பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

அறிவுரை

“ரொம்ப கிட்ட உட்கார்ந்து டி.வி  பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்றது!” என மகனை அதட்டினார் செல்ஃபோனில் படம் பார்த்துக்கொண்டிருந்த அப்பா.

 - கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

அப்பாவி

​``​ஃபுல் பாட்டில் குடிக்கவேண்டிய கட்டாயம் என்ன வந்துச்சு?” என மனைவி கேட்க,  ​``பாட்டில் மூடி தொலைஞ்சுபோச்சு”​ என அப்பாவியாய் சொன்னான் அரவிந்த்.​

- ஹேமலதா

10 செகண்ட் கதைகள்

சம்பளம்

பள்ளிக் கட்டணம் கட்டாததால் மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தார், மூன்று மாதங்களாகச் சம்பளம் கிடைக்காத அந்த ஆசிரியை.

- தொண்டி முத்தூஸ்.

10 செகண்ட் கதைகள்

விமர்சனம்

​படம் பார்க்காமலேயே  அடித்து உரித்து விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார் பிரபல ஃபேஸ்புக் போராளி!

-​கே.மணிகண்டன்​

10 செகண்ட் கதைகள்

நேர்மை

``அளவெல்லாம் சரியாதான்மா இருக்கும். குறைஞ்சா எனக்கு போன் பண்ணுங்க” என்று கடைக்காரர் எழுதிக் கொடுத்திருந்த சீட்டில் வெறும் ஒன்பது எண்கள்தான் இருந்தன.

- எம்.ஜெயலஷ்மி

10 செகண்ட் கதைகள்

கடன்

எல்லாக் கடனையும் அடைத்துவிட்டான், பேங்கில் லோன் வாங்கி.

- எஸ்.கே.ஜீவா

10 செகண்ட் கதைகள்

லைக்ஸ்

​``ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. நான் எல்லோருக்கும் லைக் போடுறேன்... ஆனா எனக்கு யாரும் லைக்ஸ் போட மாட்றாங்க” என்றாள் நிவேதிதா.

-  மாறன்

10 செகண்ட் கதைகள்

ரசிகன்

“உங்க படத்தை டவுன்லோடு பண்ணி, குடும்பத்தோடு பார்ப்போம் சார்!” என்றான் நடிகருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகன்.

- கோ.பகவான்

10 செகண்ட் கதைகள்

விளம்பரம்

​‘’வாசல்ல ஒரு காரு நின்னாதான்டா பெரியாளுங்கள்லாம் சாப்பிடுறாங்கபோலன்னு கூட்டம் வரும்’’ என செட் ப்ராப்பர்ட்டியாக ஒரு காரை நிறுத்திவைத்தார் நெடுஞ்சாலை ஹோட்டல் ஓனர். ​

- ​கே.சதீஷ்

10 செகண்ட் கதைகள்

சண்டை

``அப்பா டைம் ஆயிடுச்சு... அம்மாவும் நீயும் இன்னும் சண்டை போடல'' என்றாள் சுட்டி அனிதா!​

​- கே.மணிகண்டன்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு  ரூ. 500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு