Published:Updated:

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

Published:Updated:
தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

திருச்சி தாதாக்களுக்கென ஒரு தனி ஸ்டைல் உண்டு. மற்ற ஊர்களில் தாதாக்கள் அரசியல்வாதிகளின் தயவில் இருப்பார்கள். இங்கே பல தாதாக்கள் அரசியல்வாதிகளாகவே இருக்கிறார்கள்.

மோடிக்கு பேனர் வைத்த தாதா பசு!

திருச்சியில் தாதாக்களை ஒடுக்க போலீஸார் நடத்திய என்கவுன்டரில் பிச்சமுத்து, ‘முட்டை’ ரவி, மணல்மேடு சங்கர் உள்ளிட்டவர்கள் வீழ்த்தப்பட்டனர். அவர்கள் அனைவருமே அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக வலம்வந்தவர்கள். அதன்பின், திருச்சி அமைதி பூமியாக இருந்தது. திருச்சியின் அடுத்த தலைமுறை வஸ்தாதுகளாக உருவெடுத்த மண்ணச்சநல்லூர் குணா, சாமி ரவி, பட்டறை சுரேஷ், விக்டர், சேட்டு உள்ளிட்டோர் முழுநேர அரசியல்வாதிகளாகவே மாறிவிட்டனர்.

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

திருச்சி பொன்மலை, கீழக்குறிச்சியைச் சேர்ந்த ‘தாதா’வான மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷை, ‘பசு’ என்றே அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கிறார்கள். இவர்மீது கொலை, ஆள்கடத்தல் என திருச்சி, தஞ்சை, அரியலூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காரை மோதிக் கொலைசெய்துவிட்டு, உடலைத் தண்டவாளத்தில் வீசிவிடுவார். கொல்லப்பட்டவரின் உடல், ரயிலில் அடிபட்டு சின்னாபின்னமாகச் சிதைந்துவிடும். இப்படி, போலீஸ் உள்பட அனைவரின் கவனத்தையும் திசைதிருப்புவதே இவரது ஸ்டைல். ஜூலை 7-ம் தேதி இவருக்குப் பிறந்தநாள். அன்றைய தினம், திருச்சி முழுக்க போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்துவது இவரது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

சில வருடங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபோது, பிறந்த தினத்தன்று அரசியல் தலைவர்கள் பலர் போனில் வாழ்த்தினார்களாம். திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பேனர்கள் வைத்து அசத்தினார் பசு.

சிறைக்குள் செயல்படும் குணா


திருச்சியைக் கலக்கிய முட்டை ரவிக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சாமி ரவி, மண்ணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டியன். இலங்கையைச் சேர்ந்தவரான குணா, இப்போது ‘மண்ணச்சநல்லூர் குணா’ என மாறியிருக்கிறார். முட்டை ரவியின் மரணத்துக்குப்பின், அந்த டீமுக்குத் தலைவரானார். அடுத்தடுத்த நெருக்கடிகளால், மலைவாழ் மக்களுக்கான இயக்கம் உருவாக்கினார்.

இப்போது, அ.தி.மு.க-வில் அதிகாரம் நிறைந்த தலைமையின் குடும்பத்துடன் மிக நெருக்கத்தில் இருக்கிறார். பலமுறை குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தாலும், அடுத்த சில வாரங்களில் அதை உடைத்து வெளியே வந்துவிடுவார். அதனால், இவர்மீது கடுப்பில் இருந்த போலீஸ், சில வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் குணா சிக்கியபோது, இடுப்பை உடைத்துச் சிறைக்குள் அடைத்தது. சிறையில் இருந்தவாறே ஸ்கெட்ச் போட்டு சில ஆபரேஷன்களை நடத்தி முடிக்கிறாராம்.

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

டிமிக்கி கொடுக்கும் சாமி ரவி

திருச்சியைத் திக்குமுக்காட வைத்த முட்டை ரவியின் கூட்டாளிகளில் முக்கியமானவர் சாமி ரவி. ஸ்கெட்ச் போட்டு ஆளைத் தூக்குவதில் எக்ஸ்பர்ட் என்கிறார்கள். முட்டை ரவி இருந்தவரை நண்பர்களாக இருந்த குணாவும் சாமி ரவியும், அவருடைய மறைவுக்குப் பின்னர் எதிரிகளாக மாறினார்கள்.

