Published:Updated:

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை
பிரீமியம் ஸ்டோரி
பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

Published:Updated:
பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை
பிரீமியம் ஸ்டோரி
பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை
பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

1,800 அதிகாரிகள், 187 இடங்கள், 350 கார்கள்... என ஒரு படையெடுப்பைப் போல வருமானவரித் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், சசிகலா குடும்பம் வாரிச் சுருட்டப்பட்டிருக்கிறது. 1,450 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் ரொக்கம், வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘‘இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’’ எனச் சொல்லும் எதிர்க்கட்சிகள், ‘‘ஏற்கெனவே தமிழகத்தில் நடந்த ரெய்டுகளின் விளைவு என்ன?’’ என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

இதுபற்றி வருமானவரித் துறை மூத்த அதிகாரி ஒருவர், வருமானவரித் துறை வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரிடம் பேசினோம். ‘‘வருமானவரிச் சோதனையின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல; வரி ஏய்ப்பு தொடர்பான சான்றுகளைச் சேகரிப்பதுதான். இவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட சொத்துகளின் உரிமையாளர் வரி ஏய்ப்புச் செய்துள்ளார் என நிரூபிப்பதே எங்கள் வேலை’’ என்றனர்.

ஒரு ரெய்டில் வருமானவரித் துறை என்ன செய்யும்? அவர்கள் சொன்ன விவரங்கள் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

விசாரிப்பவரே நீதிபதி!

போலீஸ் மேற்கொள்ளும் புலன் விசாரணைக்கும் வருமானவரித் துறையின் புலன் விசாரணைக்கும் வித்தியாசம் உள்ளது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள். அதோடு போலீஸின் வேலை முடிந்துவிடும். அதன்பிறகு நீதிமன்றம்தான் வழக்கை விசாரிக்கும்; தீர்ப்பு வழங்கும். 

ஆனால், வருமானவரித் துறையில் அப்படி அல்ல. ‘குற்றம் நடந்துள்ளதா’ என அவர்களே சோதனை நடத்துவார்கள், விசாரணை செய்வார்கள், அவர்களே தீர்ப்பெழுதவும் செய்வார்கள். இந்திய ஐ.டி சட்டம் அந்த அதிகாரத்தை வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரிகளுக்கு வழங்குகிறது. ஐ.டி சட்டத்தின் பிரிவு 132-ன்படி, ஒரு மதிப்பீட்டு அதிகாரிதான் சோதனை நடத்தும் இடங்களில் ஆவணங்களைக் கைப்பற்றவும், சொத்து உரிமையாளரை விசாரிக்கவும் முடியும். ஐ.டி சட்டத்தின் பிரிவு 136 வழங்கும் அதிகாரத்தின்படி, அந்த மதிப்பீட்டு அதிகாரியே அந்த வழக்குக்கு நீதிபதியாகவும் ஆகிறார்.

சோதனையில் கைப்பற்றப்படும் சொத்துகள், ஆவணங்களை முடக்கிவைப்பதற்கான காலக்கெடு 60 நாள்கள். அதற்குள் பறிமுதல்செய்யப்பட்ட பொருள்கள், ஆவணங்களைப் பதிவுசெய்து, மகஜர் போட்டு, தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத பொருள்களை உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும். இதில் ஒளிவுமறைவு கிடையாது. 60 நாள்களுக்குள் இது முடியவில்லை என்றால், அந்த முடக்கம் செல்லுபடியாகாது. அப்படி நேர்ந்தால், அந்த விசாரணை அதிகாரி துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாவார். 

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

பக்காவா பிளான் பண்ணுவாங்க!

