இப்போ இன்ஷூரன்ஸ் இருக்கு!

நெட்பேங்க்கிங்கில் பணத்தை இழந்தாலோ, ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றப்பட்டாலோ, இன்னும் இதுபோன்ற சைபர் க்ரைம்களில் ஏதேனும் இழப்பைச் சந்தித்தாலோ, அவற்றுக்கெல்லாம் இழப்பீடு பெற முடியுமா? பெருநிறுவனங்கள் தங்களை சைபர் க்ரைம் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்ள, இன்ஷூரன்ஸ் செய்துகொள்ள முடியும். ஆனால், தனிநபர்களுக்கு அது இல்லாமல் இருந்தது. இப்போது,இந்தியாவில் ‘சைபர் சேஃப் பாலிசி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த பாலிசியை ஒரு லட்ச ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவர் எத்தனை மணி நேரம் ஆன்லைனில் செலவிடுகிறார், அவர் என்னென்ன மாதிரியான பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்கிறார் என்பதையெல்லாம் பொறுத்து, பிரீமியம் தொகை இருக்கும். வெறுமனே பண இழப்பை ஈடுசெய்வது மட்டுமல்ல... உங்களது ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை யாரோ ஹேக் செய்து, தப்பான கமென்ட் போட்டு உங்களை வழக்கில் மாட்டிவிட்டால், அதற்கான வழக்குச் செலவுகளைக்கூட, இதில் பெற முடியும்.

டிஜிட்டல் பரிவர்த்தனையால் திருட்டு அதிகம்!

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் கோயில் திருவிழா, ரயில்வே பிளாட்பாரம் போன்ற இடங்களில்தான், செயின் திருடர்கள் முதல் பிக்பாக்கெட் ஆசாமிகள் வரை ரவுண்டு கட்டுவார்கள். 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டபோது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தினார்கள். ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் இருக்கும் பிரச்னைகளைத் தெரியாத ஒரு பெருங்கூட்டம் உள்ளே வந்தது. ‘‘இது சைபர் க்ரைம் ஆசாமிகளுக்கு வசதியாகிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட ஓராண்டில் சைபர் க்ரைம் வழக்குகள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளன’’ என லக்னோ மாநகர போலீஸ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. எளிய மனிதர்கள் பலரும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை இழந்துள்ளார்கள். இவர்களில் பலரும் முதியவர்கள். பெரும்பாலானவர்கள் டெபிட் கார்டு மோசடியில் பணத்தை இழந்திருக்கிறார்கள்.

இதே காலத்தில், ஹைதராபாத் நகரத்தில் சைபர் குற்றங்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கார்டு விவரங்களைத் திருடுவது... பணப் பரிவர்த்தனைக்காக அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டைத் திருடி, அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை அபகரிப்பது போன்ற குற்றங்கள்தான் அதிகம். இரண்டு நகரங்களிலேயே இப்படி என்றால், இந்தியாவின் நிலைமை என்ன?

ஆதாரால் அதிகமாகிவிட்டது!

பால் கார்டு, போஸ்ட் கார்டு தவிர எல்லா கார்டுகளையும் ஆதார் விவரங்களுடன் இணைக்கச் சொன்னதில் பிரச்னை இல்லை. ஆனால், ‘‘வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைக்கச் சொன்னதால்தான், சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகமாகியுள்ளன’’ என்கிறார், சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் அமைப்பின் டிஜிடல் டாஸ்க் ஃபோர்ஸ் இயக்குநர் ரோஹன் நியாயதிஷ்.

‘‘இப்போது டிரெண்டிங்கே இந்த டைப் குற்றங்கள்தான். ‘வங்கியிலிருந்து பேசுகிறோம். இன்னமும் உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. உங்கள் கணக்கையே முடக்கப்போகிறோம். அத்துடன் டெபிட் கார்டையும் முடக்கிவிடுவோம். பணமே எடுக்க முடியாது’ என மிரட்டுவார்கள். வாடிக்கையாளர் என்ன ஏது என்று புரியாமல் தவிக்கும்போது, அவர்களின் டெபிட் கார்டு மற்றும் பின் நம்பர் விவரங்களை வாங்கிவிடுகிறார்கள். அதை வைத்தே ஆன்லைன் பரிவர்த்தனை செய்து, அக்கவுன்ட்டில் இருக்கும் மொத்தப் பணத்தையும் சுருட்டி விடுகிறார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் ரோஹன்.

