Published:Updated:

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

Published:Updated:
தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!
தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

சிகரெட் புகை, மதுக்கோப்பைகள் உருளும் சத்தம், உரத்த குரலில் கெட்ட வார்த்தைகள், மிரட்டும் தோற்றத்தில் முரட்டு ஆசாமிகள்... ‘தாதா’ என்றால் பலருக்கும் மனதில் தோன்றும் அட்மாஸ்ஃபியர் இதுதான். ஆனால், அழகிய பெண்களும் ஆர்ப்பாட்டமான தாதாக்களாக இருப்பதுண்டு. பல நூறு ஆண்களை அடக்கி ஆண்டு, சில பல கொலைகளைச் செய்து உலகை உலுக்கிய சில பெண் தாதாக்கள் இங்கே...

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ளாடியா ஆகா ஃபெலிக்ஸ்

பெண் தாதாக்களுக்கு ஓர் அழகிப்போட்டி வைத்தால், அந்தக் கிரீடம் க்ளாடியா தலையில் நிரந்தரமாக இருக்கும். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அத்தனை சோஷியல் மீடியா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடும் க்ளாடியா, டிசைனர் உடைகளையே அணிவார். அவர் கையில் வைத்திருக்கும் ரிவால்வர்கூட அவருக்கென பிரத்யேகமாக தங்கத் தகடுகள் பொருத்தி டிசைன் செய்யப்பட்டது. ஸ்டைலிஷான AK-47 துப்பாக்கியும் வைத்திருப்பார்.

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

உலகின் மிக பயங்கரமான போதை கடத்தல் தாதா கூட்டம் என்று மெக்ஸிகோவின் ‘லாஸ் ஆன்ட்ராக்ஸ்’ குரூப்பைச் சொல்வார்கள். நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்த டெர்ரர் கோஷ்டி. க்ளாடியாவின் காதலர் ஜோஸ் ரோட்ரிகோ எல் சினோ, இதன் தலைவனாக இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் போலீஸில் சிக்கிவிட, இப்போது இந்த குரூப்புக்குத் தலைவியாக க்ளாடியா இருக்கிறார். மூன்று குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, கடத்தலையும் கொலைகளையும் டீல் பண்ணுகிறார்.

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

அன்னா க்றிஸ்டினா

அமெரிக்காவில் படுரகசியமாகப் பாலியல் தொழில் நடத்திவந்த இந்த கேங் லீடரை, 2012-ம் ஆண்டு போலீஸ் பிடித்தது. நியூயார்க்கில் இருந்தபடி, சந்தேகமே வராமல் தன் பிசினஸை செய்துகொண்டிருந்தார். பில்லியனர்கள் தவிர வேறு யாருக்கும் ‘சேவை’ செய்வதில்லை. ‘பிளேபாய்’ இதழை அலங்கரித்த பல மாடல்களும், இவரின் கட்டளைகளைக் கேட்டு கட்டில்களுக்குச் சென்றார்கள். பவுன்ஸர்களின் துணையுடன் பவனிவந்த இவரை, கஸ்டமர்போல ஒரு போலீஸ் அதிகாரி ரகசியக் கேமராவுடன் சென்று வளைத்தார். வெறும் ஐந்தே ஆண்டுகளில் 65 கோடி ரூபாய் சம்பாதித்த இவர், இப்போது விசாரணையில் இருக்கிறார்.

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

தெல்மா ரைட்

இவரின் கணவர் ஜாக்கி ரைட், அமெரிக்காவின் பிரபலமான போதை கடத்தல் மன்னன். 1986-ம் ஆண்டு ஜாக்கி கொல்லப்பட, அந்த இடத்துக்கு வந்தார் தெல்மா. அப்போதே ஒரு மாதத்தில் 25 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு அமெரிக்க நகரங்களில் இவரின் கடத்தல் நெட்வொர்க் விரிந்திருந்தது. 91-ம் ஆண்டு போட்டி தாதாக் குழு ஒன்றுடனான துப்பாக்கிச் சண்டையில் நூலிழையில் உயிர் தப்பினார். தன் ஒரே மகனுக்காக அந்த நிமிடத்திலிருந்து கடத்தலையும் தாதாயிஸத்தையும் துறந்தார். இவர், இப்போது புகழ்பெற்ற எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். குடும்பப் பிரச்னைகளுடன் வரும் பெண்களுக்கு கவுன்சலிங்கும் தருகிறார். ‘‘யாரையும் கொலை செய்யலாம், கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம். தாதா வாழ்க்கையில் இதை வெற்றியாக நினைக்க முடியாது. தாதாக்கள் முடிவில் கொல்லப்படுவார்கள்; அல்லது சிறையில் இருப்பார்கள். இது எப்படி வெற்றியாகும்?’’ என அர்த்தத்துடன் கேட்கிறார் இவர்.  