இன்ஃபார்மர்கள் மூலம் எங்களுக்குத் தகவல்கள் வரும். வருமானவரித் துறையிலேயே பல தகவல்கள் இருக்கும். முன்பெல்லாம், ஐ.டி இன்ஸ்பெக்டர் ஒருவர், பத்திரப்பதிவு அலுவலகம் போய், சொத்துப் பதிவுகள் தொடர்பான ஆவணங்களின் நகல்களை எடுத்துவருவார். ஆனால், இப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவாளரும், அவருடைய எல்லையில் நடக்கும் பத்திரப்பதிவு குறித்த விவரங்களை வருமானவரித் துறைக்குக் கட்டாயம் அனுப்ப வேண்டும். அந்தத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு குற்றப் புலனாய்வு ஆணையர் (Intelligence and Criminal Investigation) பரிசீலித்து, அந்த ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள், நடந்த பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து, பான் நம்பரை வைத்து, அந்தச் சொத்துகளை விற்றவரும் வாங்கியவரும் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்குகளோடு ஒப்பிடுவார்கள். சந்தேகம் எழுந்தால், அவை தோண்டி எடுக்கப்படும். ரெய்டு நடத்த முகாந்திரம் இருந்தால், சர்ச் வாரன்ட் பெற்று சோதனை திட்டமிடப்படும். எல்லாமே பக்காவாக பிளான் செய்யப்படும்.

‘சோதனையில் என்னென்ன பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, எவை பறிமுதல் செய்யப்பட்டன’ என்று எழுதி சொத்து உரிமையாளரிடம் கையெழுத்து வாங்குவோம். பஞ்சநாமா என்ற மகஜரில் இதைக் குறிப்பிட்டு பிரதியும் அவர்களுக்கு வழங்குவோம். சோதனையின்போது ஒரு லாக்கருக்குச் சாவி இல்லை, அல்லது நிறைய ஆவணங்கள் பாக்கி இருக்கின்றன என்றால், அவற்றை ஓர் அறையில் வைத்துப் பூட்டி, சீல் வைத்துவிடுவோம். பிறகு அவை சோதிக்கப்படும்.

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

இறுதியாக, வருமானவரித் துறை அதிகாரிகளுடன் வந்த சாட்சிகள், ‘எங்கள் முன்னிலையில்தான் சோதனை நடந்தது. சோதனையில் இன்னாருடைய வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன. இன்றைய சோதனை சுமுகமாக முடிவுற்றது. சோதனையில் நடந்த அசம்பாவிதங்கள் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன’ என்று ஒப்புதல் அளிப்பர். அதில் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர் அனைவரும் கையெழுத்துப் போட வேண்டும்.

யார் பாதுகாப்புக் கொடுப்பது?

ஓர் இடத்தில் சோதனைக்குச் செல்லும் அதிகாரிகள், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசு என யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். அவர்கள் கேட்ட பாதுகாப்பை உடனே சம்பந்தப்பட்ட அமைப்புகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், ரயில்வே போலீஸைக்கூட அழைத்துக்கொள்ளலாம். சித்தூரில் ஒரு சோதனை. அங்கு இரண்டு கிலோ தங்கம் கிடைத்தது. உடனே அந்த மாவட்ட எஸ்.பி-யிடம் விவரத்தைச் சொல்லி ‘சென்னை போகும்வரை எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்று கேட்டோம். உடனடியாக அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸை அனுப்பிவைத்தார்.

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

சோதனை மட்டும் சோதனையல்ல!

ரெய்டு மட்டுமே முழுமையான சோதனை கிடையாது. அதில் கிடைக்கும் ஆவணங்களை வைத்து நடக்கும் விசாரணைதான், அந்தச் சொத்துகளின் உரிமையாளருக்கு வைக்கப்படும் அக்னிப் பரீட்சை. அந்த விசாரணையில், சொத்து உரிமையாளரின் நியாயங்களும் தெரியலாம்; அல்லது சோதனையில் சிக்காத புதிய சொத்துகளின் விவரங்களும் கிடைக்கலாம். உதாரணமாக, ஒரு தேசியக் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரிடம் ரெய்டு நடத்தியபோது, அவரிடம் 20 லட்ச ரூபாய் மட்டும்தான் கிடைத்தது. அவரை விசாரித்தபோது, கூடுதலாக அவரிடம் 22 லட்ச ரூபாய் இருப்பது தெரியவந்தது. இரண்டையும் சேர்த்து ‘42 லட்சம்தான் சிக்கியது’ என்று அறிக்கை எழுதி அனுப்பிவிட்டனர். ஆனால், அதற்குப்பிறகு அவருடைய வங்கி ஆவணங்களைச் சோதித்தபோது, அவர் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பாக ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த விவரம் தெரியவந்தது. பேலன்ஸ் ஷீட்டும் கிடைத்தது. அதில் பார்த்தால் எட்டுக் கோடி ரூபாய் கடன் வைத்திருந்தார்; எட்டுக் கோடி ரூபாய் வங்கி டெபாசிட்டும் வைத்திருந்தார். அதை வைத்து விசாரணை நடத்தியதில் 30 கோடி ரூபாய் வரை அவரிடம் கணக்கில் காட்டாத பணம் இருப்பது தெரியவந்தது. 

