Published:Updated:

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

பங்கு பிரித்த தாதாக்கள்!

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

பங்கு பிரித்த தாதாக்கள்!

Published:Updated:
தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

‘தாதா’ என்றதுமே நினைவுக்கு வருவது வடசென்னை ஏரியா. 1980-க்கு முன்புவரை வடசென்னையில் கொலை என்பது அரிதான க்ரைம். 1987-ல் ஒருநாள்... வடசென்னையின் காசிமேடு சூரியநாராயண தெரு - குப்பம் சாலை சந்திப்பில் வெட்டிச் சாய்க்கப்பட்டார் பாஸ்கர். நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைக் காலார நடக்கவிட்டுக் கூடவே வந்துகொண்டிருந்த பாஸ்கரை, ஒரு கும்பல் வெட்டியது. சென்னையில் நடந்த முதல் ‘தாதா’ கொலை அதுதான் என்கிறார்கள் ‘தாதா’க்கள் வட்டாரத்தில்.

கொலைசெய்யப்பட்ட பாஸ்கரின் பெயர், ‘வடக்கத்தியான்’ பாஸ்கர் என்றே போலீஸ் ரெக்கார்டில் இருந்தது. பாஸ்கருக்குப்பின், வடசென்னையில் பல தாதாக்கள் தலையெடுத்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சாராய வியாபாரம், கான்ட்ராக்ட், செம்மரக் கடத்தல், சந்தனக்கட்டைகள் கடத்தல், துறைமுகம் வழியாக போதைப்பொருள்களைக்  கடத்தி வருதல் என அத்தனை முரண்வணிகங்களும் முளைத்தன. இவர்களுக்கு, ‘எதையும் செய்யும்’ இளைஞர்கள் தேவைப்பட்டனர். அதற்கு, சென்னை மக்களின் ‘தில்’லும், ஏழ்மையும் கைகொடுத்தன.

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

பாஸ்கருக்குப் பின் பவுடர் ரவி, ஸ்கெட்ச் ரவி, சி.ஜி. காலனி ரவி, பாக்ஸர் வடிவேலு, மாலைக்கண் செல்வம், குள்ளப்பொண்ணு குமார் என்று ஒரு டீம் உருவானது. வடசென்னையின் இன்னொரு பகுதியான வியாசர்பாடியில் நாகேந்திரன், ஆசைத்தம்பி, கபிலன், சேரா, வெள்ளை ரவி ஆகியோர்  தலையெடுத்தனர். திருவொற்றியூர், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் போன்ற பகுதிகளில் ஏழுகிணறு மணி, காட்டான் சுப்பிரமணி, கேட் ராஜேந்திரன், கேட் ராமமூர்த்தி, திருவொற்றியூர் விஜி, ஒத்தவாடை சண்முகம், குதிரை வெங்கடேசன், குட்டியப்பா, தீனன், கர்ணா, அரி-குபீ, சின்னா என்கிற சென்னகேசவலு எனப் பட்டியல் பெரிதாய் நீண்டது. 

தென்சென்னையில் மாம்பலத்தான், அயோத்திகுப்பம் வீரமணி, வீரக்குமார், குண்டு-திருநா, தோட்டம் சேகர், ஜாம்பஜார் முரளி மற்றும் ஃபீல்டில் இறங்காமல் கூலிப்படையை மட்டுமே நம்பிய அப்பு என்கிற கிருஷ்ணசாமி போன்ற ‘ஒயிட் காலர்’ தாதாக்கள் எனப் பலர் இருந்தனர்.

இன்றைய அடிப்பொடிகளே அடுத்த தலைமுறை தாதாக்கள். சிறைக்குள் இருந்தபடியே ‘தல’ சொல்கிற வேலைகளைச் செய்வது இவர்களின் பணி. ‘தல’ சொல்லாத வேலையையும் செய்வார்கள். ‘தல’யின் வேகம் குறையும்போது, ஜூனியர் ‘தல’ களத்தில் இறங்கிவிடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

வாடகை வீடுகளில் பல ஆண்டுகளாகக் குடியிருப்பவர்கள், அவ்வளவு சீக்கிரத்தில் வீடுகளைக் காலிசெய்வதில்லை. இதுதொடர்பான புகார்களுக்கு போலீஸார் முக்கியத்துவம் தருவதில்லை என்பதால், அந்த கேப்பில், ‘தாதா’க்கள் என்ட்ரி ஆகிறார்கள்.

சென்னையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மாலைக்கண்’ செல்வம்தான் நம்பர் ஒன் தாதா. ‘சின்னவர்’ என்று இவரை அழைக்கிறார்கள். சாய்வாகப் பார்க்கும் அவருடைய பார்வையைக் குறியீடாய் வைத்தே ‘மாலைக்கண்’ செல்வம் என்ற பெயர் வந்துள்ளது. அதற்காக, யாரும் அவரை மாலைக்கண் செல்வம் என்று அழைத்தால் அவ்வளவுதான். ‘சின்னவரைப் பார்க்கணும்’, ‘சின்னவர் வீடு எங்கே?’ என்றால்தான், அவரைப் பார்த்துவிட்டு பத்திரமாகத் திரும்பலாம்.