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

ரஃபேலா டி ஆல்டீரியோ

ஃபெராரி காரில் தங்கத் தகட்டில் நம்பர் பிளேட் பதித்து, உலா வந்தவர். ‘காட்ஃபாதர்’ பட தாதா போன்ற இந்த இத்தாலிய ‘காட்மதர்’, நேப்பிள்ஸ் நகரின் கமோரா குரூப்பின் தலைவி. கணவர் நிகோலா கொல்லப்பட்ட பிறகு, தலைமைப் பொறுப்புக்கு வந்தார். போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, கள்ளநோட்டுப் பரிமாற்றம் என எதையும் விட்டுவைக்காத இந்த குரூப், இதுவரை செய்த கொலைகள், 4,000 இருக்குமாம். கேங்கின் வருமானம், ஆண்டுக்கு 13 லட்சம் கோடி ரூபாய். இது பல நாடுகளின் பட்ஜெட்டைவிட அதிகம். மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டுப் பிழைத்த ரஃபேலா, 2012-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ரெய்டில் கைதுசெய்யப்பட்டார்.

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!

சாண்ட்ரா ஆவிலா பெல்ட்ரான்

‘பசிபிக் ராணி’ என்று பெயர் வாங்கிய தாதா. மெக்ஸிகோ நாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவி. இவர், போலீஸாக இருந்து போதைமருந்துக் கடத்தல்காரராக மாறிய ஒரு தாதாவைத் திருமணம் செய்துகொண்டார். போட்டி கும்பலால் கணவர் கொல்லப்பட, சாண்ட்ரா இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவரும் அவரைப்போல, ஒரு தாதா போலீஸ்தான். அவரையும் போட்டி கோஷ்டி தீர்த்துக்கட்ட, தானே ஒரு தாதாவாக மாறினார். போதைப்பொருள் கடத்தல், கொலைகள் என சாண்ட்ராவின் சாம்ராஜ்ஜியம் வெற்றிகரமாகப் போனது. தன் தாதா முகத்தை வெளியுலகுக்குக் காட்டாமல், ஒரு துணிக்கடையும் நடத்திவந்தார்.

2002-ம் ஆண்டு, இவரின் மகனை ஒரு கும்பல் கடத்தி, 32 கோடி ரூபாய் கேட்டது. பணத்தை வீசிவிட்டு மகனை மீட்டு வந்தார். போலீஸ் மிரண்டுபோய் விசாரித்தபோதுதான் இவரின் தாதா வரலாறு தெரியவந்தது.

தாதா ஜூனியர்: பின்னி எடுக்கும் பெண் தாதாக்கள்!


நடிகர்... பத்திரிகை ஆசிரியர்... ஐ.ஏ.எஸ்... தாதா!


மூன்று முறை போலீஸ் என்கவுன்டரிலிருந்து தப்பியவர், வரிச்சூரான் என்ற வரிச்சூர் செல்வம். மதுரை குலுங்க குலுங்க ஆட்டம் போட்டவர். ‘திருந்தி வாழப்போகிறேன்’ எனப் போலீஸாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு, அமைதியான எரிமலையாக நடமாடிக்கொண்டிருக்கிறார். மதுரை அருகேயுள்ள வரிச்சூரைச் சேர்ந்த செல்வம், சிறுவயதிலேயே பழிக்குப்பழியாகக் கொலை செய்து சிறை சென்றவர். அதன் தொடர்ச்சியாகக் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, சீட்டிங் என்று தனது எல்லைகளை விரிவுபடுத்தினார். ஃபங்க் கட்டிங், கூலிங்கிளாஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், உடலெங்கும் ஒரு கிலோ தங்க நகைகள் என இப்போதைய சினிமா தாதாக்களின் கெட்டப் சேஞ்சுக்கு ரோல் மாடலாக அப்போதே இருந்தவர் வரிச்சூர் செல்வம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர், 2006-ல் தி.மு.க ஆட்சியின்போது செல்வாக்காக வலம் வந்தார். மதுரை முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் இவருக்கு ஆரம்ப கால நண்பர். பிறகு ஜே.கே.ரித்திஷுடனும் சேர்ந்து சுற்றினார்.

அதன்பின் போலீஸாரின் என்கவுன்டர் முயற்சியிலிருந்து தப்பினார். சில நாள்கள் மட்டும் வந்த ஒரு பத்திரிகையின் பொறுப்பாசிரியராக தன்னை அறிவித்துக்கொண்டவர், காரில் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டி மெர்சல் கொடுத்தார். அதே காரின் பின்பக்கத்தில் ரத்தம் வடிய அரிவாளையும் வரைந்து திகில் ஏற்படுத்தினார். தன் மனைவியை ஐ.ஏ.எஸ் ஆபீஸர் ஆக்கப்போவதாக அதிரடி கிளப்பினார். பின்னர், ‘உலக மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின்’ இளைஞரணித் தலைவராகி, அதிர்ச்சி கொடுத்தார்.

சினிமாவில் நடிக்கக் களமிறங்கி, கோடம்பாக்கத்தைக் கிடுகிடுக்க வைத்தார். திண்டுக்கல்லில் ஒரு விடுதியில் சில கூட்டாளிகளோடு புதிய ஆபரேஷனுக்கு பிளான் செய்து கொண்டிருக்கையில் போலீஸ் என்கவுன்டர் நடத்தியது. அதில், வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளி பலியான நிலையில், அவர் தப்பினார். அதன்பின் திருந்திவிட்டதாக அவர் அறிவித்தபோதிலும், போலீஸார் சந்தேகத்துடனேயே செல்வத்தைப் பார்க்கிறார்கள்.

- செ.சல்மான்