Published:Updated:

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

Published:Updated:
தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!
தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

ரசியல் கொலைகள், தொழில் போட்டிக் கொலைகள், பழிவாங்கும் கொலைகள் எனப் பலவகைக் கொலைகளுக்குப் பெயர்போனது காஞ்சிபுரம். சென்னை மாநகரம் விரிவடையத் தேவைப்படும் புறநகர்ப் பகுதிகளும், பன்னாட்டுத் தொழிற்சாலைகளும் இந்த மாவட்ட எல்லைக்குள்தான் உள்ளன. அதனால், நிலத்தின் மதிப்பு தாறுமாறாக எகிறிக்கிடக்கிறது. இந்த மாவட்டத்தில் நிகழும் பெரும்பாலான கொலைகளுக்கு நிலம் தொடர்பான டீலிங்ஸ்தான் காரணம்.

செங்கல்பட்டு குரங்கு குமார், காஞ்சிபுரம் ஸ்ரீதர் போன்ற பெரிய புள்ளிகள் இப்போது உயிருடன் இல்லாவிட்டாலும், காஞ்சிபுரம் காவல்துறைக்குச் சவால்விடும் வகையிலான தாதாக்கள் இப்போதும் உண்டு. குன்றத்தூர் வைரவன், படப்பை குணா, பட்டரவாக்கம் சிவா, வல்லம் பூபதி என ஊர் அடைமொழிகளோடு வலம்வரும் இவர்களின் பெயர்களைக் கேட்டாலே பகுதி மக்கள் வெலவெலத்துப்போவார்கள்.

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குன்றத்தூர் வைரவன்

நாட்டு வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட். சிவகாசி பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பார். வெடிகுண்டின் வீரியத்துக்காக அதில் கண்ணாடி, இரும்புத்துகள் போன்றவற்றைச் சேர்ப்பார். எதிர்பார்க்காத நேரத்தில் குண்டுகளை வீசி, எதிரிகளை நிலைகுலையச் செய்வார். அப்படித் தடுமாறி நிற்பவர்களை வைரவனின் ஆட்கள் அரிவாளால் சிதைத்துவிடுவார்கள். ஸ்ரீபெரும்புதூர் தாதா பி.பி.ஜி.குமரன் கொலை வழக்கு உள்பட பல்வேறு கொலை வழக்குகள் இவர்மீது உள்ளன. காவல்துறையின் டாப் லிஸ்ட்டில் இருக்கிறார் வைரவன்.

பட்டரவாக்கம் சிவா

உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 15 வருடங்களுக்கு முன் கத்தியை எடுத்தவர் பட்டரவாக்கம் சிவா. உறவினர்கள் இருவரைக் கூறுபோட்டு ரத்தம் பார்த்தவர். அப்படியே தாதா ஆனார். சிவாவின் வேகத்தைக் கண்டு புதிய அசைன்மென்ட்களும் வெளியிலிருந்து வரத்தொடங்கின. செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரைக் கொன்ற ரவிபிரகாஷை, 2012-ல் போட்டுத்தள்ளினார். அதிலிலிருந்து பட்டரவாக்கம் சிவா பெயர் பிரபலமடையத் தொடங்கியது. அதையடுத்து, சிங்கப்பெருமாள் கோயில் முனிராசு, செங்குன்றம் ரவி என அடுத்தடுத்த அரசியல் கொலைகளைத் தொடர்ந்ததால் டாப் லிஸ்ட்டில் வந்தார் சிவா. ஆறு கொலைவழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இவர்மீது இருக்கின்றன. சிறைகள் அவரது க்ரைம் நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்தின. இதனால், நேரடியாகக் களத்தில் இறங்காமல் அசைன்மென்ட் முடிக்கவும் கோர்ட்டில் ஆஜராகவும் எனத் தனித்தனி டீம்களை ஏற்படுத்திக் கொண்டார். செங்கல்பட்டு பகுதியில் இருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் சிவாவுக்குப் பணிந்து நிற்கின்றன. பஞ்சாயத்துத் தேர்தலில் மனைவியை நிற்கவைத்து வெள்ளைச் சட்டையில் கெத்தாக வலம் வரவேண்டும் என்பது சிவாவின் ஆசை. இன்னொருபக்கம் சிவாவை முடித்துவிட எதிரிகள் கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

