Published:Updated:

தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

Published:Updated:
தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

துரையைக் களமாகக்கொண்ட சினிமாக்களில் ரத்தம் தெறிப்பது போலவே, மதுரையில் நிஜத்தில் மண் சிவந்த காலமும் உண்டு. ஆரப்பாளையத்துக்கு, ஒத்தக்கடைக்கு, சிம்மக்கல்லுக்கு, வில்லாபுரத்துக்கு, கரிமேட்டுக்கு, நெல்பேட்டைக்கு என ஒவ்வொரு ஏரியாவையும் தாதாக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எல்லைகள்தாண்டி பஞ்சாயத்து செய்தால், தாதாக்களுக்குள் மோதல்கள் நடக்கும்.

அப்படி கோலோச்சிய தாதாக்களில் பலரும் அரசியல்வாதிகளாக அவதாரமெடுத்துவிட்டார்கள். சிலரோ, சாதி - மத அமைப்புகளின் தலைவர்களாகிவிட்டனர். சிலர், கல்வித் தந்தைகளாகவும், தொழிலதிபர்களாகவும் வலம்வருகிறார்கள்.

தாதாக்களை நம்பியிருந்த அல்றசில்றைகள் எல்லாம் கூலிப்படையினராக மாறிவிட்டனர். வட மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘அசைன்மென்ட்’ முடிப்பது இவர்களின் முழுநேரத் தொழில். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு நெட் ஒர்க் உண்டு. அரசியல் கொலை, சாதியப் படுகொலை, பழிக்குப்பழி கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை எனக் கொடூரமான கொலைகள் தமிழகத்தில் எங்கு நடந்தாலும், அவற்றில் மதுரை கூலிப்படை கும்பல்களுக்குப் பங்கு இருப்பதாகப் புலனாய்வு அதிகாரிகள் சொல்கிறார்கள்.

தாதா ஜூனியர்: கூடல் நகரம் இப்போ கூலிப்படை நகரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த வருடம் விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் தி.மு.க ஒன்றியச் செயலாளர் படுகொலை, திருவண்ணாமலையில் மாணவி அஸ்வினி பலாத்காரம் செய்து படுகொலை, சென்னை பெரியமேட்டில் ஃபைனான்ஸ் அதிபர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை, பெரியமேடு காவல் நிலையம் அருகே சமூக ஆர்வலர் இளங்கோ கொலை, அரியலூரில் புதிய நீதிக்கட்சி நிர்வாகி முருகேசன் படுகொலை, வடபழனியில் நாகேஸ்வராஜ் என்ற வங்கி ஊழியர் கொலை, கோடம்பாக்கத்தில் வக்கீல் முருகன் கொலை... என்று பரபரப்பான பல கொலைச் சம்பவங்களில் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

‘தனக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒருவரை, பணத்துக்காகக் கொலை செய்துவிட்டு, பதற்றமின்றி வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கூலிப்படையினர் யார், இவர்களை உருவாக்குபவர்கள் யார், கொலை செய்வதைத் தொழிலாக இவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள்’ என்பது பற்றி விசாரித்தால், பலவிதமான சமூகக் காரணங்களைக் கூறுகிறார்கள் உள்விவரம் தெரிந்தவர்கள்.

வறுமையாலும் கண்காணிப்பில்லாத குடும்பப் பின்னணியினாலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுக் கூலிப்படையாகச் செல்பவர்கள் ஒருபக்கம்... இன்னொரு பக்கம் மோசமான போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி, அதற்காக எந்தக் கொடூரத்தையும் செய்யத் தயங்காதவர்கள்... உழைக்காமல் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள்... தன்னைப் பார்த்து எல்லோரும் பயப்படுவதை ரசிக்கும் மனநிலை கொண்டவர்கள்... இவர்கள்தான் கூலிப்படைக்குள் சேர்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சாதியும் அதற்குப் பின்னால் உள்ள அரசியலும்தான் கூலிப்படையினரை உருவாக்கிவருகிறது.

சிலர், நட்புக்காகவும் பாசத்துக்காகவும் கூலிப்படையினராக மாறுவதுண்டு. பொட்டு சுரேஷ் கொலையே, அட்டாக் பாண்டிமீது நட்பும் பாசமும் வைத்தவர்களால் நடந்தது என்று சொல்லப்படுவதுண்டு.

1950-களிலிருந்தே மதுரையில் கேங்ஸ்டர்கள் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறார்கள். அதன் நீட்சியாகவே கூலிப்படையினர் மதுரையில் பெருகியதாகச் சொல்கிறார்கள்.

கடந்த வருடத்தில் மட்டுமே சென்னை, கோவை, பொள்ளாச்சி, விருதுநகர் பகுதிகளில் நடந்த கொலைகளில் மதுரையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை போலீஸார் கைது செய்தனர்.

கூலிப்படையினரில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 30 வயது இளைஞர்கள்தான். பொதுவாக, கொலை சம்பவத்தில் ஈடுபடும் கூலிப்படைக் கும்பல் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், கூலிப்படையை ஏவிவிட்டவருக்கு, கொலை வழக்குடன் கூடுதலாக 120பி பிரிவின் கீழ் சதித்திட்டம் தீட்டியதற்கான வழக்கும் பதிவுசெய்யப்படுகிறது. எனினும் ஏவிவிட்டவரை, இக்கும்பல் காட்டிக் கொடுப்பதில்லை. அதனால், பல கொலை வழக்குகளில் தண்டனை பெறாமல் வெளியில் வந்து, மீண்டும் அடுத்த அசைன்மென்ட்டுக்கு ஃப்ரெஷ்ஷாக ஃபார்ம் ஆகிவிடுகிறார்கள்.

மதுரையில் அரசியல் கட்சிப் புள்ளிகள் பலருக்குப் பின்னாலும், ஒரு கூலிப்படை இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. எக்காரணம் கொண்டும் தங்களை இயக்குபவர்கள் யாரென்பதை, போலீஸிடம் சிக்குகிற கூலிப்படைக் கும்பல் காட்டிக்கொடுப்பதில்லை. அந்த விசுவாசம் நீடிக்க வேண்டுமே... அதற்காக, கூலிப்படை ஆள் உள்ளே இருந்தாலும், அவர்களின் குடும்பத்தை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார்கள் அவர்களை இயக்கும் அரசியல் புள்ளிகள்.

கூலிப்படையினரின் செயல்பாட்டைக் காவல்துறையினர் தனி அணி அமைத்துக் கண்காணிப்பதுடன், இதுபோன்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

- செ.சல்மான்