Published:Updated:

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

Published:Updated:
இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!
இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

வாழ்க்கையில், காயப்படுத்தும் சம்பவங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. தழும்புகளோடு தடுமாறி விழாமல், அவற்றை அடையாளங்களாக மாற்றி நிமிர்ந்திருக்கிறார் லோகநாதன். ‘‘நூற்றுக்கணக்கான பிள்ளைகளோட படிப்புக்கு உதவி செஞ்சு, `சமூக சேவகன்’னு பேர் வாங்கிய நான், என் மகளோட படிப்புக்குப் பணம் கட்ட முடியாம தவிச்சதையும், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாம நடுத்தெருவுல நின்னதையும் ஆண்டவன் வெச்ச பரீட்சையாதான் பார்க்கிறேன். கஷ்டப்பட்டு அதுல பாஸாகிட்டேன். இப்பவும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன்’’ என வருத்தமும் நம்பிக்கையும் கலந்து பேசுகிறார் லோகநாதன்.

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறைத் தொழிலாளியான லோகநாதன், ஓய்வு நேரத்தில் கழிவறையைக் கழுவி சம்பாதித்து ஏழை மாணவர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பற்றி `சேவை’ நாதன் என்ற தலைப்பில் ஜூ.வி இதழில் (23.7.2008) எழுதியிருந்தோம். ``வெல்டிங் பட்டறையில் வேலைசெய்யும் பணத்தை வீட்டுக்கும், கழிவறையைக் கழுவி சம்பாதிக்கும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கும் கொடுக்கிறேன்’’ என்று சொன்ன லோகநாதனை உச்சிமுகர்ந்து பாராட்டினார்கள் நம் வாசகர்கள். அதைத் தொடர்ந்து, பல பத்திரிகைகளில் அவரைப் பற்றி செய்திகள் வந்தன. கோவை மேயர் தேர்தலில்கூட இவர் போட்டியிட்டார். அதன்பின், லோகநாதன் என்ன ஆனார்... எங்கு போனார் என்பது தெரியவில்லை.

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது, கோவையை அடுத்த அப்பநாயக்கன்பட்டி புதூர் கிராமத்தில் லோகநாதன் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர் வீட்டுக்குச் சென்றோம். அந்தச் சிறிய வீடு, விருதுகளால் நிரம்பியிருக்கிறது. வீட்டிலேயே `வெள்ளியங்கிரி ஆண்டவர்’ என்ற பெயரில் லோகநாதனின் வெல்டிங் பட்டறை செயல்படுகிறது. ``ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுறதுல இவ்வளவு பிரச்னைகள் வரும்னு அப்ப எனக்குத் தெரியாது சார்!’’ வெல்டிங் செய்துகொண்டிருந்த லோகநாதன், சட்டென தலைநிமிர்த்திப் பேச ஆரம்பித்தார்.

‘‘சின்ன வயசுல, எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஆதரவற்றோர் இல்லப் பசங்களுடன்தான் விளையாடுவேன். அந்தப் பசங்களைப் பத்தி அப்ப எனக்குத் தெரியாது. ஒருமுறை `இவங்களோட அப்பா, அம்மா எல்லாரும் எங்கே இருப்பாங்கப்பா’னு என் அப்பாகிட்ட கேட்டேன்.  `அவங்க எல்லாரும் செத்துப்போயிருப்பாங்கடா’னு சொன்னார். அப்போ, அது எனக்குப் புரியலை. படிப்பு ஏறாம ஊர் சுத்திக்கிட்டிருந்த எனக்கு, என் அப்பா செத்துப்போன பிறகுதான் அந்தப் பசங்களோட கஷ்டம் தெரிஞ்சுது. அப்பதான் அந்தப் பசங்களுக்கு ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம் எனக்குள்ள விழுந்துச்சு. வீடு வீடாப் போய் பழைய துணிகளை கலெக்ட் பண்றது, சாப்பாடு வாங்குறதுனு கிளம்பிட்டேன். ஒருகட்டத்துல, அந்த வீடுகள்ல என்னைச் சந்தேகப்பட ஆரம்பிச்சாங்க. நான் போனாலே துரத்தியடிச்சாங்க. அதையெல்லாம் கடந்தும் உதவிகள் செய்தேன். 