படப்பை குணா

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் போன்ற பகுதிகள் படப்பை குணாவின் க்ரைம் ஏரியா. தாம்பரம் பகுதியில் கோலோச்சி வந்த க்ரைம் புள்ளி ஒருவரிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர் குணா. பின்பு, அவரிடமிருந்து தனியாகப் பிரிந்தார். தொழில் கற்றுக்கொண்ட புதிதில் களத்தில் நேரடியாக இவரே ஆக்‌ஷனில் இறங்குவார். இதனால், உடலில் ஆங்காங்கே வெட்டுத்தழும்புகள் இருக்கும்.  தனக்கு நம்பிக்கையான ஆட்களை மட்டுமே வைத்துக் கொள்வார். மாவட்டத்தில் உள்ள பெரிய அரசியல் புள்ளிகள் சிலரின் கொலைப் பின்னணியில் குணா பெயர் அடிபடத்தொடங்கியது. அப்போதிலிருந்து குணா டெவலப் ஆகத் தொடங்கினார். எடுத்தவுடன் யாரையும் கொலைசெய்ய மாட்டார். முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... பணியாவிட்டால் கடைசியில்தான் கொலை. இதுதான் குணா ஃபார்முலா. இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதி கம்பெனிகளில் சகல வேலைகளும் குணாவுக்கே கிடைக்கின்றன. தனக்கு எதிரிகள் உருவாவதை குணா விரும்புவதில்லை. இதனால்,  கிடைக்கும் லாபத்தில், ஊருக்குக் கோயில் கட்டிக் கொடுப்பது, உள்ளூர் மக்களுக்கு உதவுவது போன்ற வேலைகளைச் செய்துவிடுவார். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் நிற்க மனைவியைத் தயார் செய்து வருகிறார் இவர். இதனால் அந்தப் பகுதி அரசியல் பிரமுகர்கள் மிரண்டு கிடக்கிறார்கள்.

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

வல்லம் பூபதி

தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்றுவந்தவர் வல்லம் பூபதி. பார்ப்பதற்கு அப்பாவித் தோற்றம்.  உடல் மெலிந்து காணப்படுவார். எந்த வேலையையும் நேரடியாகச் செய்ய மாட்டார். ஆட்களை வைத்தே முடித்துக்கொள்வார். உள்ளூர் பிரமுகர்களை மிரட்டிப் பணம் பறிப்பதுதான் முக்கியத் தொழில். போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்சென்றால் ரத்தவாந்தி எடுப்பார். இதனால் அடிக்கவே பயப்படுவார்கள். இதையே தனது பலமாகப் பயன்படுத்திக்கொள்வார். மூன்று கொலை வழக்குகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பூபதிமீது இருக்கின்றன.

- பா.ஜெயவேல்

சரண்டர் தாதா தமிழரசன்!

‘‘எ
ன்னை போலீஸால் பிடிக்க முடியாது. நானேதான் கோர்ட்டில் சரண்டர் ஆவேன்’’ என பஞ்ச் டயலாக் பேசும் தாதா, தமிழரசன். சரணடைந்து சிறைக்குப் போனாலும், சீக்கிரமே வெளியில்வந்து தமிழரசனின் வேட்டை தொடரும். 

புதுச்சேரியில் பல தலைகளை வெட்டி உருட்டிய தாதாக்களில் பலரும் அவர்களுக்குள்ளாகவே வெட்டிக்கொண்டு இறந்துவிட்டனர். எஞ்சியிருக்கும் ஒரு சிலரும் சிறையிலிருந்தபடி, வியாபாரிகளையும் தொழிலதிபர்களையும் செல்போனில் மிரட்டிப் பணம் வசூல் செய்வதோடு மட்டும் நின்றுகொண்டனர்.

தாதா ஜூனியர்: முதலில் எச்சரிக்கை... அடுத்து மிரட்டல்... கடைசியில் கொலை!

இப்போது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என எல்லா ஏரியாக்களிலும் பறப்பது தமிழரசனின் கொடிதான். விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த தாதா ராஜ்குமாரின் தம்பி தமிழரசன். அண்ணனின் விழுதாகத் தொழிலுக்கு வந்த தமிழரசன், சாராயம் கடத்துவது, தொழிற்சாலைகளில் மாமூல் வசூல் செய்வது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என பிஸியானார். தொழில் போட்டியில் 2014-ம் ஆண்டு தினேஷ், ராஜேஷ் என்ற இருவரைக் கொன்றார். முதல் அட்டாக்கே இரட்டைக் கொலை என்பதால், தமிழரசனை எல்லோரும் திகிலோடு பார்த்தார்கள்.

விழுப்புரத்தில் எதிரணியாகச் செயல்பட்டுவந்த தாதா மணிகண்டனுக்கு ஸ்கெட்ச் போட்டார். விஷயம் தெரிந்து மணிகண்டன் தலைமறைவாக, அவருக்கு அனைத்துமாக இருந்த ஜனாவைக் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்தது ராஜ்குமார், தமிழரசன் குரூப்.

‘தமிழகத்திலிருந்து வந்து புதுச்சேரியில் கோலோச்சுவதா’ என நினைத்த மேட்டுப்பாளையம் தாதாக்களான நாய் சேகர், சதீஷ், ஜெரால்டு ஆகியோர் தமிழரசனைத் தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்டனர். தீபாவளி தினத்தன்று இந்த மூவரையும் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு சேலம் நீதிமன்றத்தில் ‘கூலாக’ சரணடைந்துவிட்டார் தமிழரசன். 

- ஜெ.முருகன்