தீர்ப்பைத் திருத்தலாம்... எஃப்.ஐ.ஆர் போட முடியாது!

போலீஸார், வழக்கில் ஒருவரைக் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு அதோடு முடித்துவிடுவார்கள். பிறகு, அவர் ஜாமீனில் வந்துவிடுவார். நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கலாம். அதற்கு காலக்கெடு கிடையாது. ஆனால், வருமானவரித் துறையில் அந்தமாதிரி கிடையாது. சோதனை நடத்தும் அதிகாரி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வுசெய்து, சொத்து உரிமையாளரிடம் விசாரித்து ஓர் அறிக்கை அனுப்புவார். அதைக் கையிலெடுக்கும் மதிப்பீட்டு அதிகாரி, சொத்து உரிமையாளரை வரவழைத்து விசாரணை நடத்துவார். நோட்டீஸ் அனுப்பி, வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யச் சொல்வார். இரண்டையும் ஒப்பிட்டு, விசாரணை நடக்கும். கணக்கில் வராத சொத்துகளுக்கு வரியும் அபராதமும் விதிக்கப்படும். அதன்பிறகு, அந்த வழக்கை கமிஷனர் மறு ஆய்வுக்கு உட்படுத்துவார். சொத்து உரிமையாளரும் வருமானவரித் துறை ஆணையர்முன் மேல்முறையீடு செய்யலாம். ஆணையரின் தீர்ப்பிலும் திருப்தி இல்லையென்றால், வருமானவரித் துறை தீர்ப்பாயத்தை அணுகலாம். அங்கும் சரியான நீதி கிடைக்கவில்லை என்று நினைத்தால், அதன்பிறகு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று போகலாம்.

பழிவாங்க நடந்ததா ரெய்டு? - வருமானவரித் துறை சொல்லும் உண்மை

திவாலாக்கும் புதிய சட்டங்கள்!

முன்பெல்லாம் வரி ஏய்ப்புச் செய்தவர்கள், ‘நான் ஒரு தொழில் நடத்தினேன். அதில் ஐந்து லட்சத்துக்கு வியாபாரம் நடந்தது. ஆனால், ஆறு லட்சம் நஷ்டமானது’ என்று கணக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இப்போது அப்படி அல்ல. ‘லாபத்துக்கு வரியைக் கட்டு; நஷ்டம் ஏற்பட்டதை மற்றொரு கணக்கில் காட்டி அதைத் திரும்பப் பெற்றுக் கொள்’ என்பதுபோல, கடுமையாக சட்ட நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. அதுபோல, கணக்குக் காட்டாத வருமானத்துக்கு 60 சதவிகித வரி மற்றும் அபராதமும் சேர்கிறது. அதில் அவர்கள் திவாலாகிவிடுவார்கள். அப்படி வசூலிக்கும்போதுதான், வரி ஏய்ப்புச் செய்தவர்கள் சந்திக்கும் வலியும், நமது சட்டத்தின் வலிமையும் தெரியும். இது அதிகாரிகளின் வலிமை அல்ல; துறையின் வலிமை அல்ல; நமக்கு நாமே இயற்றிக் கொண்ட சட்டத்தின் வலிமை!

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துகுமார், சி.வெங்கடேசன், ஜெரோம்