Published:Updated:

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

Published:Updated:
தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!
தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

டலில் சரம்சரமாக தங்க ஆபரணங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு, டாடா சுமோக்களில் அதிரடியாக வந்திறங்கும் தாதாக்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம், அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். உடலில் ஒரு கிராம் தங்கம்கூட அணியாமல், தும்பைப்பூ நிறத்தில் வேட்டி - சட்டை அல்லது கோட்சூட் அணிந்து சாந்தமான முகபாவத்துடன் ஆடி காரிலோ, ஃபார்ச்சூனரிலோ வந்திறங்கும் அந்தப் பெரிய மனிதர்கள்... ‘தாதாக்களுக்கெல்லாம் ‘தாதா’க்கள் என்பது நமக்குத் தெரியாது. மணல், கிரானைட் உள்பட இயற்கை வளங்களைச் சூறையாடுதல், பெரிய அளவிலான கான்ட்ராக்ட்கள் போன்றவற்றின் மூலம் கோடிகளில் புரளும் ‘கார்ப்பரேட் தாதா’க்கள் கடந்த சில ஆண்டுகளில் உருவெடுத்துள்ளார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் இவர்களுக்கு நெருக்கம் மிகமிக அதிகம்.

இவர்கள் ஒவ்வொருவரும் நிஜ ‘தல’... நிழல் உலக டான்...

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• செல்வாக்குமிகுந்த ஒரு கட்சியின் டான் இவர். ஒரு காலத்தில் லுங்கி, பனியனுடன் முரட்டுத்தனமாக இருந்தவர். இவரின் தற்போதைய அடையாளம் ஒயிட் பேன்ட்,  ஒயிட் ஒயிட் ஷர்ட். முன்னொரு காலத்தில், சாலையோர வியாபாரிகள், சிறுகடை முதலாளிகள், ஆட்டோ- வேன் ஓட்டுநர்கள் ஆகியோரின் அவசரத் தேவைக்கு 24 மணி நேரமும் உதவும் ஏ.டி.எம் ஆக விளங்கியவர். பிறகு, தனது கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்டமாக மேடைகள் அமைத்துக்கொடுப்பதன்மூலம் தலைமைக்கு நெருக்கமானார். அந்தச் செல்வாக்கின் மூலமாக, டெல்லி தர்பாரில் இடம்பெறும் யோகமும் இவருக்கு அடித்தது. பிறகு, பெரியவருக்கும், சின்னவருக்கும் இடது, வலது என எல்லாமும் இவர்தான். தலைமையின் ‘பிளாக்மெயில் அரசியல்’ மூலம் கிடைக்கும் சூட்கேஸ்கள், இவர் மூலமாகத்தான் கலெக்‌ஷன் ஆகும். இவருடைய அலுவலகம் பல பஞ்சாயத்துகளைத் தீர்த்துவைக்கும் போலீஸ் ஸ்டேஷன்.

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

• தென்மாவட்டத்திலிருந்து சென்று டெல்லியில்  நீண்டகாலம் அதிகாரம் செலுத்தியவரின் வாரிசு இவர். சர்வதேசத்திலும் இவருக்குச் சொத்துகள் உண்டு. அத்தனையும் சட்டவிரோத காரியங்கள் மூலம் இவர் குவித்தவை. இவரும் ஓர் அரசியல் வி.ஐ.பி-தான். பரம்பரைக் கோடீஸ்வரர் என்றாலும், பணம் என்றால் வாயைப்பிளப்பார். தந்தையின் செல்வாக்குதான் இவரின் முதலீடு. அயோத்திக்குப்பம் வீரமணி போன்றவர்கள் தலைநகரை அலறவைத்த தாதாக்கள் என்றால், அந்த வீரமணியைப்போன்ற பல ‘தாதா’க்கள் இந்த வாரிசு வி.ஐ.பி-யின் முன்பாகக் கைகட்டி நிற்பார்கள்; இவர் கைகாட்டுகிற காரியங்களை எல்லாம் கச்சிதமாக முடிப்பார்கள். அப்படியென்றால், இவரை ‘தாதாக்களுக்கு எல்லாம் தாதா’ என்று சொல்லலாம்.

• தலைநகரில் போலீஸ் ஸ்டேஷன், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி என வண்டி ஓட்டிக்கொண்டிருந்த ஒரே இனிஷியல் கொண்ட சகோதரர்களில் மூத்தவர் இவர். கோட்டைக்குப் போனதும் அவரது ரேஞ்சே மாறியது. காணும் கட்டடங்களையெல்லாம் வளைத்துப்போட்டார். பதவிக்காலம் முடிந்ததும் அரசியலிலிருந்து ஒதுங்கி, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, நிலப்பறி எனத் தீவிரம் காட்டி, கோடம்பாக்கம் பிசினஸுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். சகோதரர்களின் வாரிசுகளையும் வளர்த்துவிட்டார். அவர்களும் இப்போது குட்டி தாதாக்களாக மாறி, மேலே குறிப்பிட்ட தாதாக்களின் தாதாவின் ஆசீர்வாதத்துடன் அரசியல் சேவையும் செய்துவருகிறார்கள். 