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

இதற்கிடையில, கோவை ராமநாதபுரத்துல ஒரு கம்பெனியில வெல்டர் வேலை கிடைச்சது. அங்க கழிவறையைக் கழுவுறதுக்கு ரெகுலரா ஒருத்தர் வருவார். அவருக்கு 400 ரூபாய் சம்பளம். ‘அந்த வேலையை நாம செஞ்சா, கிடைக்கற பணத்தை ஏழை மாணவர்களின் படிப்புக்குக் கொடுக்கலாமே’னு தோணுச்சு. ஓனர்கிட்ட கேட்டேன். `ஓகே’னு சொன்னார். அதே மாதிரி இன்னும் சில இடங்களைப் பிடிச்சு வேலை செஞ்சு, வர்ற பணத்தைச் சேர்த்துவெச்சு, ஏழை மாணவர்களோட படிப்புக்கு உதவிகள் பண்ணிட்டிருந்தேன். 15 வருஷம் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்துச்சு. மழையால, கோவையில் ஒரு அநாதை ஆசிரமம் இடிஞ்சு விழுந்திருச்சுங்கிற நியூஸைப் படிக்கிறவரைக்கும்’’ என்றவர், சற்று இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘அந்த நியூஸைப் படிச்சதும், அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னு மனசு கிடந்து அடிச்சுக்கிச்சு. ஆனா, எப்படிப் பண்றதுனு தெரியலை. சேர்த்துவெச்சிருந்த 5,000 ரூபாயை எடுத்துக்கிட்டு கலெக்டர் ஆபீஸ் போனேன். எப்படி கலெக்டரைப் பார்க்கப்போறதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த எனக்கு, ஒரு பத்திரிகை நிருபர் வழிகாட்டினார். மறுநாள் பேப்பர்ல `லோகநாதன்னு ஒருத்தர், கழிவறையைக் கழுவி மாணவர்களுக்கு உதவி செய்கிறார்’னு நியூஸ் வந்தது. அதைப் பார்த்துட்டு நிறையப் பேர் தேடிவந்து என்னைப்  பாராட்டினாங்க. அதையெல்லாம் பார்த்து ஆரம்பத்துல என் முதலாளி சந்தோஷப்படுற மாதிரிதான்  நடந்துக்கிட்டார்.

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

அது எலெக்‌ஷன் நேரம். என்னைக் கூப்பிட்டு மேயர் எலெக்‌ஷன்ல நிக்கச் சொன்னார் என் முதலாளி. `அய்யா... எனக்கு இதுக்கெல்லாம் தகுதி இல்லைங்க. நான் பாட்டுக்கு நாலு பேருக்கு உதவி செஞ்சுக் கிட்டிருக்கேன்’னு சொன்னேன். `நான் பார்த்துக் கிறேன், நீ நில்லு’ன்னு கட்டாயப்படுத்தினார். நான்கூட நல்லவிதமாத்தான் நினைச்சேன். கடைசிநேரத்துல `வாபஸ் வாங்கிடு’னு சொன்னார். என் பேரைக் கெடுக்கிறதுக்காக இப்படிப் பண்ணியிருக்காங்கனு அப்பதான் தெரிஞ்சது. நான் `வாபஸ் வாங்க முடியாது’னு சொல்லிட்டேன். ஆயிரத்தி சொச்சம் ஓட்டு கிடைச்சது. எல்லாம் முடிஞ்சு வேலைக்குப் போனா, கேட்லயே நிறுத்தி, `இனிமேல் உனக்கு வேலை இல்லை’னு துரத்திவிட்டுட்டாங்க. அவங்க கொடுத்திருந்த வீட்டையும் காலிபண்ணச் சொல்லிட்டாங்க. முப்பது வருஷ உழைப்பை, ஒரு நிமிஷத்துல தூக்கிவீசினாங்க.

