமன்றம் ஒருபடி மேலே சென்று, மாநில அரசின் தீர்மானம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும் விளக்குமாறு கேட்டுள்ளது” என்றார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இப்போது வசித்துவரும் தியாகராஜனைத் தொடர்புகொண்டு பேசினோம், “பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதினேழு பேரின் வாக்குமூலங்களில் ஒன்றாகவே பதிவு செய்தேன். ஒரே ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் மட்டும் கணிக்கமுடியாத ஒரே ஒரு தவறு நேர்ந்தது. வழக்குத் தீவிரமடைந்த நிலையில் நான் அந்தத் தவற்றைக் குறிப்பிட்டிருந்தால், பேரறிவாளனுக்குச் சாதகமாக இருந்திருக்கும். ஆனால், வழக்கே பெருத்த ஆட்டம் கண்டிருக்கும். அதனால் அப்போது கூறவில்லை. ஆனால், பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை என்பது நான் சிறிதும் எதிர்பார்க்காதது. அதனால்தான் நானே முன்வந்து, நடந்த தவற்றைப் பதிவுசெய்தேன். என் மனுவினால் அற்புதம்மாளின் போராட்டத்துக்குப் பதில் கிடைக்கும் என்றால் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார். “மகாத்மா காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கே அவர்கள் தண்டனை அனுபவித்த 14 வருட காலங்களுக்குப் பிறகு மன்னிப்பு வழங்கப்பட்டது. ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் அதற்கு இரண்டு மடங்கு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். 2014-ம் ஆண்டு தமிழக அரசு ஏழு பேரை விடுதலை செய்யக் கூறி இயற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு பதில் எதுவும் கூறாததால் இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது. கருணைகூர்ந்து நீங்களும், ராகுலும், பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினால் இதில் விரைந்து தீர்வு எட்டப்படலாம்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் சேர்ந்து, ஏழு பேர் விடுதலைக்கு வழிவகுக்குமா?

- ஐஷ்வர்யா