சென்னைக்கும் இருட்டு இணையம் தொடர்பான இந்த செய்திக்கும் கிறக்கமான ஒரு நெருக்கம் இருக்கிறது. வெறும் 42 கிராம் போதைப்பொருள். MDMA எனப்படும் இந்த `பார்ட்டி டிரக்’கின் மதிப்பு, சுமார் 2 லட்ச ரூபாய். இதை வைத்திருந்த கமல் கல்ரா, மகேஷ் கோயல் என்ற இரண்டு பேரை நவம்பர் 5-ம் தேதி கைது செய்தது டெல்லி போலீஸ். ‘‘எங்கே வாங்கினீர்கள்?’’ என்றதற்கு ‘‘ஆன்லைனில் ஆர்டர் செய்தேன்’’ என்றார் மகேஷ் கோயல். ‘ஆன்லைனில் போதைப்பொருள் கிடைக்கிறதா’ என போலீஸார் திகைத்தபோது, ‘‘இருட்டு இணையத்தில் பிட்காயின் பயன்படுத்தி ஆர்டர் செய்தேன். நான் சொன்ன அட்ரஸில் அவர்கள் டெலிவரி செய்தார்கள்’’ என்றார் மகேஷ்.

அவர் எங்கிருந்து இதைத் தெரிந்துகொண்டார்? ‘‘சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த பார்ட்டிக்குப் போனேன். அங்கே பலரும் பார்ட்டி டிரக் பயன்படுத்தினார்கள். ‘எங்கே கிடைத்தது’ எனக் கேட்டபோது, அவர்கள்தான் இருட்டு இணையத்தில் வாங்கியதைச் சொன்னார்கள்’’ என வாக்குமூலம் கொடுத்தார் மகேஷ்.

கொலை செய்யக் கூலிப்படைகள், போதை மற்றும் போலி மருந்துகள் மார்க்கெட்டிங், சூதாட்டம், திருட்டு மற்றும் கடத்தல் பொருள்கள் விற்பனை, ஆயுத பிசினஸ், சிலைகள் மற்றும் அரிய விலங்குகளின் வியாபாரம், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம்... குற்றங்கள் இன்னும் எத்தனை உண்டோ, அத்தனையும் செய்யும் தாதாக்களை நிஜ வாழ்வில் பார்க்கிறோம். நிஜ தாதா உலகுக்கு மேலாக ஓர் இருட்டு இணையம் (Dark Web) அதே காரியங்களைச் செய்தபடி இயங்கி வருகிறது. இன்டர்போல் (Interpol) மற்றும் பல நாட்டு போலீஸாருக்கும் கவலை தரும் ஒரு விஷயம், இருட்டு இணையம்.

‘Dark web’ இணையதளங்களுக்கு Google chrome, Internet explorer போன்ற பிரவுசர்களின் வழியே செல்ல முடியாது. அதற்கென கிடைக்கும் Tor பிரவுசர்களையே பயன்படுத்த வேண்டும். இருட்டு இணையத்தில் எல்லோருமே அட்ரஸ் இல்லா பேர்வழிகள். விற்பனையாளர்களையோ, வாங்குபவர்களையோ அடையாளம் காண்பது கடினம். போலீஸ் போன்ற புலனாய்வு அமைப்புகளின் பார்வையிலிருந்து தப்பிக்கலாம்; சங்கேத மொழியில் தகவல் பரிமாறலாம்; பிரபல பிராண்டுகளின் போலிகளை வாங்கலாம்.

அமேசான், ஃப்ளிப்கார்ட் ரீதியில் இங்கு இ-காமர்ஸ் வலைதளங்கள் இயங்குகின்றன. என்ன, இங்கு விற்கப்படுபவை எல்லாம் தடை செய்யப்பட்ட பொருள்கள்.

சுமார் 21 நாடுகளைச் சேர்ந்த சைபர் க்ரைம் போலீஸார் இணைந்து ‘ஆபரேஷன் ஒனிமஸ்’ (Operation Onymous) என்ற பெயரில் நடத்திய ரகசிய ரெய்டில் சுமார் 619 இருட்டு இணைய தளங்கள் முடக்கப்பட்டு, 9,00,000 யூரோ மதிப்புடைய பிட்காயின்கள், 1,80,000 யூரோ மதிப்புடைய போதை மருந்துகள், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், Open Bazaar என்ற பெயரில் புதிய இணையதளம் பிரபலமாக ஆரம்பித்தது.

இருட்டு இணையத்தில் கிடைக்காத பொருள்களோ, சேவைகளோ இல்லை. நமது கற்பனைகளை விடவும், அது பயங்கரமான உலகம். பலரிடமிருந்து திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்களை விற்பனை செய்ய ஒரு தளம் உண்டு. ஆதரவற்ற, குடியுரிமை இழந்த அகதிகளைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து, பல பேர் உயிரிழக்க இந்தத் தளம் காரணமானது. Euroarms என்றொரு இருட்டு இணையதளம், விதவிதமான ஆயுதங்களை விற்பனை செய்துவந்தது. பணத்துக்கு பதிலாக பிட்காயின்களைப் பயன்படுத்தி சூதாடக்கூடிய சில இருட்டு இணையதளங்களும் வெற்றிகரமாக இயங்கிவந்தன. White wolves, C’thuthlu போன்ற இருட்டு இணையதளங்கள், கூலிப்படைகளின் சேவைகளை விற்பனை செய்தன. இதுபோன்ற Assassination Market என்ற இருட்டு இணையதளம் மிகவும் பேசப்பட்டது.

இன்டர்போல், அமெரிக்காவின் FBI, ஐரோப்பாவின் யூரோபோல் போன்ற அமைப்புகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக ஓரளவுக்கு இருட்டு இணையம் அடங்கிவருகிறது. சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் போதை மருந்துகள் உள்பட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த Alphabay என்ற இருட்டு இணைய இ-காமர்ஸ் தளத்தைக் காவல்துறை அமைப்புகள் சில மாதங்களுக்குமுன் முடக்கின. அதனுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டனர். நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளின் காவல்துறையினர் Hansa என்ற இருட்டு இணைய இ-காமர்ஸ் தளத்தை முடக்கினர். இதற்குப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களைப் பறிமுதல் செய்து, பல வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளைக் கண்டறிந்து வளைத்தது போலீஸ்.

இருட்டு இணையத்தால் தீமைகள் மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. பல்வேறு நாடுகளில் ஊழலை அம்பலப்படுத்த நினைக்கும் நேர்மையாளர்கள், சர்வாதிகார நாடுகளில் கொடூரங்களை உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் பாதுகாப்பாக தகவல் பரிமாறிக்கொள்ளும் இடமாக இது இருக்கிறது. தீவிரவாதிகளைத் தேடும் காவல் அதிகாரிகள், தேசவிரோதிகளைத் தேடும் ராணுவத்தினர் போன்றவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். கெட்டவர்கள் நிறைய இருக்கும் இடத்தில்தானே அவர்களுக்கு வேலை அதிகம்!

- ரமேஷ் பாலசுப்ரமணியன்