வேற போலீஸ் வரணும்!

கேடி கபாலியையும், பிச்சுவா பக்கிரியையும் முட்டிக்கு முட்டி தட்டி, உண்மையை வரவழைத்துவிடலாம். இதை எந்த போலீஸ்காரரும் செய்ய முடியும். ஆனால், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே தனி மூளை தேவைப்படுகிறது. எனவே, ‘சைபர் க்ரைம் துப்பறிவாளர்களாக ஐ.ஐ.டி-யில் படித்தவர்களையும், கம்ப்யூட்டர் பட்டதாரிகளையும் வேலைக்கு எடுங்கள்’ எனக் காவல்துறைக்கு யோசனை சொல்லியிருக்கிறது நிதி ஆயோக் அமைப்பு.

இந்தியாவில், போலீஸ் அமைப்பை இன்னும் புத்திசாலித்தனமாக மாற்றியமைப்பது தொடர்பான ஆலோசனைகளை நிதி ஆயோக் வழங்கியுள்ளது. அவற்றில், முக்கியமான பாயின்ட் இதுதான். ‘சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் ஒவ்வொரு மாநில போலீஸின் குற்றப்பிரிவிலும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் இருக்க வேண்டும். இவர்கள், வழக்கமான போலீஸ் யூனிஃபார்ம் அணியாமல், சாதாரண உடையிலேயே இருக்கலாம்’ எனவும் நிதி ஆயோக் சொல்கிறது.

இன்ஜினீயரிங் முடித்து, வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு போலீஸ் வேலையே தேடிவரப்போகுது!

‘இந்த மொபைல் எண்ணுக்குப் பரிசு விழுந்திருக்கிறது’, ‘இந்த மொபைல் வெறும் ஒரு ரூபாய்தான்’, ‘உங்கள் மின்னஞ்சல் 10 மில்லியன் டாலர்கள் பரிசு பெற்றுள்ளது’ என்றெல்லாம் வரும் டுபாக்கூர் ரக விளம்பரங்களைத் திறக்கவோ, அவற்றுக்குப் பதிலளிக்கவோ கூடாது. அவை, முழுக்க முழுக்க போலியானவை. இது குறுஞ்செய்திகளுக்கும் பொருந்தும்.

பல இடங்களில் இன்று இலவச வைஃபை கிடைக்கிறது. அதுபோன்ற வைஃபைகளைப் பயன்படுத்தும்போது, ஆன்லைன் ஷாப்பிங், இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றைச் செய்ய வேண்டாம். பாதுகாப்பற்ற வைஃபை இணைப்புகளைத் தவிர்ப்பதே நல்லது.

சமூக வலைதளங்கள், ஷாப்பிங் தளங்கள், வங்கிச் சேவைகள் போன்ற எதற்குமே எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை வைக்கக்கூடாது. இன்றும்கூட உலகில் பல லட்சம் பேர் வைக்கும் பாஸ்வேர்டு எது தெரியுமா? ‘Qwerty’ என்பதுதான். எனவே, 12345678, 111111, 1234567890, 1234567, password போன்ற எளிதான பாஸ்வேர்டுகளைத் தவிர்க்கவும்.

ஒரே பாஸ்வேர்டை இமெயில் உள்பட பல கணக்குகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். உங்களுக்கு ஞாபகம் இருக்க வேண்டுமே என்பதற்காக இப்படி வைத்துக்கொள்ளும் பாஸ்வேர்டை யாராவது தெரிந்துகொண்டால், உங்களின் அத்தனை தகவல்களும் பணமும் பறிபோய்விடும்.

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தேவையற்ற அல்லது போலியான ஆப்களை டவுன்லோடு செய்யவேண்டாம். நிறுவனங்களின் அதிகாரபூர்வ ஆப்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்.