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

பெரியவர் யார் தெரியுமா? அயோத்திகுப்பம் வீரமணிதான்.  தென்சென்னைக்குப் பெரியவர். வடசென்னைக்கு சின்னவர். இருவரும் அவரவர் ஏரியாவுக்குள் மட்டுமே நிற்பார்கள். மற்றவர் ஏரியாவுக்குள் நுழைந்து எந்தப் பஞ்சாயத்தும் செய்வதில்லை ‘நமக்குள் மோதிக்கொண்டால், புது ஆள் உள்ளே வந்துடுவான்’ என்ற தொழில்ரகசியம்தான் அதற்குக் காரணம். போலீஸ் என்கவுன்டரில் பெரியவரின் தலை உருண்டது. சின்னவரும் ‘தொழிலை’ நிறுத்திவிட்டு, ஆன்மிகத்தில் இறங்கிவிட்டார்.

“ ‘இந்த வாழ்க்கையே பிடிக்கலை. நான், திருந்திட்டேன். எல்லாத்தையும் நிறுத்திக்கிறேன்’ என்று சொல்லி, 10 ஆண்டுகளுக்குமுன்பு போலீஸில் சரண்டர் ஆனார். தண்டனைகள் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு வெளியே வந்தார். அதன் பிறகு, மதம் மாறி இவர், போதகராக அன்புமொழி பேசுகிறார். கடற்கரையில் கற்பாறை இடுக்கில் சத்தமில்லாமல் வாழும் ‘நத்தை’யைப் போல, சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார்’’ என்கின்றனர் செல்வத்தின் ஆட்கள்.

மாலைக்கண் செல்வம் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் பழவேற்காட்டுக்குச் சென்றோம். ‘‘தம்பி... நீங்க வரப்போற தகவல் எங்களுக்கு முன்னாலே வந்திடுச்சு. யார்கிட்டேயும் பழைய விஷயங்களைப் பேசுற நிலையில் சின்னவர் இல்லை. அவர், முழுநேரமா சுவிசேஷம் பண்ணிகிட்டு இருக்கார். குடும்பத்தில் நிம்மதி, வேலையில் முன்னேற்றம், தொல்லை தரக்கூடிய கனவுகள்... இப்படி ஏதாவது பிரச்னைகள் இருந்தா சொல்லுங்க... அதை அவர் தீர்த்துவைப்பார். ‘சின்னவர்’னு கேட்டுட்டு வராதீங்க” என்றனர். “வேற எப்படிங்க கேட்கணும்”னு நாம் கேட்டதற்கு, ‘‘பாஸ்டர் செல்வம்’-னு கேட்டுட்டு வாங்க. ஒரு தடவை சொல்லுங்க, பார்ப்போம்” என்றனர்.

‘‘பாஸ்டர் செல்வம்!’’

- ந.பா.சேதுராமன்

தாதா ஜூனியர்: வடசென்னைக்கு சின்னவர்... தென்சென்னைக்கு பெரியவர்...

‘‘தம்பி வந்திருக்காங்க...’’

ந்த கோடீஸ்வரர் வீட்டு வாசலில் சீறிப் பாய்ந்துவந்து நிற்கிறது புத்தம் புதிய கார். அதில் ஓர் இளைஞர் அமர்ந்திருக்கிறார். காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் வந்த ஒருவர், ‘‘தம்பி வந்திருக்காங்க, உங்களைப் பார்க்கணுமாம்’’ என்கிறார். கோடீஸ்வரர் அலட்சியமாக, ‘‘யாருப்பா... எந்தத் தம்பி?’’ என்கிறார். தம்பியின் பெயரைச் சொன்னதுதான் தாமதம்... மனிதர் பதறிப்போய் பவ்யமாகி, ‘‘தம்பிக்கு என்ன வேணும்?’’ என்று கேட்க, வந்தவர் ஐந்து விரல்களை விரித்துக்காட்டுகிறார். மறுபேச்சில்லாமல், ரூ.5 லட்சத்தை சூட்கேஸில் வைத்துக் கொடுத்தனுப்புகிறார் கோடீஸ்வரர். 

நாகை மாவட்டம் மற்றும் சுற்றுப்புறங்களில் பலரிடமும் கெத்தாக வசூல் வேட்டையாடும் அந்தத் தம்பி வேறு யாருமல்ல, சீர்காழியை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்கிற ‘கூல்’ வினோத். சிறுவயதில் ஒரு பெண்ணை அடித்த வழக்கிலும், திருட்டு வழக்கிலும் தேடப்பட்டுத் தலைமறைவானார். பிறகு, மணல்மேடு சங்கர் குரூப்பில் ஐக்கியமானார்.  மணல்மேடு சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்தக் குரூப்புக்குத் தலைவரானார். 32 வயது வினோத்மீது கொலை, கொள்ளை உள்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

எப்போதுமே தும்பைவிட்டு வாலைப்பிடிக்கும் போலீஸார், வினோத்தை வலைவீசித் தேடிவருகின்றனர். போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வினோத்தின் ராஜ்ஜியம் தொடர்கிறது.

- மு.இராகவன்