Published:Updated:

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

Published:Updated:
தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

மிழ் சினிமாவில் டாக்டர்னா கண்ணாடி போட்டிருப்பாங்க, சயின்டிஸ்ட்னா ஆட்டுத்தாடி வெச்சிருப்பாங்கங்கிறது மாதிரி, தாதா என்றாலே இப்படித்தான் இருப்பாங்கனு சில மேட்டர்ஸ் இருக்கு. அது என்னனு பார்ப்போமா?

• தன் கூடவே இருக்குற அடியாட்களை கப்பிக் காரணங்களுக்கெல்லாம் போட்டுத்தள்ளி , ஹீரோவின் வேலையை இன்னமும் சுலபமாக்கிடுவாங்க.  ஒருவேளை, ஹீரோவைத் தெரியாத்தனமா பிடிச்சிட்டாலும் உடனே கதையை முடிச்சிடாம, பக்கம் பக்கமா வசனம் பேசி ஹீரோவைத் தப்பிக்க வெச்சுடுவாங்க. அதுதான் ஒரு நல்ல தாதாவுக்கான அடையாளம் என்று ‘தமிழ் சினிமாவும் தாதா கூமுட்டைகளும்’ புத்தகத்தில் 420-ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கு.

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஸ்கார்பியோ, டாடா சுமோ, குவாலிஸ் போன்ற மொடா சைஸ் வண்டிகளில்தான் பயணம் செய்வாங்க. அப்போதான் அடியாட்களால் சுலபமா ஃபுட்போர்டு அடிச்சுட்டு அருவாளைச் சுத்திக்கிட்டே வரமுடியும்.

• முடி வளர்க்கிறதுகூட ஆடம்பரம். ஆனால் நாய் வளர்க்கிறது அத்தியாவசியம். துரோகிங்களுக்கு நாய்க்கடிதான் சிறந்த ட்ரீட்மென்ட்னு உளமார உறுதியா நம்புவங்க. உண்மையிலேயே, தாதாக்களை விடவும் நாய்கள்தான் ஹீரோவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும்.

• வீடு துடைக்குற மாப்பைத் தலைகீழாத் திருப்பிப் பிடிச்சா பார்க்க எப்படி இருக்குமோ, அதேமாதிரியான ஹேர் ஸ்டைலில்தான் வலம் வருவாங்க. சீயக்காய், சாம்பிராணி எல்லாம் போட்டு மெயின்டெய்ன் பண்ணணும். பாவம்ல!

• கல்யாணப் பொண்ணைவிட, கால் பவுன் நகையாவது அதிகம் போட்டிருப்பாங்க. நெத்திச்சுட்டி, தாலி செயினைத்தவிர வேறு எந்த நகையையும் அணிய தமிழ் சினிமா தாதாக்களுக்கு அத்தனை உரிமையும் இருக்கு. அதேபோல், முகத்தில் முறுக்கு மீசையும் செம்பழுப்பு நிற தாடியோடும்தான் வலம் வருவாங்க.

• என்னதான் பெரிய கொலைகாரனா இருந்தாலும் வெப்பன்ஸ் வெச்சிருக்க மாட்டாங்க. கொலை பண்ணும்போது, கையை நீட்டுனா... கைக்கு  கத்தி தானா வரும். கத்தி ஒவ்வொண்ணும் சிங்கப்பூர் ஷாப்பிங்லேயே இல்லாத டிசைனா இருக்கும்.

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

• தேவலோகத்து செட் மாதிரி தாதாக்களின்  வீடு எப்பவுமே புகை மண்டலமாதான் இருக்கும். ஒவ்வொரு மூலைக்கும் ஒருத்தர் நின்னு, ஆயுதங்ளை ஆயில் போட்டுத் துடைச்சுட்டே இருப்பாங்க.

• மார்க்கெட் கடைக்காரங்களை மிரட்டிக் காசு வாங்குவாங்க. அதிலேயும், ஒல்லி பெல்லியோட பொரிக்கடை வெச்சிருப்பார் ஒரு தாத்தா. அவர்தான் தாதாக்களின் பிடித்தமான பீஸு. ' தம்பி, இன்னும் போணி ஆகலை' எனப் பாவமாய்க் கதறினாலும், கருணையே காட்டாதவர்கள்தான் தாதா, டான்.

• பங்குனி வெயில் பல்லைக்காட்டி அடிச்சாலும், சித்திரை வெயில் சிரிச்சுக்கிட்டே அடிச்சாலும், ஜீன்ஸ் சட்டைதான் போட்டிருப்பாங்க. கூடவே உள்பனியன் வேற. அதான் இவ்ளோ டென்ஷன் ஆவுறாங்க பாஸ்... கண்டுபிடிச்சுட்டேன்.

- ப.சூரியராஜ், ஓவியம்: ரமணன்

தாதா ஜூனியர்: “தம்பி, இன்னும் போணி ஆகலை!”

பிடிச்ச  ஆண்களுக்கு  தங்கக்காசு!

மை
திலி, ஜீன்ஸ் - டி ஷர்ட் அணிந்து ஹெல்மெட்டுடன் பைக்கில் கிளம்பினால், அன்று வழிப்பறி செய்யப்போவதாக அர்த்தம். சேலை உடுத்தி குடும்பப்பெண் போல பாந்தமாகச் சென்றால், யாரோ வயதானவர்களின் வீடுகளுக்குக் குறிவைத்துவிட்டார் என்று அர்த்தம். சுடிதார் அணிந்து ஸ்டைலாக சென்றால், கல்லூரி மாணவர்கள், தொழிலதிபர்கள் யாரையோ கவிழ்த்து, அவர்களிடம் இருப்பதைச் சுருட்டப் போகிறார் என அர்த்தம். தனியாகச் சென்றாலும், கூட்டணி போட்டுச் சென்றாலும், களத்தில் கெத்துக் காட்டுவது மைதிலியின் ஸ்டைல்.

சேலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் மைதிலி. ஒல்லியாக, மாநிறத்தில் இருக்கும் இவர், ஒரு கேங்கையே வைத்துக்கொண்டு வழிப்பறி, திருட்டு, ஆள் கடத்தல் என அட்ராசிட்டி செய்கிறார். எப்போதும் இவருடன் வாட்டசாட்டமான ஆசாமிகள் இருப்பார்கள். அவர்கள்மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மைதிலிமீது இரண்டு முறை குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. பெரிய அளவில் வேட்டை கிடைத்தால், ஏரியா மக்களுக்குக் கறி விருந்து கொடுப்பார். உதவி கேட்டுவருபவர்களுக்கு, பணத்தை வாரி இறைப்பார். விசாரணைக்காக ஸ்டேஷனுக்குப் போனாலும், கால் மேல் கால் போட்டு உட்காருவார். ‘‘கொள்ளை அடிக்கும் பணத்தை என்ன செய்கிறாய்?’’ என்று மைதிலியிடம் ஒரு போலீஸ் அதிகாரி கேட்டபோது, ‘‘உங்க ஆளுங்களுக்குக் கொடுக்கறதுலேயே நிறைய செலவாகிடுது. அதுபோக, எனக்குப் பிடிச்ச ஆண்களுக்குத் தங்கக்காசு கொடுப்பேன்’’ என்று சொல்லி அதிரவைத்தார்.

- வீ.கே.ரமேஷ்