‘எதை வேண்டுமானாலும் வித்துடுங்க’ என அழைக்கிறது OLX இணையதளம். இதுபோன்ற தளங்களில், உங்களின் பழைய பொருள்களை விற்கலாம்; ஆனால், பதிலுக்குப் பிரச்னையை வாங்கிவிடக்கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஓர் உண்மைச் சம்பவம், இதோ...

பவித்ரா என்ற அந்தப் பெண், OLX இணையதளத்தில் தன் பொருள் ஒன்றை விற்க நினைத்தார். அது, குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லப் பயன்படும் ஸ்ட்ரோலர் (Stroller). நல்ல நிலையில் இருந்ததால், 3,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தார். இரண்டு மாதங்கள் ஆகியும் ஒருவரும் அந்த விளம்பரத்தைச் சீண்டக்காணோம். அப்படி ஒரு பதிவு போடப்பட்டதையே அவரும் மறந்துபோயிருந்தார்.

திடீரென ஒரு நாள், OLX இணையதளத்தின் மெசஞ்சரில் விஷால் என்ற பெயருடன் ஒருவர் சாட் செய்கிறார். ‘அந்த ஸ்ட்ரோலர் இப்போதும் இருந்தால் வாங்கத் தயார். பூனாவில் வசிக்கும் என் தங்கைக்கு அதைப் பரிசளிக்கப்போகிறேன்’ என்று தகவல் அனுப்பினார். ஸ்ட்ரோலர் இருப்பதாக பவித்ராவும் பதில் தர, ‘வங்கி அக்கவுன்ட் நம்பரை வாட்ஸ்அப் மூலம் அனுப்புங்கள். ஆன்லைனில் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுகிறேன்’ என்கிறார் விஷால்.

அக்கவுன்ட் நம்பரை அனுப்பிய மூன்று நிமிடங்களில், பவித்ராவின் செல்போனுக்கு ‘59444’ என்ற எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி. அவரின் அக்கவுன்ட்டுக்கு 13,500 ரூபாய் வந்திருப்பதாக அந்த செய்தி சொன்னது. ‘3,500 ரூபாய்க்கு 13,500 ரூபாய் வந்திருக்கிறதே’ என்று நினைத்து, விஷாலிடம் பவித்ரா வாட்ஸ்அப்பில் கேட்டார். ‘ஸாரி... தவறுதலாக அதிகமாக அனுப்பிட்டேன். 10,000 ரூபாயைத் திரும்ப எனக்கு PayTM மூலம் அனுப்புங்கள்’ என்று கேட்கிறார் விஷால். அதுமட்டுமல்ல... ‘என் அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறார். உடனே அனுப்புங்கள்’ என அவசரப்படுத்தினார்.

உஷார் ஆனார் பவித்ரா. ‘அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் இருப்பவன், நிதானமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வானா?’ குறுஞ்செய்தியை நம்பாமல், ஆன்லைன் பேங்கிங்கில் தன் அக்கவுன்ட்டை செக் செய்தபோது, பணம் எதுவும் வரவில்லை என்பதை அறிந்துகொள்கிறார். வங்கிக்குப் போன் செய்தபோது, அவர்களும் இதை உறுதி செய்தார்கள். ‘குறிப்பிட்ட எண்ணிலிருந்து தங்கள் வங்கியின் குறுஞ்செய்தி அனுப்பப்படாது’ என்பதையும் சொல்லி எச்சரித்தார்கள்.

பவித்ரா இதையெல்லாம் செய்யும்போதே, ‘மிகவும் அவசரம்... 10,000 இப்போதே வேண்டும்’ என்று வாட்ஸ்அப் செய்திகளில் நச்சரித்தார் விஷால். பவித்ரா விஷாலுக்கு போன் செய்து, ‘‘என் அக்கவுன்ட்டுக்குப் பணமே வரவில்லை. எந்த வங்கியிலிருந்து பணத்தை அனுப்பினீர்கள்?’’ என்று விசாரித்தார். பவித்ரா உஷாரானதை உணர்ந்த விஷால், தொடர்பைத் துண்டித்தார்.

அந்த நிமிடத்தில் யோசிக்காமல் இருந்திருந்தால், இழப்பு நிச்சயம்.

- ர.சீனிவாசன்