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

• தென்மாவட்டத்திலிருந்துவந்து நீண்டகாலத்துக்கு முன்பே ஆண்ட கட்சியில் அடைக்கலம் ஆனவர் இவர். தலைமையின் தலைநகர் பஞ்சாயத்துக்களைக் கச்சிதமாக முடித்துவைப்பவர். பெரிய லெவல் கட்டப்பஞ்சாயத்து, நிலப்பறி எல்லாம் இவருக்கு சர்வசாதாரணம். நடிகைகளை ஊருக்குக் கூட்டிப்போய் ஆட்டம்போட வைப்பதென்றால் இவருக்கு மிகுந்த விருப்பம். நகரத் தந்தை ஆகவேண்டும் என்பது இவரது கனவு.

• மீசைகூட வைக்காத பால்வடியும் முகம் இவருக்கு. இவரது செயல்களோ டெரர் ரகம். தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாத ஒரு கட்சியின் ஸ்ட்ராங்கான தலைவராக உலாவரும் இவரது டீலிங்குகள் எல்லாமே மிரட்டல் ரகம்.

• ஆன்மிகத் தலைகளுடன் தொடர்புடைய தாதாக்கள் தலைநகர் வட்டாரத்தில் சிலர் உண்டு. தங்களுக்குப் பெரிய தொகை வேண்டுமென்றால், கொலை வழக்கில் கம்பி எண்ணிய குருவிடமும், நடிகையுடன் தொடர்புடைய ஆன்மிக பிரபலத்திடமும் இவர்கள் ஆஜர் ஆவார்கள். அந்த சாமிகளோ, சிலருக்கு போன் போட்டு, கைகாட்டிவிடுவார்கள். இந்தியா முழுவதும் செல்வாக்கு பெற்றுள்ள ஒரு சாமிக்கு அந்த அரசியல் புள்ளி ரொம்ப நெருக்கம். அந்த சாமியின் அறிமுகத்தால், அவரின் பக்தர்களான பல வி.ஐ.பி-க்கள் இவருக்கு நெருக்கமானார்கள். தாதாக்களில் யாருக்காவது பண நெருக்கடி என்றால், சாமியின் பரிந்துரையுடன் யாரோ ஒரு பணமுதலையோடு அந்த தாதாவைக் கோத்துவிடுவார் இந்த அரசியல் புள்ளி. அந்தப் பண முதலைக்கு எப்போதாவது ‘சப்போர்ட்’ தேவையென்றால், இந்த தாதாக்கள் ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவார்கள்.

நூறு கோடி ரூபாய் நிலத்தை வெறும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியது, பல கோடி மதிப்புள்ள கம்பெனி ஷேர்களை பைசாகூட வாங்கிக்கொள்ளாமல் எழுதிக் கொடுத்தது எனப் பல அப்பாவிகளின் கண்ணீர்க் கதைகளுக்குப் பின்னால், அந்த சாமியின் ஆதரவுபெற்ற தாதாக்களின் மிரட்டல் இருக்கிறது.

இந்த டான்கள் எல்லாம் ரேஞ்ச் ரோவர், லேண்டு ரோவர், ஆடி கார்கள் என வந்திறங்கி, அரசியல் மேடைகளில் ஏறி ஊழலுக்கு எதிராக உரக்கப் பேசுகிறார்கள் என்பதுதான் இந்த சமூகத்தின் சாபக்கேடு.

- ந.பா.சேதுராமன்
படம்: மதன்சுந்தர்
ஓவியம்: ஹாசிப்கான்

தாதா ஜூனியர்: வெயிட்டான ஒயிட் காலர் தாதாக்கள்!

 காரைக்காலை அடுத்த திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு என்கிற ராதாகிருஷ்ணன். கள்ளச்சாராயத்தில் கொடிகட்டிப் பறந்து பல கோடிகளைச் சம்பாதித்தவர். இவர், தன் மனைவி வினோதாவைப் பிரிந்து, இரண்டாவதாக எழிலரசி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால், முதல் மனைவியுடன் தகராறு.

கோபம்கொண்ட முதல் மனைவி வினோதா ஏவிய கூலிப்படை, 2013 ஜனவரி 11-ம் தேதி காரைக்காலில் டூவீலரில் வந்த ராமுவையும், எழிலரசியையும் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டியது. ராமு, தலை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட, எழிலரசி 132 இடங்களில் வெட்டுப்பட்டு மெடிக்கல் மிராக்கிளாக உயிர் பிழைத்தார்.

மருத்துவமனையிலிருந்து வந்ததும், ‘‘உயிராய் நேசித்த என் தெய்வம் ராமுவைக் கொன்ற அனைவரையும் பழிதீர்ப்பேன்’’ என்று சபதம் எடுத்த எழிலரசி, தனக்கென ஒரு படையை உருவாக்கினார். அவர்களின் முதல் பலி, ராமு கொலையில் பங்கேற்ற அய்யப்பன். அடுத்ததாக, வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற வினோதாவை சீர்காழி பைபாஸ் ரோட்டில் வைத்து தீர்த்துக்கட்டினார். கடைசியாக, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் இருந்த புதுவை முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை கொடூரமாய் கொலை செய்தது எழிலரசியின் படை. எழிலரசியின் டார்கெட்டில் இருக்கும் இன்னும் நால்வர், ஒவ்வொருநாளும் அச்சத்தில் செத்துப் பிழைக்கிறார்கள். ‘எந்தக் கொலையிலும் எனக்குச் சம்பந்தமில்லை’ என்று சொல்லியே ஜாமீன் பெற்றுவிடும் எழிலரசி, இப்போது புதுவை சிறையில் இருக்கிறார். இவரை ‘புதுவையின் பூலான்தேவி’ என வர்ணிக்கிறது போலீஸ்.   

- மு.இராகவன்