Published:Updated:

வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?

வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?
பிரீமியம் ஸ்டோரி
வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?

விலை குறையாததால் அதிர்ந்துபோன மக்கள்

வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?

விலை குறையாததால் அதிர்ந்துபோன மக்கள்

Published:Updated:
வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?
பிரீமியம் ஸ்டோரி
வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் ஜி.எஸ்.டி அமலானபோது, பெரும் விமர்சனத்துக்குள்ளானது உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகிதம் வரையிலான வரிவிதிப்புதான். ‘சாதாரண மக்கள் சாப்பிடும் இட்லி, டீக்கு கூட 18 சதவிகிதம் வரி விதிப்பா?’ எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்க்கவே, 138 நாள்களுக்குப் பின்னர் இதை ஐந்து சதவிகிதமாகக் குறைத்தது மத்திய அரசு. ஆனால், வரிக்குறைப்புக்குப் பின்னரும் பல ஹோட்டல்களில் உணவுப்பொருள்களின் விலை குறையாததுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரிக்குறைப்பு, அரசு அறிவித்தது போலவே நவம்பர் 15-ம் தேதி முதல் அமலானது. ஆனால், விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, வரியை மட்டும் குறைத்துக்காட்டி பழைய விலையையே வசூலிக்கத் தொடங்கினர். குறைக்கப்பட்ட வரியைப் பொருளின் விலையில் உயர்த்தி அட்ஜஸ்ட் செய்திருந்தார்கள். பிரபல உணவகங்கள் சில, ஏற்கெனவே இருந்த விலையைவிட உயர்த்தி வைத்திருந்தன. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?

வரி குறைந்தால், ஒரு பொருளின் விலை குறைய வேண்டும். இங்கு மட்டும் ஏன் ஏறியது? விலையை உயர்த்தி அறிவித்த உணவகங்களைத் தொடர்பு கொண்டோம். ‘‘ஜி.எஸ்.டி அமலானபோது, உணவகங்களுக்கு 18 சதவிகிதம்வரை வரி விதிக்கப்பட்டது. அதேசமயம், ஹோட்டலுக்கு நாங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள், பேக்கிங் பொருள்கள், பேப்பர் உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் செலுத்தும் வரியை, உள்ளீட்டு வரியாக (Input Tax Credit) திரும்பப்பெற முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் விற்கும் உணவுகளுக்கு வரி குறைக்கப்பட்டாலும், உள்ளீட்டு வரியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி-யில் வேறு எந்தத் துறைக்கும் இல்லாத விநோதம் இது. இதனால், நாங்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி-யைத் திரும்பப்பெற முடிவதில்லை. அதாவது, நாங்கள் வாங்கும் பொருளுக்கு வரி செலுத்துகிறோம். விற்கும் பொருளுக்கு அதைவிடக் குறைவான வரி. இந்த வித்தியாசத்தால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதைச் சமாளிக்கவே இந்த விலை உயர்வு’’ எனக் காரணம் சொன்னார்கள்.

இதனால், ஜி.எஸ்.டி வரி குறைந்தும், மக்களுக்கு அதன் பலன் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ரவியிடம் பேசினோம். ‘‘ஜூலை மாதம் ஹோட்டல்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜி.எஸ்.டி-யால் நாங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானோம். இந்த நான்கு மாதங்களில் உணவகங்களின் விற்பனை 35 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்தது. இது எங்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இதன் காரணமாகவே, ‘ஜி.எஸ்.டி-யைக் குறைக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது, வரி குறைக்கப்பட்டிருக் கிறது. அதேநேரம், உள்ளீட்டு வரியைத் திரும்ப பெற முடியாது என்று அரசு சொல்லியிருக்கிறது. அதனால் எங்களுக்கு இழப்புதான் என்றாலும், பெரும் இழப்பு எனச் சொல்ல முடியாது. உணவகங்கள் கொள்முதல் செய்வதில் 75 சதவிகிதம் விவசாயப் பொருள்கள். அவற்றுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதனால் எங்களுக்கு நெருக்கடி ஏதுமில்லை.

வரிக்குறைப்பு மக்களுக்கா... ஹோட்டல்களுக்கா?

ஒரு சில உணவகங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்தியிருந்தன. அவர்களிடம் விளக்கம் கேட்டோம். இதையடுத்து விலை உயர்வை அவர்கள் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். 99 சதவிகித உணவகங்கள், விலையைக் குறைத்து சரியான விலையில் விற்கின்றன. விலை அதிகரிப்பால் ஹோட்டலுக்கு வராமல்போன மக்களை மீண்டும் ஹோட்டலுக்கு வரச்செய்ய இந்த வரிக்குறைப்பு எங்களுக்குப் பயனளிக்கும். எனவே, விலையை உயர்த்தும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை’’ என்றார்.

ஹோட்டல் உணவுகளுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டபோது, ‘‘வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரியும் விதிக்கவில்லை’’ என விளக்கம் சொன்னார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இப்போது வரிக்குறைப்பைத் தொடர்ந்து, ஹோட்டலில் சென்று 2 இட்லி, ஒரு வடையை சாப்பிட்டு ஜி.எஸ்.டி-யை ஆய்வு செய்துவிட்டு, ‘‘உணவகங்கள் உணவு விலையைக் குறைக்க வேண்டும்’’ எனச் சொல்லியிருக்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்.

வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பை உடனடியாக சந்திக்கும் மக்களுக்கு, வரிக்குறைப்பால் கிடைக்கும் பலன் மட்டும் உடனே கிடைப்பதில்லை.

- ச.ஜெ.ரவி