Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

மிஷனர் அலுவலகம், தலைமைச் செயலகம் என அக்குவேறு ஆணிவேறாக மாநகரைப் பிரித்து மேயும் சென்னைவாசிகளுக்கே, ‘ராஜ் பவன் எங்கே இருக்கு... அங்கே என்ன மெனு?’ என்ற சந்தேகம் வரக்கூடும். காரணம், அந்த மரங்கள்சூழ் மாளிகை, பொங்கல் சாப்பிட்ட மந்தத்தில் கிடப்பதுதான். ஆனால், பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக வந்தவுடன், எந்நேரமும் வைப்ரேஷன் மோடிலேயே இருக்கிறது கவர்னர் மாளிகையான ராஜ்பவன். லேட்டஸ்ட்டாக ராஜ்பவன் வளாகத்தில் அசைவத்துக்கு இடமில்லை என கவர்னர் அறிவித்திருப்பதாகத் தகவல் பரவுகிறது. அப்படியே, சோம்பலாகக் கிடக்கும் தமிழகத்தையும் மாற்ற...

கம்பேரிஸன் கோவாலு!
கம்பேரிஸன் கோவாலு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீனவர் பிரச்னையைத் தீர்த்துவைப்பதாக பிரஸ்மீட் தவறாமல் மம்மி பிராமிஸ் செய்தாலும், எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. ‘அசைவம் சாப்பிடும் பாவச் செயலுக்குத் துணை போவதால்தான், இப்படியான பிரச்னைகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்’ என ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் விட்டுவிட்டால் போதும்... அப்புறம் இந்த மாதிரி ‘சின்ன’ பிரச்னைகளுக் கெல்லாம் பதில்சொல்ல வேண்டிய தில்லை.

கம்பேரிஸன் கோவாலு!

‘ராஜ் பவனில் அரசு விருந்தினர்கள் ஐந்து நாள்களுக்கு மேல் தங்கக்கூடாது’ என ஆர்டர் போட்டதுபோல வேறு சில ஆர்டர்களையும் ஆளுநர் போடலாம். ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக எடப்பாடிக்கு ஏழு ஃப்ளெக்ஸ்களுக்கு மேல் வைக்கக்கூடாது’, ‘திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நாளைக்கு ஒரு பேட்டிக்கு மேல் கொடுக்கக்கூடாது.’

கம்பேரிஸன் கோவாலு!

மனிதர்களுக்கே அசைவம் சாப்பிட அனுமதி இல்லாதபோது, அஃறிணைகளான மிருகங்களுக்கு மட்டும் அசைவமா? எனவே, ராஜ் பவன் போலவே விலங்குகள் பூங்காக்களும் சரணாலயங்களும் சுத்த சைவ வளாகங்களாக மாற்றப்படும். இதைப் பின்பற்றாத விலங்குகள் ‘ஆன்டி இந்தியன் அனிமல்’ முத்திரை குத்தப்பட்டு நாடுகடத்தப்படும்.

கம்பேரிஸன் கோவாலு!

மாநிலச் சின்னம், மாநில மரம் எல்லாம் இருப்பதுபோல மாநில உணவையும் அறிவித்துவிடலாம். வேறென்ன... பசுமாட்டுப் பால்தான். ‘அதை ஒரு மண்டலம் மூன்று வேளையும் குடித்துவந்தால், ஆதார் கார்டு அட்ரஸ் தேடி வந்துவிடும், ஸ்மார்ட்கார்டு சூப்பராக வந்துவிடும்’ என்பது போன்ற அறிவிப்பை வெளியி டலாம். ஏற்கெனவே கார்டு வைத்திருப் பவர்களுக்கு நல்ல போட்டோவுடன் கூடிய புது கார்டு வழங்கலாம்.

 ஓவியம்: பிரேம் டாவின்ஸி