Published:Updated:

“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”

“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”

காசி ஆனந்தன் கணக்கு

“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”

காசி ஆனந்தன் கணக்கு

Published:Updated:
“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”

‘‘அரசியல் சட்டமே இலங்கையைப் பௌத்த நாடாக வரையறுக்கிறது. தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான வடக்கு - கிழக்கு மாகாணங் களின் இணைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தை வைத்து தமிழர்களின் நிலங்களைப் பின்வாசல் வழியாகப் பறிக்கும் திட்டத்தையும் இது வழிமொழிகிறது. முக்கியமாக, ‘ஒருமித்த தேசம்’ என்ற கருத்தை முன்மொழிகிறது. உரிமைகளைக் கேட்கும் நியாயமான போராட்டங்களைக்கூட, பிரிவினைவாதமாக முத்திரை குத்தும் ஆபத்து உள்ளது’’ எனப் பொங்குகிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.

“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அவையை 2016, மே மாதம் இலங்கை அரசு அமைத்தது. அந்த அவை உருவாக்கியுள்ள புதிய அரசியலமைப்பு முன்வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, நவம்பர் 18-ம் தேதி சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. 

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தனியரசு எம்.எல்.ஏ., இந்திய - ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம், பேராசிரியர் ஜெயராமன், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை, ‘அறிவாயுதம் - தமிழ்த் தேசிய ஆய்விதழ்’ ஏற்பாடு செய்தது.

காசி ஆனந்தன் மனக்குமுறலுடன் பேசினார்... “வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஒன்றிணையக்கூடாது என்று சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது. கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களை எங்களிடமிருந்து பிரித்து வருகிறார்கள். வடக்கு மாகாணத்தில், பத்து லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தினர் இரண்டு லட்சம் பேர் குடியிருப்பு அமைத்து அங்கு வாழ்ந்துவருகிறார்கள். ஐந்து பேருக்கு ஒரு ராணுவத்தினர் கண்காணிப்பு என்ற நிலைமையில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள். எதிர்வரும் சில ஆண்டுகளில் தமிழர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் அங்கு சிங்களவர்கள் இருப்பார்கள். தேர்தலில் நிற்பார்கள். எவ்வளவு கொடுமையான சூழலில் நாங்கள் இருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சீனாவைத் தடுக்க தமிழர்களால் முடியும்!”

இலங்கையில் சீனா காலடி எடுத்துவைத்துவிட்டது. சீனாவின் கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் போர்ப் பயிற்சியை நடத்துகின்றன. இந்தியாவைப் பார்த்துச் சொல்கிறோம். இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடல் தமிழர்களிடம்தான் இருக்கிறது. அந்த இரண்டு பங்கு கடலின் அதிகாரம் அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்லாமல் தடுக்க எங்களால் முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். எங்களின் விடுதலை!’’

- ஜெ.அன்பரசன், படம்: செ.விவேகானந்தன்