Published:Updated:

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

Published:Updated:
ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?
பிரீமியம் ஸ்டோரி
ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், தி.மு.க பிரமுகர் ஒருவரை முதலாவதாக விசாரிக்கும் விநோதம் நிகழ்கிறது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் ஆளாக ஆஜராகிறார், தி.மு.க-வின் மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்தது. ‘மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் இறந்த நாள் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரணை செய்தல்’ என்று ஆணையத்தின் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ‘டிசம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று காலவரம்பும் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த கமிஷன் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி, காலதாமதமாகவே விசாரணை தொடங்குகிறது.

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

‘வெளிநாட்டு டாக்டர்கள், மத்திய அமைச்சர்கள், அப்போது அமைச்சராக இருந்து இப்போது துணை ஜனாதிபதி ஆகியுள்ள வெங்கய்ய நாயுடு, அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டவர்களை இந்த ஆணையம் விசாரிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இவர்களையெல்லாம் விசாரிக்கும் அதிகார வரம்பு இந்த ஆணையத்துக்கு இல்லை. ‘‘மத்திய அரசில் பதவி வகிப்பவர்களையும், வெளிநாட்டில் இருப்பவர்களையும் விசாரிக்கும் சிறப்பு அதிகாரம் வேண்டும் என்று ஆணையம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது. இதுபற்றித் தமிழக அரசுதான் முடிவுசெய்ய வேண்டும்’’ என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில். அது கிடைக்காவிட்டால், ‘முக்கியமான சாட்சிகளையே விசாரிக்க முடியாத கண்துடைப்பு கமிஷன்’ என்ற பெயர் இதற்கு வந்துவிடும்.

இத்தனை சர்ச்சைகளுக்கு நடுவில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தின் அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கலாஸ் மஹாலின் முதல்தளத்தில் அமைந்துள்ளது. விசாரணை ஆணையத்தில் ஏழு பேர் பிரமாண உறுதிமொழிப் பத்திரத்தை நேரில் கொடுத்துள்ளனர். நவம்பர் 20-ம் தேதி விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வத்திடம் எட்டுப் பக்கங்கள்கொண்ட பிரமாண உறுதிமொழிப் பத்திரத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் தாக்கல்செய்தார்.

‘‘நடராசனுக்குக் கொடுத்தது போன்ற அதிதீவிர சிகிச்சைகளும் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகளும் ஜெயலலிதாவுக்கு ஏன் செய்யவில்லை? அவரை அப்போலோ கொண்டு செல்லும்முன், சசிகலாவின் உறவினர்கள் ஏன் போயஸ் கார்டன் வந்தார்கள்; பிறகு ஏன் தொடர்ச்சியாக அப்போலோவில் இருந்தார்கள்? சிகிச்சையின்போது எடுத்ததாக திவாகரன் மகன் ஜெயானந்த் சொன்ன சி.டி எங்கே...” என்பவை உள்ளிட்ட 19 கேள்விகளை முன்வைத்துள்ளேன். அத்தனைக்கும் விடை கிடைத்தால் ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும்’’ என்றார் மாதவன்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான ஆனூர் ஜெகதீசன், ‘‘1980-ம் ஆண்டிலிருந்தே ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. 1984-ம் ஆண்டு அவர் ராஜ்யசபா      எம்.பி-யாக இருந்தபோது, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சர்க்கரை இல்லாத உணவு வகைகளை ஜெயலலிதாவுக்குக் கொடுக்க உத்தரவு போட்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா 22 நாள்கள் பெங்களூரு ஜெயிலில் இருந்தபோதுகூட, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தது. சிறையிலிருந்து போயஸ் கார்டன் வந்தபிறகு, ஜெயலலிதா உடலில் சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் போய்விட்டது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை கொடுத்தவர், சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார். அவர் சர்க்கரை நோய் ஸ்பெஷலிஸ்ட் அல்ல. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவை அப்போலோவில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியதா? எனவேதான், அப்போலோவின் முழு மருத்துவ அறிக்கையையும் ஆணையத்தில் சமர்ப்பிக்கக் கேட்கிறோம். முதல்வர் பதவியில் இருந்தவருக்கே இந்தக் கதி ஏற்பட்டுள்ளது. இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்றுதான் ஆணையத்தில் நீதி கேட்டு நிற்கிறோம்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ. மரண விசாரணை... ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இல்லை?

ஆனுர் ஜெகதீசனுக்காக ஆஜராகும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ‘‘செப்டம்பர் 22-ம் தேதி டியூட்டியில் இருந்த ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதாவின் தனி அதிகாரிகள், சமையல் ஆள்கள், சிகிச்சையளித்த லண்டன், சிங்கப்பூர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் அனைவரையும் விசாரணை ஆணையத்தில் ஆஜர்படுத்தக் கேட்டிருக்கிறோம். அவர்களையெல்லாம் குறுக்கு விசாரணை செய்தால், மர்மம் விலகும்’’ என்று சொன்னார்.

‘ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை வெளியே கொண்டுவர வேண்டும்’ என்று பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்தாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் நடத்திவரும் அ.தி.மு.க அணிகள் சார்பில் யாரும் விசாரணை ஆணையத்தை அணுகவில்லை.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: தே.அசோக்குமார்