ரசகுல்லா சண்டை!

தண்ணீருக்காக அண்டை மாநிலங்கள் நம்மோடு சண்டை போடுவது போல, ரசகுல்லாவுக்காக மேற்கு வங்காளமும் ஒடிசாவும் அடித்துக்கொள்கின்றன. ‘எங்களின் அடையாளம்’ என வங்காளிகள் பெருமை பேசிவந்த நிலையில், ‘பூரி ஜெகந்நாதருக்கு 12-ம் நூற்றாண்டிலிருந்து பிரசாதமாகப் படைக்கிறோம்’ என்று சொல்லி ரசகுல்லாவுக்குப் புவிசார் குறியீடு உரிமை கேட்டது ஒடிசா. உடனே மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கி எழுந்து, அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் சர்ச்சையைக் கிளப்பினார். இரண்டு மாநிலங்களும் கமிட்டி அமைத்தன; வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ‘பெங்காலி ரசகுல்லா’வுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ‘‘ஒடிசா ரசகுல்லாவுக்கும் 800 ஆண்டு பாரம்பர்யம் உள்ளது. எனவே, ஒடிசா தங்கள் ரசகுல்லாவுக்குத் தனியாக உரிமை கோரலாம்’’ என்றும் சொல்லப்பட்டிருப்பதில் மம்தா அப்செட்.

‘‘இப்போ தைரியமா வர்றாங்க!’’

தாவூத் இப்ராஹிம் மற்றும் தலைமறைவாக இருக்கும் அவரின் உறவினர்களின் சொத்துகளை சஃபேமா சட்டப்படி பறிமுதல் செய்திருக்கிறது மத்திய அரசு. இப்படிப் பறிமுதல் செய்யும் சொத்துகளை நிதித்துறை மூலம் ஏலம் விடுவது வழக்கம். ஆனால், தாவூத்தின் சொத்துகளை ஏலம் விட்டாலும், பயத்தில் யாருமே வாங்க வருவதில்லை. ஆனால், 2015-ல் இந்த நிலைமை மாறியது. தாவூத்தின் காரை 32,000 ரூபாய்க்கு வாங்கிய இந்து மகாசபை என்ற அமைப்பைச் சேர்ந்த சுவாமி சக்கரபாணி, அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தாவூத்தின் மூன்று சொத்துகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ‘டெல்லி ஜைகா’ என்ற பெயரில் செயல்பட்ட ஒரு ஹோட்டல், ஷப்னம் கெஸ்ட் ஹவுஸ், தமர்வாலா பில்டிங் என்ற நான்கு மாடிக் கட்டடம் ஆகியவை 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளன. தெற்கு மும்பையில் செயல்பட்டுவரும் சைஃபி புர்ஹானி அறக்கட்டளை இதை ஏலம் எடுத்துள்ளது. ‘‘முன்பெல்லாம் இருந்த பயம் இப்போது போய்விட்டது. இந்த ஏலத்தில் 15 பேர் தைரியமாகப் பங்கேற்றார்கள். இது நல்ல மாற்றம்’’ என்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள்.

அதிபர் மகளால் அடிதடி!

உலக தொழில்முனைவோர் உச்சி மாநாடு, இந்த மாதம் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளில் கலந்துகொள்ள பெரும் போட்டியெல்லாம் இருக்காது. ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்கும் 400 பேரில் ஒருவராக இருப்பதற்கு சுமார் 40,000 பேர் போட்டி போடுகிறார்கள். காரணம், அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா ட்ரம்ப்.

தன் பிசினஸைக் கவனித்துவரும் இவான்கா, அதிபர் ட்ரம்ப்க்கு ஆலோசகராகவும் இருக்கிறார். பெரிய தொழிலதிபர் பட்டாளம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி இந்த மாநாட்டுக்கு வருகிறார் அவர். இந்தியாவில் முதல்முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. மோடி தொடங்கி வைக்கிறார். ‘இவான்காவிடம் பேசி அறிமுகம் செய்துகொண்டால் எதிர்காலத்துக்குப் பயன்படுமே’ என்ற ஆசையில் இந்த மாநாட்டில் பங்கேற்க பலரும் மோதுகிறார்கள்.

அது நான் இல்லை!

குஜராத் சட்டமன்றத் தேர்தலில், தொடர்ந்து ஆறாவது முறையாக வென்று ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் பி.ஜே.பி-க்குப் பெரும் தலைவலியாக இருக்கிறார் ஹர்திக் படேல். தனது படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்திய ஹர்திக் படேல் இப்போது ‘‘பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பதே என் லட்சியம்’’ என்று பேசி வருகிறார். ‘‘இதனால் என்மீது கோபம் கொண்டு, மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச சி.டி-க்களை வெளியிட பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது’’ என்று ஹர்திக் இரண்டு வாரங்களுக்கு முன்பே சொன்னார்.

அவர் சொன்னது போலவே, ஹர்திக் பெண்களோடு இருப்பது போன்ற இரண்டு காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ‘‘அது நான் இல்லை. இவற்றை மார்ஃபிங் செய்து உருவாக்கியதில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்குப் பங்கு இருக்கிறது’’ என ஹர்திக் குற்றம் சாட்ட, ‘‘ஹர்திக் எப்படிப்பட்டவர் எனப் படேல் சமூகத்தினர் புரிந்துகொண்டார்கள். இனி அவரை அவர்கள் நம்ப மாட்டார்கள்’’ என பி.ஜே.பி தலைவர்கள் சொல்கிறார்கள். ஹர்திக்கோ, ‘‘இந்த வீடியோக்கள்மூலம் குஜராத் பெண்களை பி.ஜே.பி இழிவுபடுத்தியிருக்கிறது’’ எனக் கொதிக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் வருமோ?