Published:Updated:

ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?

ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?

குமுறும் குரல்கள்

ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?

குமுறும் குரல்கள்

Published:Updated:
ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித் துறையினர் நவம்பர் 17-ம் தேதி சோதனை நடத்தினர். ‘‘ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் கோயில் போன்றது. அங்கு ரெய்டு நடத்தப்பட்டிருக்கக் கூடாது’’ எனத் தமிழக அமைச்சர்களே வெளிப்படையாகச் சொன்னார்கள். இவர்கள் இப்படிச் சொன்னதைக் கேட்டு, காஞ்சி சங்கர மட பக்தர்கள் குமுறுகிறார்கள்.

ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?

சங்கரராமன் கொலை வழக்கில், சங்கராச்சாரியார் ஜெயேந்திரரைத் தமிழக போலீஸார் கைது செய்தனர். அப்போது இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரைக் கைது செய்ய சங்கர மடத்துக்குள் எஸ்.பி பிரேம்குமார் தலைமையிலான போலீஸார் ஷூவைக் கழற்றாமல் சென்றனர். அது குறித்து இப்போது கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

அகில இந்திய காஞ்சி காமகோடி பக்தர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வலசை கே.ஜெயராமனிடம் பேசினோம். ‘‘முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்குமுன்பு கேசட் விற்க வந்தவர்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். ‘எப்படி இந்தப் பணம் வந்தது?’ என்று கேட்டால், ‘நாங்கள் ஜமீன் பரம்பரை’ என்கிறார்கள். ‘ஐ.டி ரெய்டு நடத்த நான் அனுமதி கொடுக்கவில்லை’ என்று விவேக் சொல்கிறார். இதெல்லாம் காலத்தின் கொடுமை.

‘வேதா நிலையம் ஒரு கோயில், அம்மா வாழ்ந்த இடத்தில் ரெய்டு நடத்தக் கூடாது’ என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள். ‘சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி பிரேம்குமார், நூறு போலீஸாருடன் ஷூக்களைக் கூடக் கழற்றாமல் சங்கர மடத்துக்குள் நுழைந்தது தப்பில்லையா?’ என்பதுதான் எங்கள் கேள்வி. ஒரு வழக்குக் குறித்து விசாரணை செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ, போலீஸ் அதிகாரி வருவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், சங்கர மடத்தில் மகாபெரியவரின் ஜீவசமாதி இருக்கிறது. அது ஒரு கோயில். தினமும் பூஜைகள் நடக்கின்றன. அந்த இடத்துக்குள் போலீஸார் ஷூக்களைக் கழற்றாமல் வந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ. வீடு கோயில் என்றால்... சங்கர மடம் கோயில் இல்லையா?

பால பெரியவரை (விஜயேந்திரர்) ‘வாடா’ என்று மரியாதை இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அழைத்தார். அங்கு நான் இருந்தேன். ‘ஐயா, நீங்கள் வருவதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால், ஷூவைக் கழற்றிவிட்டு உள்ளே வாருங்கள்’ என்று பிரேம்குமாரின் காலைப் பிடித்துக் கெஞ்சினேன். என்னைத் தள்ளிவிட்டு, பாலபெரியவரை அநாகரிகமாகக் கூட்டிச் சென்றார். இது எந்த வகையில் நியாயம்?

இன்று நிலைமை என்ன? பாருங்கள்! இதுதான் குரு தண்டனை. இனியாவது ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்” என்றார் ஜெயராமன் ஆத்திரத்துடன்.

- கே.பாலசுப்பிரமணி