வாண்டையார் குரூப்பில் ஐக்கியமான சாமி ரவி, பெரிய டீல்களை முடித்தார். அரசியல்வாதியாகிவிட நினைத்து, ‘அகில இந்திய முக்குலத்தோர் பாசறை’யில் இணைந்து மாநில நிர்வாகி ஆனார். இதன்மூலமாக, அதிகார மையத்துக்கு நெருக்கமான குடும்பத்துடன்  ஒன்றிப்போனார். முக்கியமான சில கொலை வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கும் திருச்சி காவல்துறை, பல மாதங்களாக இவரை வலைவீசித் தேடி வருகிறது. 

என்கவுன்டர் பயத்தில் சுந்தரபாண்டியன்


முட்டை ரவி, மண்ணச்சநல்லூர் குணா ஆகியோருடன் இருந்தவர், சுந்தரபாண்டியன். ராமஜெயம் பாணியில் கொல்லப்பட்ட ‘புல்லட்’ மனோகர் கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருந்தது. ராமஜெயம் கொலை வழக்கில் இவர்மீதும் போலீஸின் சந்தேகப் பார்வை விழுந்தது. கொலை, கொலை முயற்சி உள்பட 18 வழக்குகள் இவர்மீது உள்ளன. நான்கு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். துப்பாக்கியைக் காட்டி போலீஸாரை மிரட்டிய வழக்கில் கைதாகி, சிறையில் உள்ளார்.

கொலை, கொள்ளைச் சம்பவங்களை முடித்த பிறகு, கல்லூரி மாணவர்களுடன் ஹாஸ்டலில் தங்குவது இவரது ஸ்டைல். இவரை என்கவுன்டரில்  போட்டுத்தள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று அலறுகிறார், சுந்தரபாண்டியனின் மனைவி காயத்ரி .

- நமது நிருபர்
ஓவியங்கள்: தீபக்

மேஜிக் மணி!

தாதாக்களின் செல்வாக்கு அதிகம் இல்லாத ஏரியா கோவை. இந்த மாநகரை மிரட்டும் ஒரே தாதா, குண்டு செந்தில். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இருப்பதால் செந்திலுடன் ‘குண்டு’ சேர்ந்துகொண்டது. ஆரம்பத்தில் கவுண்டம்பாளையம் பகுதி கிளப்களில் மாமூல் வசூல், சின்னக் கைகலப்புகள் எனச் சுற்றித் திரிந்தவருக்குப் பிரபல ரவுடியான ஜிம் ஹக்கீம் போன்றோரின் தொடர்புகள் கிடைத்தன. அதையடுத்து, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி எனக் குற்றங்கள் விரிந்தன. நாளடைவில் கோவையில் பிரபல ரவுடியாக குண்டு செந்தில் மாற, இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தாதா ஜூனியர்: திருச்சியைப் பிரிச்சு மேயும் அரசியல் தாதாக்கள்!

‘‘சட்டவிரோத தொழில் செய்பவர்களிடம் மிரட்டிப் பணம் பார்ப்பதில் இவர் கில்லாடி’’ என்கிறது போலீஸ். ‘திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக’ அவர்கள் புகாரும் செய்வதில்லை. இது செந்திலுக்கு வசதியாகிவிடுகிறது. இப்போது ‘மேஜிக் மணி’ மேட்டரில் செந்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறுகின்றனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி செய்யும் மோசடியின் பெயர்தான் மேஜிக் மணி.

ஆரம்பத்தில் ஃபங்க் ஹேர் ஸ்டைல், ஜீன்ஸ் பேன்ட் என டெரர் லுக்கில் இருந்தவர், இப்போது அரசியல் தொடர்புகள் கிடைத்ததும் டீசன்ட் லுக்கில் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

- குருபிரசாத்