சினிமாக்களில் ஹீரோக்களாகவும், காமெடியன்களாகவும் துப்பறியும் நிபுணர்கள் வருவார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிஜ உலகக் குற்றங்களைவிட, இணையக் குற்றங்கள்தாம் அதிகமாக நடப்பதால், அங்குதான் துப்பறியும் நிபுணர்கள் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஒரு பெரும் படையாகவே கிளம்பிவிட்டனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும், தங்கள் நிறுவனங்கள்மீது இணையத்தாக்குதல் நிகழ்ந்தால், உடனடியாக போலீஸில் புகார் செய்யத் தயங்குகின்றன. அதற்கு, மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, சைபர் க்ரைம் போலீஸார்கூட இவர்கள் சொல்வதை முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை என்ற ஆதங்கம்; இரண்டு, நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் வெளியில் கசிந்துவிடக்கூடும் என்ற பயம்; மூன்று, போலீஸில் புகார் செய்தால், மீடியாவில் தகவல் வெளியாகி நிறுவனத்துக்குச் சங்கடம் ஏற்படுமே என்கிற தயக்கம்.

இந்த இடைவெளியைத்தான், சைபர் டிடெக்டிவ்கள் நிரப்புகிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த தர்ஷன் சாந்தமூர்த்தி, மும்பையில் இருக்கும் சாஹிர் ஹிதாயதுல்லா மற்றும் ரவிராஜ் தோஷி, டெல்லியைச் சேர்ந்த சாகேத் மோடி போன்றவர்களின் நிறுவனங்கள், இதில் கொடிகட்டிப் பறக்கின்றன.

‘உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாது. வேற... வேற... வேட்டைக்காரன் வேணும்’ என்ற விஜய் டயலாக் போலவே இவர்களும் பேசுகிறார்கள். கடந்த ஆண்டு, புனேவில் ஒரு நிறுவனம் ரேன்சம்வேர் தாக்குதலுக்கு ஆளானது. அவர்கள், உடனே போலீஸில் புகார் செய்து, ‘‘எங்கள் நெட்வொர்க்கை முடக்கிவிட்டனர். பிட் காயினில் பணயத்தொகை கேட்கிறார்கள்’’ என்று சொன்னார்கள். இதை, வழக்கமான ஒரு கடத்தல் கேஸ் போல நினைத்த சைபர் க்ரைம் போலீஸார், ‘‘பணத்தை வாங்குவதற்கு அவர்களை ஏதாவது ஓர் இடத்துக்குக் கூப்பிடுங்கள். மடக்கிப் பிடித்துவிடலாம்’’ என்றனர். புகார் கொடுக்கப் போனவர்கள் திகைத்துவிட்டனர். ஆன்லைனில் மிரட்டுகிறார்கள் என்பதும், பிட் காயின் என்பது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் பணம் என்பதும், சைபர் க்ரைம் போலீஸுக்கே தெரியவில்லயென்றால், திகைப்புதானே எழும்! பிட் காயின் பற்றி அவர்கள் விளக்கியபோது, போலீஸாருக்குப் புரியவே இல்லை.

யாரையோ பிடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும் வழக்கமான விசாரணை இங்கு வேலைக்கு ஆகாது. கிரிமினலை முடக்கினால்தான் பிரச்னை தீரும். இதைத்தான், சைபர் டிடெக்டிவ்கள் செய்கிறார்கள். இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தவறான வழியில் இயக்கும் நபர்களை, ‘ஹேக்கர்கள்’ என்பார்கள். சைபர் டிடெக்டிவ்கள் ஒருவகையில், ஒழுக்கமான ஹேக்கர்கள். கச்சிதமாகக் காரியத்தை முடித்துப் பிரச்னையைத் தீர்த்துவைக்கிறார்கள்.

சைபர் க்ரைமில் முக்கியமான பிரச்னையே, பெரும்பாலான கிரிமினல்கள் வெளிநாடுகளிலிருந்து இயங்குவதுதான். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்து, அந்த நாட்டு சைபர் க்ரைம் பிரிவுடன் இணைந்து அவர்களை மடக்குவது சாத்தியமில்லாத விஷயம். ஒவ்வொரு நாட்டிலும் சைபர் குற்றங்களுக்கான சட்டங்கள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. நம் நாட்டில் குற்றம் எனக் கருதும் விஷயம், ரஷ்யாவில் குற்றமாக இருக்காது. அப்புறம் எப்படி அங்கிருந்து குற்றவாளியைப் பிடிக்க முடியும்?

இந்தியா, இதுவரை 37 நாடுகளுடன்தான் ‘குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம்’ செய்துகொண்டிருக்கிறது. இன்னும் எட்டு நாடுகளில், ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், கேட்டால் கைதுசெய்து அனுப்புவார்கள். மொத்தத்தில், இந்த 45 நாடுகளைத் தாண்டி வேறு எங்காவது குற்றவாளி இருந்தால், அவனைப் பிடிக்கவே முடியாது.

இதனால்தான், சட்டப்படியான வழிகளைத் தாண்டி, திறமையுள்ள தனிநபர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த டிடெக்டிவ்கள் பிரச்னையைத் தீர்த்துக்கொடுப்பதுடன், இணையத் தாக்குதல்களிலிருந்து தடுக்கும் பாதுகாப்பு அரண்களையும் அமைத்துக்கொடுக்கிறார்கள்.

அதனால்தான் இவர்களுக்கு மவுசு கூடுகிறது!

- தி.முருகன்

வங்கிகள், இ-வாலட்கள் போன்ற முக்கியமான இணையதளங்களுக்குச் செல்லும்போது, அவற்றின் இணைய முகவரியை சரிபார்க்க வேண்டும். இவற்றின் முகவரியில் ‘https://’ என்ற எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் ‘s’ இல்லாமல் http என்று மட்டுமே இருக்குமானால், அது பாதுகாப்பான இணையதளம் அல்ல.

இந்தியாவில் சைபர் க்ரைம்

உலகில் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வைரஸ் அட்டாக், இணையதள முடக்கம் ஆகியவைபோல, 2014-ம் ஆண்டில் 44,679 இணைய அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தன. 2015-ம் ஆண்டில் 49,455 நிகழ்ந்தன. 2016-ம் ஆண்டில் 50,362 சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தியாவில் இணையப் பாதுகாப்பை உறுதி செய்யும் Indian Computer Emergency Response Team (CERT – In) என்ற அமைப்பிடம் புகார் செய்யப்பட்ட சம்பவங்கள் மட்டுமே இவை.