என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியலை. பொண்டாட்டி புள்ளைங்க ளோட இந்த ஊருக்கு வந்தேன். சோற்றுக்குக்கூட வழி இல்லாத நிலைமை. எத்தனையோ பிள்ளைகளைப் படிக்கவெச்ச என்னால, என் மகளுக்கே ஃபீஸ் கட்ட முடியலை. எம் மகனே என்னைக் கேவலமா பார்த்தான். அதுக்குப் பிறகு ஒருத்தர்கிட்ட வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் ராப்பகலா உழைச்சு கஷ்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டேன். இப்போ, வீட்டுலேயே சின்னதா பட்டறை போட்டுட்டேன்’’ என்று லோகநாதன் நிறுத்த, அவரின் மனைவி சசிகலாதேவி தொடர்ந்தார்...

``ஏழைப் பிள்ளைகளுக்கு உதவி செய்யறதுக்குன்னே ஒரு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணியிருந்தார். கழிவறையைக் கழுவுறதுல வர்ற பணத்தை வீட்டுக்குச் செலவுபண்ணிடக் கூடாதுங்கிறதுக்காக, அதுலதான் போட்டுவைப்பார். பேப்பர்ல இவரைப் பற்றி வந்த பிறகு, நிறையப் பேர் பண உதவி செஞ்சாங்க. ஜூனியர் விகடன் வாசகர்கள்கூட 70,000 ரூபாய் அனுப்பியிருந்தாங்க. எல்லாத்தையும் அந்த அக்கவுன்ட்ல போட்டுதான் மாணவர்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டிருந்தார். இங்கே வர்றப்போ அந்த அக்கவுன்ட்ல 14,000 ரூபாய் இருந்துச்சு. பொண்ணுக்கு ஃபீஸ் கட்ட காசு இல்லை. `அந்தப் பணத்துலேயிருந்து எடுத்துக் கொடுங்க. நம்ம பொண்ணோட படிப்புக்குத்தானே’னு கேட்டேன். `அதுல இருந்து நம்ம தேவைக்குன்னு நையா பைசாகூட எடுக்க மாட்டேன்’னு கறாரா சொல்லிட்டார்.

இரண்டாம் இதயம்: கழிவறை கழுவி கல்விக்கு உதவி..! - ‘சேவை’நாதனுக்கு வந்த சோதனை!

இதுவரைக்கும் அதுல உறுதியா இருக்கோம். `நம்ம மேல எந்த மிஸ்டேக்கும் வந்துடக்கூடாது’னு சொல்வார். கஷ்டப்பட்டு எங்க பையனை எம்.பி.ஏ படிக்க வெச்சுட்டோம். இப்ப ஒரு நூல் ஃபேக்டரியில மேனேஜரா இருக்கான். மருமகள் காலேஜ்ல வாத்தியாரா இருக்கு. பொண்ணு ஒன்பதாவது படிக்குது. இவர் கழிவறையைக் கழுவப்போறது என் மகனுக்குப் பிடிக்கலை. `உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ. என் ரூட் தனி’னு சொல்லிட்டார். இப்ப வெல்டிங் வேலை அதிகமா வருது. அதனால, கழிவறையைக் கழுவ நிறைய இடங்களுக்குப் போறதில்லை. ஒரே ஒரு ஆஸ்பத்திரிக்கு மட்டும் போயிக்கிட்டிருக்கார். ஆனா, வெல்டிங்கில் வர்ற வருமானத்துல ஒரு பகுதியை அந்த அக்கவுன்ட்ல போட்டுடுறார். யார் தடுத்தாலும் சாகுறவரைக்கும் உதவிகளை செஞ்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் இவரோட எண்ணம்’’ என்கிறார் சசிகலாதேவி.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்